உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்!; கும்பமேளாவை நடத்தும் பெங்களூர்காரர்!

டில்லி உஷ்ஷ்ஷ்!; கும்பமேளாவை நடத்தும் பெங்களூர்காரர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரத்தில், மஹா கும்ப மேளா அமர்க்களமாக நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி செல்கின்றனர். ஆயிரக்கணக்கான சாதுக்கள், கோடிக்கணக்கில் பக்தர்கள் என, பெரிய கூட்டம் அலைமோதும் இந்த மஹா கும்பமேளா, பாதுகாப்புடன், எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற வேண்டும். இந்த ஏற்பாடுகளை கவனிப்பவர், விஜய் கிரன் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. பெங்களூர்காரரான இவர், 2009 பேட்ச் உ.பி., கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி.அத்துடன் இவர், ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்டும் கூட. உ.பி.,யின் பல பகுதிகளில் கலெக்டராகவும், வேறு பல பதவிகளிலும் இருந்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான, கோரக்பூரில் பணியாற்றியபோது, மோடி கையால் பிரதமர் விருது வாங்கியவர்.ஒவ்வொரு ஆண்டும், திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மஹா கும்பமேளாவை, 2017 மற்றும் 2019ல் நிர்வகித்தவர் விஜய் கிரன். இப்படி கும்பமேளாவை நடத்துவதில் திறமையானவர் என்பதால், 2025 மஹா கும்பமேளா அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பக்தர்களை தங்க வைக்க கூடாரம், பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதி, அதே சமயம் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் வசதிகள் என, அனைத்து விஷயங்களிலும் திட்டம் தீட்டி, இதுவரை அமைதியாக மஹா கும்பமேளாவை நிர்வகித்து வருகிறார் விஜய் கிரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Raj S
ஜன 24, 2025 03:30

அவருடைய புகை படத்தை போட்டு இருக்கலாம்... சொரியான் இல்லைனா திராவிடன் படிச்சிருக்கவே முடியாது... அதனால் இந்த பிச்சை சொரியான் போட்டது... இப்படிக்கு கோபாலபுர கொத்தடிமை ரோடு சைடு பாரதி...


Asha rajasekar
ஜன 23, 2025 23:14

நல்ல தலைமை அமைவது மக்கள் கையில் உள்ளது.


Asha rajasekar
ஜன 23, 2025 23:06

திறமையான அதிகாரிகள் அமைய மக்கள் வாக்கு அளிக்கும் முன்பு சிந்திக்க வேண்டும்


V GOPALAN
ஜன 22, 2025 08:05

நமது திருச்சி காவேரியின் நிலமையை பார்க்கும்போது நாம் வெட்கப்படவேண்டும். எண்ணற்ற ஐயப்ப பக்தர்கள், பராசக்தி பக்தர்கள் வட இந்தியா டூரிஸ்ட்கள் கார்த்திகை முதல் தை மாதம் வரை மேட்டூர் அணையில் நீர் இருந்தும் வேண்டும் என்றே கொள்ளிடத்தில் சிறிது அளவு கூட தண்ணீர் ஓட்டம் இல்லாமல் வறண்ட பாலைவனமாக வைத்திருக்கும் இந்தியா கேடுகெட்ட ஆட்சியை நினைத்தால் கண்ணீர் விடுவதை தவிர வேறு வ்ழியில்லை


Ramesh Sargam
ஜன 19, 2025 13:54

விஜய் கிரண் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


Jayachandran P
ஜன 19, 2025 12:11

சபாஷ்!


pmsamy
ஜன 19, 2025 10:45

தினமலர் உஷ்ஷ்ஷ் அசிங்கமா இருக்கு இந்த மாதிரி தலைப்பு செய்தி மாற்றுங்கள்


veera
ஜன 19, 2025 13:14

நீ பாக்கதே ....


mani
ஜன 19, 2025 08:30

திறமையான அதிகாரிகள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களை தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிங்களுக்குதான் அறிவு வேண்டும்.


VENKATASUBRAMANIAN
ஜன 19, 2025 07:50

அதுதான் மோடி திறமையை கண்டு ஊக்குவிப்பார். ஆனால் தமிழ் நாட்டில் திறமையே பணத்தில் உள்ளது.இது திராவிட மாடல்


நிக்கோல்தாம்சன்
ஜன 19, 2025 07:38

இவ்வளவு பேர் கூடும் விஷயத்தை நன்கு செய்வது உங்களின் அனுபவம் இது போன்ற அதிகாரிகள் நிறைய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை