உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குப்பைக்கும் வரி போட்டது தி.மு.க., அரசு: பழனிசாமி

குப்பைக்கும் வரி போட்டது தி.மு.க., அரசு: பழனிசாமி

மணப்பாறை: தமிழகம் முழுதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று மணப்பாறையில் பேசியதாவது: விவசாயிகள் எந்நேரமும் நீர் இறைக்கும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக, மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் அ.தி.மு.க., ஆட்சியில் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்று ஷிப்ட் முறையில் விவசாயிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. 'கிணற்றை காணோம்' என்று சொல்லி போகும் இடம் எல்லாம் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். கிணற்றை காணோம் என்று சொல்வதற்கு பதிலாக, நேரடியாக தி.மு.க.,வையே காணோம் என்று சொல்லி பதாகைகள் வைத்திருக்கலாம். தி.மு.க., அமைச்சர்கள், இனிமேல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். அதனால், மிச்சமிருக்கும் ஏழு மாதங்களில் முடிந்த வரை கொள்ளையடித்து, பணத்தை சேகரிக்க வேண்டும் என ஆளாய் பறக்கின்றனர். தமிழக அரசில், கொள்ளையோ கொள்ளை நடக்கிறது. தற்போதைய தி.மு.க., ஆட்சியில் 67 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தொழில் செய்ய முடியாமல் தொழில் சாலைகள் மூடப்படுகின்றன. இத்தனை பெரிய அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டப் பின்பும், மின் வாரியம் கடன் சுமையில் தத்தளிக்கிறது. காரணம், தவறான நிர்வாகம் தான். குடி நீர், சொத்து வரி என எல்லாவற்றையும் உயர்த்திய தி.மு.க., அரசு, குப்பைக்கும் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. அரசுப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் 'ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துகின்றனரா என பார்க்க வேண்டும்' என்று. இதற்காகவா, பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புகிறோம்? படிக்கும் மாணவர்களை அரசு கொச்சைப்படுத்தி உள்ளது. தமிழகம் போதை மாநிலமாக மாறி விட்டது என்பதை அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் உதயநிதி, போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின், உறுதிமொழி எடுத்து என்ன பயன்? 31 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஜாதி, மத சண்டைகள் இல்லை. தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sivan
ஆக 26, 2025 21:01

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்தால் அவர்கள் குப்பை வரியை 100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய்க்கு உயர்த்தி விட்டார்கள். அவர்களை என்ன செய்வது.


முருகன்
ஆக 26, 2025 20:23

ஒவ்வொரு மாவட்டத்திலும் ரோடு ஷோ என சாலைகளையும் மக்களையும் மறித்து கொண்டு இவர் செய்யும் அலப்பறை அரசியல் கட்சிகள் மக்கள் பயன்படுத்தும் வழித்தடங்களில் கூட்டம் நடத்த கூடாது என்று நீதிமன்றம் அனைத்து கட்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும். இவர் கட்சியை தான் முதலில் மீட்க வேண்டும் மக்களை இல்லை


T.sthivinayagam
ஆக 26, 2025 19:31

பா.ஜ., அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் மீண்டும் வறட்சி நிவாரணம் தான் கிடைக்குமாம் கூட்டணி முதல்வர் வேட்பாளர் தான் சொல்கிறார்


Santhakumar Srinivasalu
ஆக 26, 2025 17:54

இவர் ஆட்சியில் தான் வீட்டு வரி தண்ணீர் வரி அதிகரிப்பு, குப்பை வரி எல்லாம் கொண்டு வந்து சட்டமன்ற தேர்தல் வந்ததால் வாபஸ் பெற்றதை ஜனங்கள் மறக்க வில்லை.


BHARATH
ஆக 26, 2025 07:59

அவர் செஞ்சது கரெக்ட்தான். பகலில் வெயில் தற்குறி கழகம் மாதிரி யாரும் வெயில மயக்கம் போட்டு விழவில்லை


பேசும் தமிழன்
ஆக 26, 2025 07:50

டாஸ்மாக் சாராய கடைகளை அரசே திறந்து வைத்து விட்டு.. மாணவர்கள் குடித்து விட்டு வருகிறார்களா என்பதை சோதனை செய்யுங்கள் என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அதிமுக ஆட்சியில் சாராய கடைகளை மூட வேண்டும் என்று எத்தனை போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தினீர்கள்.. ஆளில்லாத வீட்டுக்கு முன்பு.. யாருக்கும் தெரியாமல் கோலம் போட்டு விட்டு சென்றீர்கள்.. அதெல்லாம் சும்மா நடிப்பா ???


அப்பாவி
ஆக 26, 2025 07:19

ராத்திரி பத்துமணிக்கு வந்து நூத்துக்கணக்கில் வாணவேடிக்கை ஏவி மக்களின் தூக்கத்தை கெடுத்து பிரச்சாரம் நடத்துராரு. பொழுதோட வந்துட்டு போய்த்தொலைய வேண்டியது தானே...


பேசும் தமிழன்
ஆக 26, 2025 07:53

விடியல் தலைவர் மீது உங்களுக்கு என்ன கோபம்.... 200 க்கு பதில் 400 வேண்டும் என்றால் கேட்க வேண்டியது தானே ??


புதிய வீடியோ