உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உளறாதீர்கள்!: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

உளறாதீர்கள்!: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சமீபத்தில், அனைத்து அமைச்சர்களையும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்தார் பிரதமர் மோடி. 30 கேபினட் அமைச்சர்கள், தனி பொறுப்பில் உள்ள ஐந்து இணை அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என, 71 பேரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.கேபினட் செயலர் சோமநாதன் கூட்டத்தை துவக்கி வைக்க, மோடி பேச துவங்கினார். சக அமைச்சர்களுக்கு அறிவுரை, எச்சரிக்கை என, கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேசினாராம் பிரதமர்.'கடந்த 11 ஆண்டுகளாக எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் ஆட்சி நடத்துகிறோம்; இனிமேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக நமக்கு எதிராக பல விஷயங்கள் நடக்கும்; எனவே அனைத்திலும் கவனமாக இருங்கள்.'டிவி'க்களில் அதிகம் பேச வேண்டாம். அப்படி பேசும் சமயங்களில் உளறாதீர்கள். பலரும் தங்கள் இஷ்டப்படி, கட்சியின் நலன் கருதாமல் கண்டதையும் பேசி வருவதுடன், 'எக்ஸ்' தளத்திலும் பதிவிடுகிறீர்கள். இதையெல்லாம் செய்யக் கூடாது' என, ஒரு தலைமை ஆசிரியர் வகுப்பு நடத்துவதை போல், அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தினாராம் மோடி.இறுதியாக, 'ஆப்பரேஷன் சிந்துாரில் நாம் பெற்ற வெற்றியை, நாட்டின் மூலை முடுக்குகளுக்கு நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளாராம். கூட்டம் முடிந்ததும் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டதுடன், அமைச்சர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம் பிரதமர் மோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

theruvasagan
ஜூன் 08, 2025 19:46

உளறுவது பப்பு ஒலக்கை போன்றவர்களுடைய ஏகபோக உரிமை.


venugopal s
ஜூன் 08, 2025 15:30

ஆமாம், மற்றவர்கள் யாருக்கும் உளறுவதற்கு உரிமை இல்லை!


vivek
ஜூன் 08, 2025 17:11

இதோ அந்த இருநூறு ரூபாய்க்காக... வேணு


ellar
ஜூன் 08, 2025 19:02

ஏனென்றால் அதற்கு தனி அமைப்பு ஒன்று இருக்கிறது


மோடி தாஸ்
ஜூன் 08, 2025 12:16

மோடிஜியின் ஒவ்வொரு செயல்பாடும் வியக்க வைக்கிறது


Padmasridharan
ஜூன் 08, 2025 08:36

ஊழல்னா இந்நாட்டு அரசதிகாரிகள் இலஞ்சம் வாங்குவது அடங்காதா சாமி.. அதை ஒழிக்க ஏதாவது செய்யுங்களேன். 1930 எண்ணை போல இதற்கும் ஒரு எண்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை