| ADDED : ஆக 11, 2024 03:54 AM
புதுடில்லி: இந்தியாவின் பொருளாதாரத்தை கண்காணிப்பது, ரிசர்வ் வங்கி. இதன் கவர்னர் பதவி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது கவர்னராக உள்ள, சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் இந்தாண்டு டிசம்பரில் முடிவடைகிறது. இவர், ஒடிசாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழக ஐ.ஏ.எஸ்., கேடரைச் சார்ந்தவர்.கடந்த, 2018ல் இவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமித்தார், பிரதமர் மோடி. மூன்றாண்டு பதவிக்காலத்திற்கு பின், மீண்டும் 2021ல், மூன்றாண்டு பதவி நீட்டிக்கப்பட்டது. இப்போதே, அடுத்த கவர்னர் யார் என்பதை மத்திய அரசு முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.அப்போது தான், சக்திகாந்த தாஸ் பதவி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே, புதிய கவர்னர், சிறப்பு அதிகாரியாக பதவியேற்று, கவர்னர் பதவியின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வார்.இதற்கான பட்டியலை பிரதமர் அலுவலகம் தயாரித்து வருகிறதாம்.