உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உயிர் பயத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே? அதிருப்தியில் வேளாண் பல்கலை மாணவர்கள்

உயிர் பயத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே? அதிருப்தியில் வேளாண் பல்கலை மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: மத்திய அரசின் டிஜிட்டல் பயிர் சர்வே திட்டத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக கூறி மாணவர்கள் வேளாண் பல்கலை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் வகையிலும், நிலத்தின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் தொகுத்து டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில் தேசிய அளவில் வேளாண் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், 'டிஜிட்டல் பயிர் சர்வே' பணிகள் நடந்துவருகின்றன.வருவாய் துறையினர் மற்றும் வேளாண் துறையினர் மேற்கொள்ளவேண்டிய பணிகள், இறுதிகட்டத்தில் வேளாண் பல்கலை மாணவர்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. கடந்த, 4ம் தேதி முதல் மாணவர்கள் அனைவரும் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, சர்வே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை சர்வே பணியின் போது பாம்பு கடித்தும், ஒரு மாணவி குளவி கொட்டியதாலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது பெற்றோர் தரப்பில் கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் கூறுகையில், 'சர்வே பணிக்கு காலையில், 7:00 மணிக்கு கிளம்பும் மகள் மாலையில், 8:30க்கு மேல் வீட்டிற்கு வருகிறார். உடல் நிலை முடியாத சூழலிலும் வர கட்டாயப்படுத்துகின்றனர். எவ்வித பாதுகாப்பும் இல்லை. தற்போது, மாணவிகளை விஷப்பூச்சி கடித்துள்ளது. இப்பணியில் மாணவிகளை அனுப்பக்கூடாது. போகவேண்டாம் என நான் கூறினாலும், இறுதியாண்டு மதிப்பெண்களில் கைவைத்துவிடுவார்கள் என்று கூறுகிறாள்,' என்றார்.மாணவர்கள் சிலர் கூறுகையில்,'எங்கள் வகுப்பில் மாணவர்களை குழுவாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வருகிறோம். அங்கு சென்றதும், ஒருவர், இருவர் என பிரிந்து, விவசாய நிலங்கள், வீடுகளில் தகவல் திரட்டுகிறோம், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் நெடுந்துாரம் நடக்கவேண்டியுள்ளது. வனவிலங்கு அச்சமும் உள்ளது. பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் சூழல் உள்ளது. மாதவிடாய் நாட்கள் உள்ள மாணவிகள் சிரமப்படுகின்றனர். 'எங்களிடம் ஒரு சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ளனர்; மொபைல் போனுடன் குறிப்பிட்ட நிலத்தில் சென்றால் மட்டுமே தகவல்கள் அப்டேட் செய்ய இயலும். பல இடங்கள் புதர்மண்டி உள்ளதால், அதில் சர்வர் கிடைக்காமல் புதருக்குள்ளேயே நடந்து சென்று தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது. மேலும், முக்கிய தகவல்களை அலையாமல் அப்படியே போட்டுக்கொடுங்கள்' என, வேளாண் அதிகாரிகளே சொல்கின்றனர். இப்பணியை மேற்கொள்ள எங்களால் இயலவில்லை. பல்கலை நிர்வாகத்திடம் இன்று (நேற்று) புகார் அளித்துள்ளோம்'என்றார் வேளாண் பல்கலை ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் ரவீந்தரனிடம் கேட்டபோது,''மாணவி ஒருவருக்கு பூச்சி கடித்துள்ளது; தற்போது நலமாக உள்ளார். பாம்பு கடித்ததா என்று உறுதிப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து ரத்த பரிசோதனை எடுத்ததில் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டாயப்படுத்துகின்றோம் என்பது உண்மையல்ல; இன்று கூட (நேற்று) 160 மாணவர்கள் வரவில்லை. பர்மிஷன் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Ponnusamy
நவ 17, 2024 06:50

வருவாய்த்துரை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவளர்கள் செய்ய வேண்டிய பணி அதுதானே அவர்கள் வேலை அதைச் செய்யமாட்டோம் என்று கூறுபவர்களை வேலையைவிட்டே நீக்குங்கள் சப்பளம் அதுபோக லஞ்சம் அதைவிட்டுவிட்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தவறு இந்தப் பணி செய்பவர்களை படிப்பு முடிந்தும் வேலை உறுதி கொடுப்பார்களா


Gajageswari
நவ 16, 2024 05:37

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் இதே சூழலில் தானே வேலை செய்ய போகிறார்கள்


