உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சொன்ன விஷயங்களை விரைவாக செய்யுங்க: பா.ஜ., தலைமைக்கு இபிஎஸ் நெருக்கடி

சொன்ன விஷயங்களை விரைவாக செய்யுங்க: பா.ஜ., தலைமைக்கு இபிஎஸ் நெருக்கடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூட்டணி அமைத்தபோது உறுதி அளித்ததை செய்யாததால், பா.ஜ., தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, விரைவில் அதை செய்யுமாறு நெருக்கடி கொடுக்கிறார். எனவே, பீஹார் தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் முழு கவனம் செலுத்துவதாக, பா.ஜ., தரப்பில் உறுதி அளித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய அ.தி.மு.க., தனி கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டது. இதனால், பா.ஜ.,வும் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுடன் தனியாக கூட்டணி அமைத்தது. ஆனால், இரு அணிகளும் படுதோல்வியடைந்தன. வாக்குறுதிகள் தி.மு.க., கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியதால், லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனது. இதையடுத்து, கடந்த ஏப்ரலில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரு நாட்கள் சென்னையில் தங்கியிருந்து, அ.தி.மு.க., - -பா.ஜ., இடையிலான கூட்டணியை மீண்டும் புதுப்பித்தார். அப்போது நடந்த பேச்சில், பல வாக்குறுதிகள் பா.ஜ., தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டன. அவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என, பா.ஜ., தலைமை மீது அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் வருத்தத்தில் இருக்கிறார். இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் வலுவாக இருக்கும் தி.மு.க., கூட்டணியில் சேதம் ஏற்பட்டு, எதிரணி பலமாக அமைந்தால் மட்டுமே, தி.மு.க., கூட்டணியை வீழ்த்த முடியும். எனவே, மீண்டும் பா.ஜ., கூட்டணியில் இணையும் முன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அப்போது, 'தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் மேல்மட்ட நிர்வாகிகள், வகை தொகையின்றி கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் மீது, அ.தி.மு.க., மற்றும் சமூக ஆர்வலர்கள் திரட்டி வைத்துள்ள ஆவணங்களை கொண்டு, விரைவாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனால், தொண்டர்கள் வரை நிலை குலைந்து, தேர்தலுக்கு தி.மு.க.,வினரால் முழு வேகத்தில் பணியாற்ற முடியாத சூழல் ஏற்படும். 'அரசு டெண்டர்கள், பணி நியமனம் உள்ளிட்டவை வாயிலாக குவித்து வைத்திருக்கும் பணத்தைக் கொட்டி, வாக்காளர்களை விலைக்கு வாங்க, பல இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். 'வருமான வரி ரெய்டு நடத்தி, அந்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும். தேவையான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டும். 'அப்படி செய்யாவிட்டால், எவ்வித இடைஞ் சலும் இல்லாமல், சுதந்திரமாக தி.மு.க.,வினர் தேர்தல் வேலைகளை கவனிப்பர். இப்போதே, 50 சதவீத தேர்தல் வேலைகளை முடித்து, தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு கடிவாளம் போடாமல், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த முடியாது' என, பா.ஜ., தரப்பிடம் பழனிசாமி தெளிவாக கூறி விட்டார். நெருக்கடி இதையடுத்து, 'வரும் மாதங்களிலேயே தி.மு.க., மீதான அதிரடி நடவடிக்கைகள் துவங்கும். இடைவெளியின்றி தி.மு.க., தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகளை நோக்கி, மத்திய அரசு ஏஜன்சிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். நீங்கள் பிரசாரப் பணிகளை துவங்கி, தி.மு.க., அரசை விமர்சிப்பதோடு, கூட்டணிக்குள் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்' என அமித் ஷாவும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவும் கூறியிருந்தனர். அந்த அடிப்படையிலேயே தொகுதி வாரியாக மக்களை சந்தித்து, தி.மு.க., செயல்பாடுகளை பழனிசாமி விமர்சித்து வருகிறார். ஆனால், பா.ஜ., தரப்பிலிருந்து வேகமான தேர்தல் பணி எதுவும் இல்லை. மாநில தலைவர் நாகேந்திரன் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இந்நிலையில், பா.ஜ., மீதான தன் வருத்தங்களை, அமித் ஷா, நட்டா ஆகியோருக்கு கொண்டு சென்ற பழனிசாமி, பா.ஜ., தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதையடுத்து, 'பீஹார் தேர்தல் முடிந்ததும், அதே வேகத்தில் மத்திய பா.ஜ., தலைவர்கள் தமிழகம் வந்து, தி.மு.க.,வுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவர். தி.மு.க., அரசு மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் தவறுகள் மீது, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். 'விரைவில், மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழகம் வந்து, பழனிசாமியுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடுவர்' என பா.ஜ., தலைமையிடம் இருந்து அ.தி.மு.க.,வுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அ.தி.மு.க,வில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

bharathi
நவ 10, 2025 13:23

No faith with BJP anymore.


