உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணா ம.தி.மு.க., பெயரில் உருவாகும் புதுக்கட்சி; வைகோவுக்கு செக் வைக்க தி.மு.க., புது திட்டம்

அண்ணா ம.தி.மு.க., பெயரில் உருவாகும் புதுக்கட்சி; வைகோவுக்கு செக் வைக்க தி.மு.க., புது திட்டம்

ம.தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்ட அதிருப்தியாளர்கள், அண்ணா ம.தி.மு.க., என்ற பெயரில் புதிய கட்சியை துவக்க திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.ம.தி.மு.க.,வில் வைகோ மகன் துரையின் அரசியல் பிரவேசத்திற்கு, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதை கண்டு கொள்ளாமல், மகனுக்கு கட்சியில் முதன்மை செயலர் பதவியை வைகோ வழங்கினார். இதனால், அதிருப்தி அடைந்த அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, 'ம.தி.மு.க.,வை தி.மு.க., வில் இணைத்து விடலாம்; இனி கட்சி தேறுவதற்கு வாய்ப்பே இல்லை' என வைகோவிற்கு, கடந்த ஆண்டில் கடிதம் எழுதிவிட்டு, கட்சியில் இருந்து விலகினார்.

போர்க்கொடி

புதிய அவைத் தலைவராக ஆடிட்டர் அர்ஜுன ராஜை, வைகோ நியமித்தார். பின்னர், வாரிசு அரசியலை எதிர்த்து, வைகோவுடன் 'பொடா'வில் சிறைக்கு சென்ற முன்னாள் இளைஞர் அணி மாநில செயலர் 'பொடா' அழகு சுந்தரம், மாவட்டச் செயலர்கள் செங்குட்டுவன், புலவர் செவ்வந்தியப்பன், முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை சந்திரசேகர் உள்ளிட்ட 17 நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கினர். அவர்கள் தி.மு.க.,வில் இணைய விரும்பி, தி.மு.க., தலைமையிடம் கடிதம் வழங்கினர். தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., இருப்பதால், அவர்களை சேர்க்காமல், கடிதத்தை காத்திருப்போர் பட்டியலில் தி.மு.க., வைத்தது. இந்நிலையில், துரைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கினால், தி.மு.க., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க., விலகி, பா.ஜ., கூட்டணியில் இணையும் என தகவல் வெளியானது.சட்டசபை தேர்தலில் கட்சி அங்கீகாரம் பெற, 12 தொகுதிகளை தி.மு.க.,விடம் பெற வேண்டும் என, ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, ம.தி.மு.க., விற்கு 'செக்' வைக்கும் வகையில், திருப்பூர் ம.தி.மு.க., மாவட்ட நிர்வாகி முத்துரத்தினத்தை தி.மு.க.,வில் சேர்த்தது.

தள்ளிவைப்பு

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த வைகோ, 'ம.தி.மு.க.,விலிருந்து வெளியேறியவர்களை தி.மு.க.,வில் சேர்க்க வேண்டாம்' என, முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கட்சியில் இணைய, கடிதம் கொடுத்த 17 பேரை சேர்க்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால், ம.தி.மு.க., விலிருந்து வெளியேற்றப்பட்ட 17 பேரும், அண்ணா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி துவக்க திட்டமிட்டுள்ளனர். அத்துடன், தமிழகம் முழுதும் ம.தி.மு.க., அதிருப்தியாளர்களை சந்தித்து, கட்சியில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில், தி.மு.க.,வை விமர்சிப்பது போல, மறைமுகமாக தன் ஆதங்கத்தை ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வெளிப்படுத்தி வருகிறார். இதனால், ம.தி.மு.க., எந்த நேரத்திலும் தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலை உருவாகலாம். அப்படியொரு சூழலில், அண்ணா ம.தி.மு.க.,விலிருக்கும் நிர்வாகிகளை, தி.மு.க.,வில் சேர்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒருவேளை, தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., தொடருமானால், தி.மு.க., கூட்டணியை ஆதரிக்கும் கட்சிகளில் ஒன்றாக, அண்ணா ம.தி.மு.க.,வை பயன்படுத்திக் கொள்ளவும் தி.மு.க., தரப்பில் புது வியூகம் வகுக்கப்பட்டு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Thiyagarajan S
ஜூலை 21, 2025 18:41

கலைஞர் திமுக இல்லையென்றால் கருணாநிதி திமுக என்று பெயர் வைத்து தனி கட்சி தொடங்குங்கப்பா.. சீக்கிரம் கோடி கோடியா பணம் கொட்டும்


Bhaskaran
ஜூலை 20, 2025 06:44

.5விழுக்காடு வாக்கு கூட இல்லாத கட்சி கட்சி


Haja Kuthubdeen
ஜூலை 19, 2025 18:43

என்னமோ மதிமுக மிகப்பெரிய ஓட்டு வங்கி உள்ள கட்சி போல பில்டப் செய்தி....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2025 10:15

மதிமுக திமுகவின் குட்டையில் ஊறிய மட்டை தான். திக மதிமுக விசிக மநீமை கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் புதிதாய் வந்துள்ள தவெக இவை யாவும் திமுக குட்டையில் ஊறும் மட்டைகள் தான். திமுகவிற்கும் இவைகளுக்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லை. மக்களை குழப்புவது தேர்தல் நேரத்தில் வாக்குகளை பிரிப்பது இவை தான் இந்த கட்சிகளின் பிரதான கொள்கை. சுதந்திரம் பெற்று எழுபத்தைந்து வருடங்கள் ஆனாலும் இந்த கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் ஆங்கிலேய அடிமைத்தனத்தை மறக்க முடியாமல் துண்டு பீடிக்காக திமுகவின் அடிமைகளாகவே வாழ்ந்து பழகி விட்டார்கள்


naranam
ஜூலை 19, 2025 06:36

அண்ணா என்ற பெயரையே அரசியலிலிருந்து ஒழித்தால்தான் தமிழகம் உருப்புடும்!


SUBBU,MADURAI
ஜூலை 19, 2025 07:42

வைகோவின் மதிமுக என்ற கட்சியே விளங்காம கெடக்கு இதுல இந்த அண்ணா மதிமுக என்ற புது கட்சியால் என்ன செய்து விட முடியும் அதனால யாருக்கு என்ன பயன்? சும்மா இதெல்லாம் வாய்க்கு பத்தாத பேச்சு!


M Ramachandran
ஜூலை 19, 2025 03:12

ஈய்யத்தை கண்டு இளிச்சதாம் பித்தளை. ஒரு திருடன் மற்றவனை திருடன் என்று குறை கூறுவானாம்.


சமீபத்திய செய்தி