உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வை முந்தும் நாயுடு!

டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வை முந்தும் நாயுடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: 'திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் கலப்படம். இதற்கு காரணம், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். அத்துடன், இதை விசாரிக்க ஒரு கமிட்டியும் நியமித்து உள்ளார். இன்னொரு பக்கம், துணை முதல்வர் பவன் கல்யாண், 11 நாட்கள் விரதத்தை துவக்கி உள்ளார்இந்த விவகாரம், அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகம் முழுக்க உள்ள ஏழுமலையான் பக்தர்களை நோகடித்து உள்ளது.'முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஒரு ஹிந்து விரோதி என, காட்டுவதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு உள்ளார்' என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அத்துடன், 'பா.ஜ.,வின் ஹிந்து ஓட்டுகளை ஆந்திராவில் தன் பக்கம் இழுக்கவும், இந்த விஷயம் நாயுடுவிற்கு உதவும். கூட்டணிக் கட்சியான பா.ஜ.,விற்கு, 'செக்' வைக்க, இது தான் சமயம் என்பதையும் நாயுடு புரிந்துகொண்டுள்ளார்' என்கின்றனர்.மத்தியில் பா.ஜ.,விற்கு நிபந்தனையற்ற ஆதரவை, நாயுடு அளித்து வந்தாலும், மாநிலத்தில் பா.ஜ.,வை அதிகமாக வளரவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

SRIDHAAR.R
செப் 30, 2024 07:59

இப்பதான் நாட்டை காப்பாற்றும் கட்சியூடன் நட்பு கொள்கிறார்


வைகுண்டேஸ்வரன்
செப் 29, 2024 17:36

பூந்தி செய்வதும் அவர்கள். பொரித்து எடுப்பதும் அவர்கள். நெய், முந்திரிப்பருப்பு, கற்பூரம், உலர் திராட்சை, etc இப்படி அனைத்து பொருட்களையும் புழங்குவதும், லட்டாக உருட்டுவதும் அவர்கள் தான். இந்த பொருட்கள் வந்ததும் தரம் பரிசோதித்த பிறகு தானே லட்டு செய்ய தர வேண்டும்? தரம் ஓ கே என்றால் தானே பேமெண்ட் தர வேண்டும்??


venugopal s
செப் 29, 2024 16:29

என்ன ஒரு ராஜதந்திரம்! ஒரே கல்லில் மூன்று மாங்காய்!


Sridhar
செப் 29, 2024 12:13

அடிபட்டு திருந்தியவர். அதனால மீண்டும் தப்பு பண்ணமாட்டாரு.


Saleem
செப் 29, 2024 11:20

நாயுடு பாஜகவை ஆதரிப்பதன் மூலம் நாட்டுமக்களுக்கு துரோகம் செய்கிறார்


Gunship Battle
செப் 29, 2024 23:23

நெய் தயார் பண்றது உங்க மதம் தானே. நெய் உற்பத்தி ஆலையில் வேலை செய்யும் அனைவருமே பாக்கிஸ்தான் நாட்டை சேர்த்தவர்கள் தானே.


Dharmavaan
செப் 29, 2024 08:57

பட்டது தும் என்றால் அளவுக்கு ஜெகன் ஹிம்சை செய்துவிட்டான் இனி எந்த ரிஸ்க்கையும் எடுக்கமாட்டான் நாயுடு


கிஜன்
செப் 29, 2024 06:32

பா.ஜ வளர்ச்சி என்பது தவிர்க்க இயலாதது .... ஜெகனும் நல்ல உறவில் இருக்கிறார் .... நாயுடு ஏற்கனவே ஒரு முறை முயற்சி செய்து மண்ணை கவ்வினார் .... ஜி க்கு லேசாக சந்தேகம் வந்தாலும் சரி தான் .... எனவே இந்த மடத்தனத்தை தனத்தை மீண்டும் ஒருமுறை செய்ய மாட்டார் ....


முக்கிய வீடியோ