உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பிரசாரம் செய்ய நேரம் கிடைக்குமா?

டில்லி உஷ்ஷ்ஷ்: பிரசாரம் செய்ய நேரம் கிடைக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரளாவின், வயநாடு லோக்சபா தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற ராகுல், ராஜினாமா செய்து விட்டார். அவர், ரேபரேலி தொகுதியிலும் வென்றதால் அதைத் தக்க வைத்துக் கொண்டார். இதையடுத்து, 'வயநாட்டில் நவ., 13ல் இடைத்தேர்தல் நடைபெறும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்தது. அனைவரும் எதிர்பார்த்தபடி, பிரியங்கா இங்கு முதன் முறையாக போட்டியிடுகிறார் .'வயநாட்டின் ப்ரியங்காரி' என வாழ்த்தி, வயநாட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், எந்த அளவிற்கு ராகுலும், பிரியங்காவும் இங்கு பிரசாரம் செய்வர் என, கேரள காங்கிரஸ் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர். காரணம், நவ., 13, 20களில் ஜார்க்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.ஜார்க்கண்டில் காங்., கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, 'இண்டி' கூட்டணி பலத்த பிரசாரம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல, மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றவும், கடும் பிரசாரம் தேவைப்படுகிறது. இதனால் ராகுலும், பிரியங்காவும் இந்த மாநிலங்களில் அதிகளவில் பிரசாரம் செய்ய வேண்டியிருக்கும். எனவே, வயநாட்டில் அதிக நேரம் பிரசாரம் செய்ய முடியாது; இது, காங்., தொண்டர்களை பாதித்தாலும், 'பிரசாரம் செய்யாமலேயே பிரியங்கா வெற்றி பெறுவார்' என்கின்றனர், டில்லி காங்., தலைவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சிவா அரவங்காடு நீலகிரி
அக் 21, 2024 00:29

கேரள மாநிலத்தின் மக்களுக்கு அறிவு மற்றும் படிக்க மிகவும் குறைவு. எல்லோரும் கையெழுத்து போட கற்றதனால் 1 00 சதவீதம் படித்தவர்கள் என்று கூசாமல் பொய் சொல்கிறார்கள்...


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 20, 2024 16:30

விழிப்புணர்வுடன் வாக்களிப்பவர்கள் ஒரு சிலரே ......


கிஜன்
அக் 20, 2024 09:20

கேரளா அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் .... பிரியங்கா காந்தியை தேர்ந்தெடுப்பதன் மூலம் ..அதை நிரூபிப்பார்கள் ... வெற்றி சதவீதம் ...வாரணாசியைவிட அதிகம் இருக்க வேண்டும் ...


Shekar
அக் 20, 2024 09:41

நக்கல்யா உனக்கு..... படித்தவர்கள்ன்னு சொல்லிட்டு பிரியங்கா காந்தியை தேர்ந்தெடுப்பர் அப்படின்னு சிரிக்காம சொல்லிட்டியே.


ஆரூர் ரங்
அக் 20, 2024 10:24

Shekar , அவர் குறிப்பிட்டது மதராசாவில் மட்டும் படித்தவர்கள் அதிகமுள்ளன்னு .


Kumar Kumzi
அக் 20, 2024 13:34

மூர்க்க காட்டேரிகள் கண்ணை மூடிக்கொண்டு கொங்கிரஸ்க்கு போடுவானுங்கனு சொல்லு


SUBBU,MADURAI
அக் 20, 2024 14:50

சோனியாவின் குடும்பத்தை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனம்


A Viswanathan
அக் 20, 2024 08:35

இவர் பிரச்சாரத்திற்கு வரமாட்டார் ஆனால் அவரை வெற்றிபெற செய்ய லேண்டும்.இது தான் காங்கிரஸின் எண்ணம்.மக்களுக்கு சேவை செய்வதற்கு அல்ல அவரது குடும்பம் பதவி சுகம் பெற வேண்டும்.வயநாட்டு வாக்காளர்களே சிந்தித்து செயலாற்றுங்கள்.


VENKATASUBRAMANIAN
அக் 20, 2024 08:26

கேரள மக்கள் உண்மையிலேயே புத்தி இருந்தால் நன்றாக யோசித்து ஓட்டு போட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை