உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு: தி.மு.க., - காங்கிரஸ் தந்திரம்?

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு: தி.மு.க., - காங்கிரஸ் தந்திரம்?

விஜயதசமியை ஒட்டி, நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சீருடை அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா என்பதால், தமிழகத்தில் 58 இடங்களில் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் அக்., 6ம் தேதி நடத்த, அந்தந்த மாவட்ட போலீசிடம் அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ்., விண்ணப்பித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும், தமிழக போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. அதனால் அனுமதி பெற, நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ்., நாடியுள்ளது.தமிழக காவல் துறை அனுமதி மறுத்தபோதும், உச்ச நீதிமன்றம் வரை சென்று, கடந்த இரண்டு ஆண்டுகளும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்தியது. அதனால், இந்த ஆண்டு அணிவகுப்புக்கு அனுமதி கொடுக்காமல் இருக்க, தி.மு.க., அரசு காய் நகர்த்தி வருவதாக,ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் கூறப்படுகிறது.அணிவகுப்புக்கு ஆர்.எஸ்.எஸ்., அனுமதி கோரியுள்ள அதே அக்., 6-ல், காந்தி ஜெயந்தியையொட்டி மாவட்ட, வட்டார அளவில் பாதயாத்திரை நடத்த, காங்கிரஸ் சார்பில் அனுமதி கோர திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு தொலைபேசி வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவ்வாறு காங்கிரஸ் அனுமதி கேட்டால் சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, காங்கிரஸ் பாதயாத்திரை இரண்டுக்கும் அனுமதி மறுத்து விடலாம் என, தி.மு.க., திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறுக்கு புத்தி எடுபடாது!

தமிழக அரசும், காவல் துறையும் எவ்வளவு மோசமாக, அருவருப்பாக சிந்திப்பர் என்பதற்கு, இப்படியொரு திட்டமிடலும் நல்ல உதாரணம். நேர்மையாக அரசியல் செய்பவர்களோ, ஆட்சியில் இருப்பவர்களோ இப்படியெல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை. இப்படியெல்லாம் செய்வதால், ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்யலாம் என குறுக்கு புத்தியோடு செயல்பட்டால், அதற்கெல்லாம் அஞ்சி ஒடுங்க மாடடோம். சட்டரீதியாக இந்தாண்டும் நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம்.

- அஸ்வத்தாமன் மாநில செயலர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Balamurugan nithyanandam
அக் 12, 2024 10:28

செய்திகளை படியுங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் திராவிட விட சிந்தனை இப்படி தான் பேச சொல்லும்


வைகுண்டேஸ்வரன்
அக் 07, 2024 09:03

பிற மாநிலங்கள் எதிலும் இந்த ஆர் எஸ் எஸ், விஜயதசமிஅணிவகுப்பு நடத்தவில்லை. ஏன்???


Sathyanarayanan Sathyasekaren
அக் 05, 2024 07:27

சொரணை இல்லாத தமிழக இந்துக்கள் இந்த திருட்டு திராவிட அந்நிய மத அடிமை கட்சிகளுக்கும், அதன் கொள்ளை கூட்டத்திற்கும் வோட்டை போடும் வரை இது தொடரும்.


Sudarsan Ragavendran
செப் 27, 2024 18:02

Who told you thst no one will participate in RSS Procession? Right. How come you people know and accept the good things? . You people know only tasmac, rs 200.


RAAJ68
செப் 27, 2024 14:15

டெல்லி பாஜக தலைமை சரியில்லை ஸ்டாலின் சொல்வதை தான் டெல்லி கேட்கிறது ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக ஜால்ரா அடிக்கிறது பயப்படுகிறது அதனால் இப்படித்தான் இருக்கும்


N Sasikumar Yadhav
செப் 27, 2024 13:20

தேசபக்தர்களான ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் பேரணி நடத்தினால் தேசதுரோகிகளான புள்ளிராஜா இன்டீ கூட்டணி கட்சியினருக்கு எரிச்சல் வரத்தானே செய்யும்


N Sasikumar Yadhav
செப் 27, 2024 13:15

மிகமிக கேவலமான ஜென்மங்கள் இந்த மானங்கெட்ட திமுக மற்றும் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க


N Sasikumar Yadhav
செப் 27, 2024 13:15

மிகமிக கேவலமான ஜென்மங்கள் இந்த மானங்கெட்ட திமுக மற்றும் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க


venugopal s
செப் 27, 2024 11:43

தமிழகத்தில் யாருமே சேராத, யாருமே வராத ஆர் எஸ் எஸ் அணிவகுப்பை வீம்புக்காக நடத்துகின்றனர்!


Sathyanarayanan Sathyasekaren
அக் 05, 2024 07:24

சொரணை இல்லாத கொத்தடிமை வேணுகோபால். அப்பறம் என்ன ம....கு உன்னோட திருட்டு திராவிட அரசு பயப்படுது? ஓஹோஹ் வாட்டிகன் முதலாளி கோபித்துக்கொள்வர் ?


Gurusamy
செப் 27, 2024 09:43

இவ்வளவு நாட்கள் காங்கிரஸ் தூங்கியது திராவிட மாடலுக்கு தெரியாதா? .