உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மரத்தடியில் பாடம் நடத்துவது கேவலமாக தெரியவில்லையா? மகேஷுக்கு பா.ஜ., கேள்வி

மரத்தடியில் பாடம் நடத்துவது கேவலமாக தெரியவில்லையா? மகேஷுக்கு பா.ஜ., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, : தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: திருநீறு, குங்குமம், ருத்ராட்சம் அணியக்கூடாது என சொல்கின்ற அமைச்சர் மகேஷ், பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று சொல்வாரா?பள்ளிக்குழந்தைகள், கோவில்களில் சாமியிடம் வைத்த, பல நிறங்களில் உள்ள கயிறு கட்டும் வழக்கம் இருப்பது, நாம் அறிந்ததே. ஆன்மிக அடையாளமான, கயிறு, ருத்ராட்சத்தை அணியக்கூடாது என, இவர்களின் மதச்சார்பற்ற பள்ளிகள்தான் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன.ருத்ராட்சம் அணிவது, ஜாதி பேதங்களை தகர்க்கும்; ஆன்மிகத்தை வளர்க்கும் என, அண்ணாமலை கூறியது, இவர்களுக்கு ஏன் உறுத்துகிறது. காரணம், ஹிந்து என்ற ஒரே குடையில், அனைத்து ஜாதியினரும் வந்து விட்டால், இவர்கள் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும்.ஏழை, பணக்காரன் வித்தியாசத்தை போக்க, காமராஜர் சீருடை திட்டம் கொண்டு வந்தார் என சொல்கிறார் மகேஷ். ஆனால், கொள்ளையடித்த பணத்தை, வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கிறார் என, அதே காமராஜர் மீது அவதுாறு பரப்பியவர்கள் இவர்கள். அமைச்சருக்கு பள்ளிக்குள் ருத்ராட்சம் அணிவது பிற்போக்குத்தனமாக தெரிகிறது. ஆனால், பள்ளிக்கூடமே இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தப்படுவது, கேவலமாகத் தெரியவில்லை. திருநீறு வைப்பதை அனுமதிக்கலாமா, வேண்டாமா என யோசிப்பதை விட்டுவிட்டு, ஆண்டுதோறும் 50,000 மாணவர்கள் தமிழில் பெயிலாவதை தடுப்பது எப்படி என யோசியுங்கள்.எட்டாம் வகுப்பு மாணவனுக்கு, ஐந்தாம் வகுப்பு கணக்கு தெரியவில்லை. இதுதான் பள்ளிக்கல்வித்துறை லட்சணம். இதில் பிற்போக்குத்தனம் குறித்து பாடம் எடுப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Raj S
ஜூன் 27, 2025 01:04

கேவலத்தைப்பத்தி திருட்டு திராவிடன்கிட்ட கேக்கலாமா... ஏற்கனவே ராமசாமி சொல்லிருக்காப்ல ஓட்டு வேணும்னா அவனுங்க பொண்டாட்டியவே அனுப்புவானுங்கனு...


Ramesh Sargam
ஜூன் 26, 2025 21:14

காலம் காலமாக ஹிந்து மாணவர்கள் நெற்றியில் திருநீர் வைத்துக்கொள்வது, பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வது, கழுத்தில் ருத்ராட்ஷம் மற்றும் பலவித செயின் போட்டுக்கொள்வது எல்லாம் உண்டு. திடீரென்று இந்த மஹேஷுக்கு அதன் மேல் ஒரு துவேஷம்? இந்த மகேஷ் சிறியவனாக இருந்தபோது நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டுதான் பள்ளிக்கு சென்றிருப்பார். அவர் பெற்றோர்களை கேட்டால் சொல்வார்கள்.


Ramesh Sargam
ஜூன் 26, 2025 20:33

எட்டாம் வகுப்பு மாணவனுக்கு, ஐந்தாம் வகுப்பு கணக்கு தெரியவில்லை. இதுதான் பள்ளிக்கல்வித்துறை லட்சணம். இதில் பிற்போக்குத்தனம் குறித்து பாடம் எடுப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.


அசோகன்
ஜூன் 26, 2025 17:34

உலக நாடுகள் தமிழ் நாட்டின் கல்வி கூடங்களை பார்த்து ப்ரம்மித்து போய்விட்டார்களாம்....... இந்த டெக்னாலஜி ஐ தங்களுக்கும் கொடுக்க சொல்லி ஸ்டாலினிடம் கெஞ்சுகிறார்கலாம்....... நம்ம ஆளுதான் டெக்னாலஜி ஐ கொடுக்கமுடியாதுனு கறாரா சொல்லிட்டாராம்


renga rajan
ஜூன் 26, 2025 15:31

இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்றெல்லாம் பீத்திகொள்வது இப்படி தான்


குத்தூசி
ஜூன் 26, 2025 09:49

பள்ளி மாணவர்களை நாலு சுவற்றுக்குள் பூட்டி வைத்தது ஆரியம்.. அவர்களை மரத்தடியில் சுதந்திரமாக படிக்க வைத்தது திராவிடம் !!! உருட்டு எப்படி ?


vbs manian
ஜூன் 26, 2025 08:24

பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கியுள்ளோம் என்று சொல்கிறார்கள். ஆனால் மரத்தடி வகுப்புகள் கூரை இடிந்த வகுப்பறைகள் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாமை தொடர்கதை. விடியல் வருமா.


VENKATASUBRAMANIAN
ஜூன் 26, 2025 08:07

இதுதான் திராவிட மாடல். பொய் கூறி ஆட்சியை பிடித்த கட்சி.


S.Balakrishnan
ஜூன் 26, 2025 07:45

உலக அளவில் விஞ்ஞான முன்னேற்றம் விரைந்து வளர்ந்து வரும் நிலையில் தமிழ் கல்வித்துறை சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய தவறும் ஒரு இந்து அமைச்சர் ஆன்மீக உணர்வுகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை கொச்சை படுத்துவது மிகவும் கேவலம். குழந்தைகள் கல்வியின் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.


பேசும் தமிழன்
ஜூன் 26, 2025 07:14

பள்ளியில் எந்த மத அடையாளங்களையும் அனுமதிக்க முடியாது என்று கூறினால் பரவாயில்லை .....ஆனால் குறிப்பிட்ட மத பிள்ளைகள் மத அடையாளங்கடன் வருவது தப்பில்லை ......ஆனால் இந்து குழந்தைகள் மட்டும் அப்படி இருக்க கூடாது ....அப்படி தானே ....நல்லா இருக்கு உங்கள் நியாயம் .....இது தான் திருட்டு மாடல் போல் தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை