உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பழனி பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் ஜனநாயக வாலிபர் சங்க மாநாடா?

பழனி பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் ஜனநாயக வாலிபர் சங்க மாநாடா?

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பின் ஒன்றிய மாநாடு நடந்தது. இதில், எம்.பி., சச்சிதானந்தம் கலந்து கொண்டார். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது:

பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் செல்லும் போது ஓய்வு எடுத்துச் செல்ல, அவர்களின் காணிக்கை பணத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் 'மதம்' என்றால் 'அபின்' என்ற கொள்கை உடைய கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் கிளை அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் நடத்த, எந்த அடிப்படையில் அறநிலையத் துறை, பழனி கோவில் தேவஸ்தானம் அனுமதி வழங்கியது. இதேபோல், பிற கட்சிகள் கூட்டம் நடத்திட அனுமதி வழங்குவரா? சட்டவிரோதமாக அனுமதி அளித்த அதிகாரிகள் மீது அறநிலையத்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி, உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து தக்க நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துவோம் என்றார்.விசுவ ஹிந்து பரிஷத் திருக்கோவில், திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: பக்தர்கள், நன்கொடையாளர்களின் பணத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில், அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி அளித்தது தவறு. ஆளும் தி.மு.க., அரசுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய கட்சிகள், பக்தர்கள் ஓய்வு எடுக்க எடுக்கும் மண்டபங்களை பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விசாரிக்கிறேன்!

ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தது தொடர்பாக, திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் கேட்டபோது ''கூட்டம் நடந்த இடம் அறநிலையத்துறை சார்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து விசாரிக்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜூலை 17, 2025 21:07

ஹிந்துக்களை சீண்டிப்பார்ப்பதே இவர்களின் வேலையாகிவிட்டது. தைரியமிருந்தால் ஹிந்து மதத்தை விட்டு, வேற்று மதத்தினரை இப்படி சீண்டிப்பார்க்கட்டும். அப்புறம் தெரியும்.


தமிழன்
ஜூலை 17, 2025 09:25

சும்மா கண்டனம் தெரிவித்தால் என்ன ஆக போகிறது.. கட்சியை தடை செய்ய சொல்லுங்க.. தேர்தலில் போட்டியிடும் கட்சி என்றால் கூட அடுத்த 50 வருடத்திற்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய சொல்லுங்க.. கண்டனம் தெரிவித்தால் துடைத்து விட்டு மீண்டும் இதையே செய்வார்கள். இன்னுமா இவர்களை நம்பிக் கொண்டு இருக்கிறது தமிழகம். தாமரையே தமிழகத்திற்கு சுதந்திரம் கொண்டு வா..


தமிழன்
ஜூலை 17, 2025 09:23

அட போங்க சார்.. கோவிலுக்கு எடுத்து யாரும் காவடியிலேயே கடைசி வர்ணம் பூசி எடுத்துக்கிட்டு வராங்க.. இத்தனைக்கும் அவுங்க கடவுள் இல்லா கொள்கையை சேர்ந்தவங்க என்றால் வியப்பாக தானே இருக்கும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2025 04:45

காசு கொடுத்தா என்னவேனாலும் செய்யும் பகுத்தறிவு வாதிகளை கொண்ட நாடு தமிழ்நாடு என்றால் அடிக்கவருவங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை