உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்சியில் கோலோச்சும் தலைகளுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கிடுக்கி

கட்சியில் கோலோச்சும் தலைகளுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கிடுக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க.,வில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து, விருப்ப மனு பெறுவது இன்னும் துவங்கப்படவில்லை. அதற்குள், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளில், 'நான் தான் வேட்பாளர்' என, தற்போதே வேட்பாளர்களாக வலம் வர துவங்கியுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aeppd2jk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால் நெருக்கடி, த.வெ.க.,வால் திசை மாறும் ஓட்டுகள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த தி.மு.க., திட்டமிட்டுஉள்ளது. எனவே, இந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில், பலமான வேட்பாளர்களை நிறுத்த, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து, இதுவரை கட்சியில் ஆற்றிய பணிகள், யாரை வேட்பாளராக நிறுத்தலாம்; அந்த நபருக்கு உள்ள செல்வாக்கு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்துள்ளார். இது தவிர, உளவுப் பிரிவு போலீசார் வாயிலாகவும், வேட்பாளராக யாரை நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்ற தகவல்கள் பெறப்பட்டு உள்ளன. முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு வேண்டிய ஆய்வு நிறுவனம் வாயிலாகவும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு தொகுதிக்கு மூன்று நபர்களை, ஸ்டாலின் அடையாளம் கண்டுள்ளார். அவர்களில் யாருக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்ற விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சென்னை அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகனின் மகனும், ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நண்பருமான கார்த்தி, அண்ணா நகர் வேட்பாளராக தன்னை கூறிக் கொண்டு, தன் ஆதர வாளர்களுடன் தொகுதியில் வலம் வருகிறார். இதேபோல், பல தொகுதிகளில் தி.மு.க., வில் அதிகாரமிக்க நபர்களுக்கு வேண்டியவர்கள், தாங்கள் தான் வேட்பாளர் என கூறி வருகின்றனர். இதனால், அந்த தொகுதிகளில் உள்ள சீனியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த விபரம், ஸ்டாலின் கவனத்திற்கு சென்று உள்ளது. இதையடுத்து, அதுபோன்று வலம் வருபவர்களை அழைத்து கண்டித்துள்ளார். தலைமை அறிவிக்கும் வரை, தாங்கள் தான் வேட்பாளர் என கூறிக்கொண்டு, எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என தடை போட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rajasekar Jayaraman
ஜன 30, 2026 16:25

அவர்கள் எப்படி திருட்டு திராவிட தலைமைக்கு தலைமைக்கு கட்டுப்படுகிறார்கள் என்று நீண்ட நாள் சந்தேகம் வந்தது இப்பொழுதுதான் தெரிகிறது அனைவரும் திருடர்கள் அதனால் கைகோர்த்துக்கொண்டு நிற்கிறார்கள் ஒருவன் தப்பிக்க வழி இல்லாமல் மாட்டினாள் மற்றவர்கள் எல்லோரையும் மாட்டி விடுவான் யாம் பெற்ற இன்பம் பெருக வையகம் என்று.


ராமகிருஷ்ணன்
ஜன 30, 2026 15:15

எப்படியோ சொந்த கட்சிக்குள் போட்டி பொறாமையில் உள்குத்து, குழி பறிப்பு போன்றவர்களால் திமுக வெற்றி வாய்ப்புகள் குறைந்தால் நல்லது தானே


Balasubramanian
ஜன 30, 2026 14:01

கட்சியில் கோலோச்ச சொந்த பந்தங்களுக்கு மட்டுமே அனுமதி! மற்றவர்களுக்கு கிடுக்கி பிடி


duruvasar
ஜன 30, 2026 10:09

இந்த கிடுக்கி சேப்பாக்கம், கரூர், திருவெம்பூர் , கொளத்தூர் தொகுதிகளிலும் போடப்படுமா ? தீர விசாரித்து உண்மைநிலவரத்தை கூறவும் .


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 30, 2026 09:26

கட்சியில் கோலோச்சும் தலைக்கு கிடுக்கிப்பிடி சரி. கட்சியில் கோலோச்சும் வால் ,


Chandru
ஜன 30, 2026 07:24

ஹையோ ஹய்யோ ஒரே தமாஷ் தான்


புதிய வீடியோ