உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பக்தி பரவசத்தில் அமித் ஷா

டில்லி உஷ்ஷ்ஷ்: பக்தி பரவசத்தில் அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வட மாநிலங்களில் உள்ள, பெரும்பாலானோர் பக்தியில் அதிக கவனம் செலுத்தி வருபவர்கள்; ராமர் மீது அதிக பக்தி உடையவர்கள். குறிப்பாக, ராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தை படிப்பவர்கள்.அத்துடன், அனுமன் சாலிசாவையும் படிப்பர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், சுந்தர காண்டம் படித்து வருகிறார்.டில்லியில் உள்ள அமித் ஷாவின் பங்களாவில் பூஜை அறை உள்ளது; அவர், தினமும் பூஜை செய்த பின்தான், வேலையைத் துவங்குவார். காசியிலிருந்து மூன்று பண்டிதர்களும், காஞ்சிபுரத்திலிருந்து இருவரும் வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும், அமித் ஷாவின் பூஜை அறையில் தினமும் சுந்தர காண்டம் படித்து வருகின்றனர்.சமஸ்கிருதத்தில் உள்ள சுந்தர காண்டம் குறித்து, இவர்களிடம் ஹிந்தியில் விளக்கங்களை கேட்டு அறிந்து கொள்கிறார். நாள் முழுதும் இந்த பூஜை அறையில் சுந்தர காண்டமும், அனுமன் சாலிசாவும் ஒலிக்கிறதாம்.ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தின்போதும், சுந்தர காண்டம் மற்றும் அனுமன் சாலிசாவை படிப்பதை நிறுத்தவில்லையாம் அமித் ஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
நவ 24, 2024 18:12

செய்த பாவம் தீருதடா சிவகுரு நாதா!


RAMA
நவ 24, 2024 11:54

அவரே படிக்கிராரா? அல்லது வேத விற்பன்னர்கள் படிக்கிறார்களா. மற்றவர்கள் படித்தால் இவருக்கு எந்த பலனும் கிடையாது.


ஆரூர் ரங்
நவ 24, 2024 12:40

ஆலயங்களில் அர்ச்சகர்கள் உங்கள் சார்பாகத்தான் அர்ச்சனை செய்கிறார்கள். பலன் கிடைக்காமல் போய் விட்டதா?


அறாஜ்
நவ 24, 2024 11:52

பணப் பெரிச்சாளிகளுக்கு என்ன கவலை. பணம் பத்தும் செய்யும். காசியில் இருந்தும் ஆட்களை வரவழைக்கலாம் காஞ்சியில் இருந்துmழை வரவைக்கலாம் ராஞ்சியில் இருந்தும் வரவழைக்கலாம். ஊதாக்குறைக்கு அதிகாரம் வேறு கையில் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை