உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேர்தலில் வெற்றி பெற தி.மு.க., புது வியூகம்

தேர்தலில் வெற்றி பெற தி.மு.க., புது வியூகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, 'என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற திட்டத்தின் கீழ், தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க., சார்பில், 'என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 68,463 ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தடப் பணியை மேற்கொள்ள, ஓட்டுச்சாவடி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5zlb73ez&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும் தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற, தி.மு.க., வியூகம் அமைத்துள்ளது. அதற்காக, நேற்று முதல் ஜன., 10ம் தேதி வரை, ஒரு மாத காலத்திற்கு, ஓட்டுச்சாவடி வாரியாக, தமிழகம் முழுதும் கலந்துரையாடல்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட உள்ளன. இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். மயிலாப்பூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டளிக்கும் ஓட்டுச்சாவடி, தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டத்தில், முதல்வர் பங்கேற்றார். அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், குறைந்தபட்சம் 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகளை பெற, கட்சியினர் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், தான் ஓட்டளிக்கும் ஓட்டுச் சாவடியில், 440 ஓட்டுகள் பெற, கட்சியினருக்கு இலக்கு நிர்ணயித்தார். அதன்பின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'எந்த ஷா வந்தாலென்ன; எத்தனை திட்டம் போட்டாலென்ன; டில்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகத்திற்கு வர நினைத்தால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், எங்களின் கருப்பு சிவப்பு படை, தக்க பாடம் புகட்டும். தமிழகம் என்றைக்குமே ஆணவம் பிடித்த டில்லியின் கட்டுப்பாட்டிற்கு வெளியே தான்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

திகழ் ஓவியன், AJAX ONTARIO
டிச 11, 2025 19:23

இவ்ளோ ஆணவம் என்றால்...


Mohan Mg
டிச 11, 2025 18:30

சரியா சொன்னிங்க


Sampath V
டிச 11, 2025 17:25

Stalin ஜி கலக்குங்க


என்றும் இந்தியன்
டிச 11, 2025 17:21

மேலே உள்ள போட்டோவில் மிக மிக கச்சிதமாக எழுதியுள்ளது


ram
டிச 11, 2025 16:24

திமுக தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் இருக்கார்லே.. அவர் நல்ல வெற்றி வியூகம் வகுத்து கொடுப்பாரே... மக்களோட பணம் தானே.. கொட்டிக்கொடுப்பதில் எதுவும் உங்க சொத்து குறையப்போவது இல்லேயே.


ஆரூர் ரங்
டிச 11, 2025 14:03

குறிக்கோள் என்னவோ ஆட்சியைப் பிடி, கொள்ளையடி என்பதா?


Srprd
டிச 11, 2025 13:47

Seems they are planning to do a voter list manipulation in a scientific way. They are already past masters in scientific corruption.


Sun
டிச 11, 2025 13:33

தலைவரே ஏன் அவனை அடிக்கிறீங்க? நான் என்ன எழுதச் சொன்னேன் அவன் என்ன எழுதி இருக்கான் பாரு ? அப்படி என்ன தலைவரே எழுதச் சொன்னீங்க? என் ஓட்டுச் சாவடி வெற்றி ஓட்டுச் சாவடின்னு எழுதச் சொன்னா பய புள்ள என் ஓட்டுச் சாவடி வெற்று ஓட்டுச் சாவடின்னு எழுதி வச்சிருக்கு பின்னே அடிக்காம ?


kannan sundaresan
டிச 11, 2025 12:00

திரு.ஸ்டாலின் அவர்களே, தமிழக மக்கள் விழிப் படைந்துவிட்னர். 20 தொகுதியில் ஜெப்பதே doubt .


Skywalker
டிச 11, 2025 09:19

They have lots and lots of money, they will pay people for votes, winning elections are not decided by making favourable policies but more money, very sad


சமீபத்திய செய்தி