Muralidharan S
நவ 10, 2025 12:43

சசிகலா பின்னணியில் இயங்கிய இயக்கிய அதிமுகா ஒன்றும் ஊழற்ற ஆட்சி நடத்தவில்லை.. இரண்டு திராவிஷா கட்சிகளுமே தமிழநாட்டில் மாற்றி மாற்றி அதைத்தான் செய்தார்கள்..


Muralidharan S
நவ 10, 2025 12:11

மிஷனரிகள் களமிறக்கி இருக்கும் நடிகருடன் கூட்டணி வைத்துக்கொண்டு எப்படியும் பாஜாகாவை கழற்றி விடப்போகிறது அதிமுகா.. அதற்குள் பாஜக வை உபயோகப்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்துவிடலாம் என்பதுதான் திட்டமாக இருக்கும்.. மத்திய பாஜகவும் தமிழக நிலவரம் தெரியாமல், 18 சதவிகித அளவிற்கு வோட்டை திரட்டி காண்பித்த இளைஞர்களின் நம்பிக்கை நக்ஷத்திரமாக தமிழக பாஜாகாவில் இருந்த அண்ணாமலை அவர்களை தூக்கி கிடாசிவிட்டது. இந்த இன்னொரு திராவிஷத்தை நம்பி... பாஜாக இப்பொழுது என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அது திராவிஷங்களுக்கோ அல்லது நடிகனுக்கோத்தான் சாதகம்.. அண்ணாமலையை ஒதுக்கிவிட்டு, பழம் தின்னு கோட்டை போட்ட பழம்பெருச்சாளிகளை நம்பி பாஜாக, தமிழகத்தில் எந்த காலத்திலும் வளரவே முடியாது / ஜெயிக்கவே முடியாது..


Barakat Ali
நவ 10, 2025 10:02

1967 இல் விஷச்செடியாக இருந்த திமுக இன்று அசுர வளர்ச்சி அடைந்து மாபெரும் விருட்சமாக வளர்ந்துள்ளது ........


Ajrjunan
நவ 10, 2025 09:23

நீங்கள் உங்கள் கட்சியை முதலில் காப்பாறுங்கள் தலைவரெ? பி ஜெ பி சொல்லித்தான் செங்கோட்டையன் சேயல் படுகிறார் என்று அவர் வாயாலே செல்லிவிட்டார். இன்னும் பி ஜெ பி உங்களை காப்பாற்றும் என்று நம்பகிட்டிருக்கார்? சந்தானம் சொல்வதுபோல், அய்யூயோ இதுகூட தெரியாத தத்தியா இருக்காரே......


ஆரூர் ரங்
நவ 10, 2025 09:17

திமுக அழிக்கப்பட்டால் அதிமுக பிஜெபி யை சீந்தாது.


Ajrjunan
நவ 10, 2025 13:33

வாய்ப்பில்லை ராஜா... கெடுவான் கேடு நினைப்பான்.


அருண், சென்னை
நவ 10, 2025 07:19

இதற்குத்தான் திரு. ஷா ஜி EPSகூட கூட்டணியா? நயினார் வழியாக அடகு வைத்தாகிவிட்டதா?


நிக்கோல்தாம்சன்
நவ 10, 2025 07:05

எடப்பாடி அவர்களே நீங்களே ஒருவகையில் இடைஞ்சல் தான் என்று கூட நினைக்கலாம், செங்கோட்டையன் , பன்னீர் , தினகரன் போன்றோரை அரவணைத்து செல்ல தெரியவில்லை, விஜய்க்கு ஆசைப்பட்டு இப்போ மூக்குடைபட்டு நிக்குறீங்க


pakalavan
நவ 10, 2025 04:25

எடப்படிக்கு இப்படி கூட்டிகுடுப்கதான் தெரியும்


raja
நவ 10, 2025 08:04

உடன் பிறப்பே நீ கூரியதை ஏற்கனவே கருணாநிதி வாஜிபாயிடம் செய்து வருமானம் கொழிக்கும் துறைகளை வாங்கி மக்கள் பணத்தை ஆட்டையை போட்டார்கள் மேலும் தந்தை பெரியார் பகுத்தறிவு பகலவன் தீர்க்கதரிசி நமது கட்டுமர இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் முன்னரே இது போல் செய்வார்கள் என்று விரிவாக கூறியுள்ளார்.. உனக்கு வரலாற்று அறிவே கொஞ்சம் கூட இல்லை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை