உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவில் உள்ள இடங்களில் தர்மம் தானாக வளரும்: விஜயேந்திரர்

கோவில் உள்ள இடங்களில் தர்மம் தானாக வளரும்: விஜயேந்திரர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சங்கரமடத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், 44வது கிருஷ்ண விஜயதுர்கா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுரவுத சுமார்த் வித்வத் மஹா சபை, கடந்த, 13ம் தேதி முதல் நேற்று வரை மூன்று நாட்கள் நடந்தது.இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, 200 மாணவர்களுக்கு ருக்வேதம், சுக்ல யஜுர்வேதம், சாமவேதம், அதர்வவேதம் போன்றவற்றில் வெவ்வேறு பிரிவுகளில் தேர்வு வைக்கப்பட்டது. தேர்வில் ஒன்பது பேர் சாமவேதத்திலும், 17 அதர்வவேதத்திலும், பாஞ்சராத்திரத்தில், 37 பேரும், யஜுர்வேத சுமார்த்தத்தில், 72 பேரும் பட்டம் பெற்றனர். அவர்களுக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பட்டங்கள் வழங்கி பேசியதாவது: ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு கோவில் கட்டப்பட வேண்டும். கோவில் இருக்கும் இடங்களில், தர்மம் தானாகவே பரவுகிறது. உடல், மனம் உறுதியுடன் இருக்க வேண்டும். தியானத்திற்கும் உபவாசத்திற்கும், வலிமையான உடல் அவசியம். தர்ம பாதுகாப்பே தேச பாதுகாப்பு. விவசாயம், பசுமாடு வளர்ப்பு மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். எனவே, ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து துளசி செடிகளை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிக்க வேண்டும். வேத ரட்சையே தர்ம ரட்சை.இவ்வாறு அருளாசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
டிச 16, 2024 20:23

எங்க ஊரில் கோவிலைச் சுத்தி கழிப்பறை கட்டி அதில் தண்ணி வராம கழிவு நாத்தம் தான் வளருது. 10, 15 மடங்கள் இருந்தாலும் அங்கே சோறுதான் முக்கியம் சுகாராரத்துக்கு துரும்பெடுத்து போடமாட்டாங்க.


Sivagiri
டிச 16, 2024 14:48

நாடு முழுவதும் , புதுசு புதுசா , பிளாட் போட்டு , ஏரியாக்கள் டெவெலப் ஆக்கிக்கிட்டு இருக்கு , எல்லா ஊர்களும் , விரிவடைஞ்சிக்கிட்டே போகுது , முன்பு போல ஊரின் மத்தியில் உள்ள கோவில்களுக்கு எல்லோரும் தினமும் அல்ல - வாரம் ஒருமுறை வருவது கூட முடியாத நிலை - - ஏரியாக்கள் புதுசா பிளாட்டுகள் வரும் போதே ஆங்காங்கே , ஒரு பிளாட் ரெண்டு பிளாட் , மடாதிபதிகள் , ஆதீனங்கள் , வாங்கி , பக்தர்கள் பங்களிப்போடு , புதிய கோவில்களை கட்டிவைக்க வேண்டியது அவசியம் . . . ஆனால் அதே நேரம் , கன்வெர்ட்டிங் க்ரூப்புகள் ஸ்பீடா நுழைந்து விடுகிறார்கள் , வீடுகளிலேயே ஜெபகூடங்கள் என்ற பெயரில் கன்வெர்ட்டிங் வேலை ஜரூராக நடக்கிறது , அந்த ஏரியாக்களில் ஒரு கிறிஸ்டின் கூட இல்லாவிட்டாலும் , கோவில் கட்டுவதற்கு , இடைஞ்சல் ஆகி விடுகிறார்கள் ஆரம்பித்திலேயே உஷாராகி விடுவது நல்லது . . . . .


சுதர்சன்
டிச 16, 2024 13:56

இந்துக்களே!!! இறைநம்பிக்கை வையுங்கள்.இந்துவாக இருங்கள். இந்துமதத்திற்காக உண்மையாக போராடுங்கள்.இந்து கோவில்களை பாதுகாத்திடுங்கள்


pmsamy
டிச 16, 2024 11:25

தர்மம் வளரும் நா பிச்சைக்காரங்க நிறைய இருப்பாங்களா


Anonymous
டிச 16, 2024 15:19

அதான் ஓசி ஓசியா கொடுத்து கொடுத்து உங்க தீயமுக கட்சி அவங்க ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களை பிச்சக்காரனா ஆகிட்டீங்களே? என்னமோ புதுசா கேட்கிறீங்க? தவிர இப்படி ஓசி வாங்கி வாங்கி, தர்மம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று கூட மறந்து விட்டீங்க போல, அப்ப, அதர்மம் அப்படீன்னா பிச்சை போடாம விரட்டுவது என்று உங்க அகராதியில் அர்த்தம் போலிருக்கு , தர்மம் என்பதற்கு நேர்மை, நேர்வழியில் நடப்பது, நியாய ஒழுக்கங்களை கடைபிடித்து வாழ்வது என்றும் பொருள் உண்டு, தமிழ் தெரியாம உளர வேண்டாம்.வந்திருவீங்க நக்கல் நையாண்டி செய்யுறதுக்கு.


RAAJ
டிச 16, 2024 11:04

எங்கே வளர்கிறது தினமும் எவ்வளவு அக்கிரமங்கள் நடக்கின்றன. கோயில் உள்ள ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜ நரசிம்மனை கைது செய்தது தர்மமா.


கிஜன்
டிச 16, 2024 10:12

இந்துமதம் அப்படியே இருக்கிறது. நான்கு சுவரை விட்டு வெளியில் வாருங்கள்..


Sampath Kumar
டிச 16, 2024 09:36

தர்மம் வளருமா? அது எப்படி


முக்கிய வீடியோ