உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: யார் அந்த அமைச்சர்?

டில்லி உஷ்ஷ்ஷ்: யார் அந்த அமைச்சர்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழக அரசியல் குடும்பத்தில், அண்ணன் --- தம்பிக்கு இடையே உள்ள பிரச்னை, இப்போது சந்திக்கு வந்துவிட்டது. இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதும், டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 'தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த சொத்து பிரச்னை, தி.மு.க.,வை பாதிக்குமா?' என்ற கேள்வி, டில்லி அரசியல்வாதிகள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன.இதற்கிடையே வேறொரு விஷயமும் டில்லியில் பேசப்படுகிறது. ஒரு சீனியர் தமிழக அமைச்சர், டில்லியில் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே நட்பாக இருப்பவர்; எப்போது டில்லி வந்தாலும், நண்பர்களை சந்திக்காமல் சென்னை திரும்பமாட்டார்; தன் நண்பர்களுக்கு அடிக்கடி, 'வாட்ஸாப்' மெசேஜ் அனுப்பி, தொடர்பில் இருப்பவர்.இந்த சகோதர மோதல் செய்தி வெளியான உடனேயே, தன் டில்லி நண்பருக்கு, 'வாட்ஸாப்'பில் தகவல் அனுப்பினாராம் அமைச்சர். இந்த செய்தியைக் குறிப்பிட்டு, இரண்டே வார்த்தைகள்தான் அந்த மெசேஜில் இருந்ததாம். 'ஹா... ஹா...' என ஆங்கிலத்தில், குறிப்பிட்டிருந்தாராம். 'எதைச் சொல்ல வருகிறார் அமைச்சர்?' என, யாருக்கு அந்த மெசேஜ் வந்ததோ அவர் குழம்பிவிட்டாராம்.இத்துடன், இன்னொரு மெசேஜும் அனுப்பினாராம் அமைச்சர். ஏற்கனவே தன் பேச்சால், கட்சி தலைமையை அதிர வைத்த அந்த அமைச்சர், தீவிர அரசியலிலிருந்து தான் விலகப் போவதாகவும் சொல்லி உள்ளாராம். 'யார் அந்த அமைச்சர்? அவர் யாருக்கு மெசேஜ் அனுப்பினார்?' என, டில்லி அரசியல் வட்டாரங்கள் புலனாய்வு செய்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ravi Kulasekaran
ஜூன் 23, 2025 10:32

திகார் சிறையில் இடம் இருக்கா


Yasararafath
ஜூன் 22, 2025 16:39

சன் டிவி தடை விதிக்க வாய்ப்பு இருக்கா


G Raghukumar
ஜூன் 22, 2025 14:14

PTR


rengaraju sourirajalu
ஜூன் 22, 2025 11:16

ஹா... ஹா...


Balasubramanian
ஜூன் 22, 2025 10:31

ஹ ஹா! இந்த பூசலுக்கு காரணமான சன் டிவி ஒளிபரப்பை நிறுத்தி விட்டால் எல்லாம் சரியாகி விடும்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! நிதி வம்சத்தினரின் தேர்தல் பிரச்சாரம் முடக்கப்படும் !


Muralidharan S
ஜூன் 22, 2025 09:42

அசுரர்கள் அடித்துக்கொண்டு ஒழிந்தால் நாட்டுக்கு / நாட்டு மக்களுக்கு நன்மையே..


pmsamy
ஜூன் 22, 2025 07:16

தமிழ் தெரியாத சில்லறை புண்ணாக்கு பசங்க தான் உஷ் ஷ் ஷ் போடுவாங்க


raj
ஜூன் 22, 2025 07:02

PTR


jss
ஜூன் 22, 2025 06:54

pTR?.ஏதாவது நடந்து அதனால் திமுகவில் உட்கட்சி புரச்சினை வலத்து கட்சி உடைந்தால் கட்சிக்கு எனது அநுதாபங்கள். ஆனால் பெர்சனலாக மிக்க மகழ்ச்சி


subramanian
ஜூன் 22, 2025 06:54

அமலாக்க துறை, சிபிஐ யை ஏமாற்ற போடும் நாடகம்


முக்கிய வீடியோ