Velanmai maanavan TNAU
நவ 15, 2024 16:51

நான் தமிழக அரசு வேளான் கல்லூரியில் படிக்கும் மாணவன். பயிர் கணக்கெடுப்பு சிறிது கடினமான வேலை தான் ஆனால் நீங்கள் சொல்வது போல் நிலத்தின் அளவு மற்றும் விவசாயி உடைய வருமானமும் மற்றும் காப்பீடு குறித்து எல்லாம் கேட்கப்படவில்லை.தவறான செய்தியை பரப்ப வேண்டாம். நன்றி.வணக்கம்


Raju Konguvel Sellamuthu
நவ 15, 2024 15:21

விவசாயிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள் எத்தனை விஷக்கடிகள் அனுபவிப்பார்கள்


Senthamarai sevi Lakshmanan
நவ 15, 2024 12:12

மாணவர்களுக்கு இதுவல்ல பணி படிப்பு அது சார்ந்த களப்பணி கல்லூரி அளவில் இருக்கும் அவர்கள் அனுபவ அறிவை டிகிரி முடித்துதான் கற்றுக்கொள்வார்கள் விவசாயத்துறை அதிகாரிகள் இறந்தால் வாரிசு வேலைகிடைக்கும் எங்களின் வாரிசுகள் இல்லைனா வேறுஒரு வாரிசு கிடைக்கும? விவசாயத்துறை அதிகாரிகள் இந்த பணிக்கு என விரும்பி வந்தவர்கள் இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பணி உங்க வீட்டுல பொண்ணு பையனோ இருந்து இப்படி படிக்க அனுப்பி இந்தமாரி வேலை செய்யும் போது ஒரு பெற்றோரா உன் மனநிலை எப்படி இருக்குனு பார்க்கணும் பேசுவது எளிது செயல்முறை கடினம்


MOHAN
நவ 15, 2024 10:16

இந்த வேலையை யார் செய்ய வேண்டும். அந்த துறையை சேர்ந்தவர்கள் அல்லவா செய்ய வேண்டும். இந்த பணி மாணவ/மாணவியர்கள் செய்ய வேண்டுமா? மாணவ/மாணவிகள் காலை 6.30 மணியளவில் சென்றால் மதியம் 2.00 அளவில் உணவு இடைவேளை, அதுவும், மதிய உணவை கல்லூரியில் இருந்து எடுத்து செல்லவேண்டும். சுமார் காலை 5.00 மணிக்கு சமைத்த உணவை எப்படி கல்லூரி குழந்தைகள் சாப்பிட முடியும். மாணவிகளுக்கு கழிப்பறை செல்ல வேண்டும் என்றால் எங்கு செல்லுவார்கள்... சிந்தித்து பாருங்கள்...


V GOPALAN
நவ 15, 2024 08:47

மத்திய அரசு நமது முதல்வர் தருண் சர்வே விவரங்கலை மீண்டும் சரி பார்ப்பது நல்லது ஏனென்றால் இந்தியா அரச தப்பான மற்றும் போலியான விவரங்களை கூறி மத்திய அரசின் நிதிகளை பெறுவதில் கில்லாடிகள். உதாரணமாக விவசாய கடன் கழிப்பறை கடன் 100 நாடுகள் வேலை நிதி போலியான ஆசிரியர்களின் சம்பளம் போன்றவற்றை சமர்ப்பித்து மதிய அரசின் எல்லா பயன்களையும் ஆட்டை poduvargal


ARUN G
நவ 15, 2024 06:45

Verum books vachi padicha mattum poothuma? By vivasaiee


Anosm
நவ 15, 2024 05:30

நானும் இந்த சர்வேவில் பங்கெடுக்கும் ஒரு மாணவர் தான். நாங்கள் படிப்பதற்கு தான் கல்லூரியில் சேர்ந்தோம். வேளாண் துறை அதிகாரிகளுக்கும் வி.ஏ.ஓக்களுக்கும் இருக்கும் பிரச்சினையில் 1 ஆண்டாக முடிக்காமல் எங்களிடம் தள்ளி விட்டு விட்டார்கள். விவரம் அறியாமல் யாரும் கமென்ட் செய்ய வேணாம். அவன் அவன் கஷ்டம் அவனுக்கு.


Jay
நவ 14, 2024 18:58

மத்திய அரசின் பணிகள் எதுவும் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் குறைகளை கொட்டி அதைப்பற்றிய ஒரு எதிர்மறையை உருவாக்கி விடுவார்கள். இப்படி ஒரு கம்ப்ளைன்ட் வேற எந்த மாநிலத்திலாவது வந்ததா என்று பாருங்கள். அங்கு இருக்கும் வேளாண்மை கல்லூரி மாணவர் மாணவிகளும் இதைத்தானே செய்வார்கள்?


Anosm
நவ 15, 2024 05:31

மற்ற மாநிலங்களில் அதிகாரிகள் தான் சர்வே பணியை மேற்கொண்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை