உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: தி.மு.க.,- கம்யூ., கூட்டணி தொடருமா?

டில்லி உஷ்ஷ்ஷ்: தி.மு.க.,- கம்யூ., கூட்டணி தொடருமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் 2ம் தேதி முதல், 6ம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.பா.ஜ.,வை எதிர்க்க என்னென்ன உத்திகளை கையாளலாம், தேர்தலில் இடதுசாரிகளின் தனித்துவம், மாநில அரசின் உரிமைகள், அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்துவது என, பல விஷயங்கள் இந்த மாநாட்டில் அலசப்பட உள்ளன.கட்சி பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி காலமானதால், இடைக்கால தலைவராக பிரகாஷ் காரத் உள்ளார். மதுரை மாநாட்டில் புதிய தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார். கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபியின் பெயர் அடிபடுகிறது; இவர், மாநில அமைச்சர், எம்.பி., என, பல பதவிகளை வகித்துள்ளார்.'மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கும் ஒரு முக்கிய பதவி கிடைக்கும். ஆனால், இவருக்கு எதிராக பல புகார்கள் உள்ளன' என்கின்றனர் கட்சியினர்.'தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டணி குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்' என சொல்லப்படுகிறது. தி.மு.க., - -இடதுசாரி உறவு அவ்வளவாக சரியில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி தொடருமா அல்லது விஜய் பக்கம் போவதா, அ.தி.மு.க.,வுடன்- கூட்டணி அமைக்கலாமா என்றும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Chinnamanibalan
மார் 23, 2025 17:41

எத்தனை காலம்தான், ஓரிரு சீட்டுக்காகவும், பல கோடி நோட்டுக்காகவும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து வாழ முடியும்!


எஸ் எஸ்
மார் 23, 2025 16:04

தனியாக நின்றால் டெபாசிட் காலியாகும் கட்சி!!


venugopal s
மார் 23, 2025 12:27

திமுகவுடனான கூட்டணி முறிந்தால் நஷ்டம் திமுகவுக்கு அல்ல, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தான்!


Haja Kuthubdeen
மார் 23, 2025 15:09

திமுக கூட்டணி ட்சிகளில் தயவினால்தான் பல தேர்தல்களிலும் வென்று வருகிறது என்பது அனைவருமே அறிந்த ஒன்று...திமுக விற்கு நஸ்டமில்லை என்று நினைக்க வேண்டாம்.


jss
மார் 23, 2025 10:28

வாய்ப்பு பறிபோகிறதா?


kr
மார் 23, 2025 08:14

This time, they can float an open tender for alliance and form an alliance with the highest bidder.


SRIDHAAR.R
மார் 23, 2025 07:22

துணிவுடன் தனியாக நின்று மக்களை சந்தியுங்கள் உங்க பலம் என்ன என்று


ramani
மார் 23, 2025 06:11

அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க


ராமகிருஷ்ணன்
மார் 23, 2025 05:58

திமுகவினரின் அராஜகம் அட்டூழியம் தாங்காமல் மக்கள் படும் துன்பத்தை நிறுத்த கூட்டணி உடைவது நல்லது.


ராமகிருஷ்ணன்
மார் 23, 2025 05:42

திமுகவினரின் அராஜகம் அட்டூழியம் தாங்காமல் மக்கள் படும் துன்பத்தை நிறுத்த கூட்டணி உடைவது நல்லது.


புதிய வீடியோ