உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்வித்த மத்திய பட்ஜெட்!

நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்வித்த மத்திய பட்ஜெட்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக, மத்திய பட்ஜெட்டை கடந்த வாரம் பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அதில், முக்கிய அம்சமாக வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, 7 லட்சத்தில் இருந்து 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப் பட்டது.அதாவது, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் மற்றும் 75,000 ரூபாய் நிலையான வரிக்கழிவும் சேர்த்தால், 12.75 லட்சம் ரூபாய் வரை இனி வருமான வரி செலுத்த தேவையில்லை. மாதச்சம்பளம் தவிர வேறு வருமானம் ஏதுமில்லாத நடுத்தர வர்க்கத்தினர், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அத்துடன், வரி விகிதம் மாற்றத்தால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பானது, பொதுமக்களின் நுகர்வு அதிகரிப்பாலும், அதன் வாயிலாக கிடைக்கும் வரி வருவாயாலும் சரிக்கட்டப்படும் என நம்பப்படுகிறது. மேலும், மூத்த குடிமக்கள் பெறும் வட்டி வருவாய்க்கான வரிக்கழிவு அளவும் உயர்த்தப்பட்டுள்ளது, ஓய்வு காலத்தில் நிலையான ஒரு வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளோருக்கு ஆறுதல் தருவதாக உள்ளது.வருமான வரி விலக்கு வரம்பு உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் பயனடைவர் என்று தோன்றினாலும், தொழிலாளர் சேமநல நிதி, பொது சேமநல நிதி, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் தொடர்பானவற்றில், இதுவரை தரப்பட்ட வரிச் சலுகையால், அவர்களுக்கு கிடைத்த கணிசமான சேமிப்பு இனி குறையலாம்.குறிப்பாக, நீண்ட கால சேமிப்பு திட்டங்களில், குறிப்பிடத்தக்க அளவுக்கு சரிவு ஏற்படலாம். பொது சேமநல நிதி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்வதும் குறையலாம். அது, அவர்களின் நிதி பாதுகாப்பை வருங்காலத்தில் பலவீனப்படுத்தலாம்.அதுமட்டுமின்றி, விரைவில் அமைக்கப்பட உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் போது, பல லட்சம் பேரின் சம்பளம் கணிசமாக உயர்ந்து, அவர்கள் மீண்டும் வரி விதிப்பு வரம்பிற்குள் வரும் சூழ்நிலையும் உருவாகும். அப்போது, வரும் நிதியாண்டில் அவர்கள் பெற உள்ள சலுகை, எதிர்காலத்தில் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.தொடர்ந்து, 10 ஆண்டுகளாக மத்தியில் தனித்து ஆட்சியில் இருந்த பா.ஜ., 2024 தேர்தலுக்கு பின், மத்தியில் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிப்பதாலும், அந்தக் கூட்டணியில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சியாக இடம் பெற்றிருப்பதாலும், பீஹார் மாநிலம் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளதாலும், அந்த மாநிலத்திற்கு பட்ஜெட்டில் அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மத்திய பட்ஜெட்டால் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளன. குறிப்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகுந்த அதிருப்தி தெரிவித்துள்ளார். 'மத்திய பட்ஜெட்டில், தமிழகம் என்ற வார்த்தை கூட இடம் பெறவில்லை' என, அவர் வருத்தம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த பாரபட்சமான அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். மேலும், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளால், நடுத்தர வர்க்கத்தினர் தற்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனாலும், வரி தள்ளுபடிகளை விட, நிலையான வருமான வளர்ச்சி, பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, வரி விதிப்பு அளவீடுகளை விரிவுபடுத்துவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அவசியம்.அத்துடன், ஓய்வு பெற்றவர்களுக்கான சமூக பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம். ஏனெனில், தனியார் துறையில் பணியாற்றுவோர் பலருக்கு சமூக பாதுகாப்பு திட்டம் இல்லை. வருங்காலங்களில், மத்திய அரசு இவற்றில் கவனம் செலுத்தும் என, நம்புவோம். இல்லையெனில், வரி விலக்கு வரம்பு உயர்வானது, தற்காலிக நிவாரணமாகவே அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhaskaran
பிப் 11, 2025 10:24

ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர்களை மனிதப்பிறவி களமாக கூட மதிக்காத நிதியமைச்சர் பிரதமர் இதை கண்டும் மெளனிகளாக இருக்கும் எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்கள் வாழ்க பல்லாண்டு


Ramesh Sargam
பிப் 10, 2025 22:19

ஆம், நாட்டை ஏலம் போடும் காங்கிரஸ், திமுகவினரை மகிழ்விக்க தயாரித்த பட்ஜெட் அல்ல இது.


Smbs
பிப் 10, 2025 14:56

மகிழ்ச்சி எல்லாம் கிடையாது முரசொலி மருந்துகடைல போயி வாங்கி பாரு தெரியும்


Saai Sundharamurthy AVK
பிப் 10, 2025 14:34

உண்மையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், காவல் துறையினர், அரசு துறை சார்ந்த தொழில், வர்த்தகம், மற்றும் வாரிய ஊழியர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், பெரிய வியாபாரிகள், வங்கி ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள், தபால் துறை ஊழியர்கள், மத்திய அரசு மற்றும் எல்லா மாநில அரசு ஊழியர்கள், வருடத்திற்கு 7 லட்சத்திற்கும் மேல் சம்பம் வாங்கும் தனியார் ஊழியர்கள், ஐ.டி ஊழியர்கள் என ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் வருமான வரி கட்டும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் இந்த பட்ஜெட்டால் பலன் பெறுவார்கள். சாதாரணமாக வருமானம் குறைவானவர்களுக்கு வருமான வரி விதிப்பு கிடையாது என்பதால் அவர்களும் சந்தோஷம் அடையலாம். மொத்தத்தில் நிர்மலா சீதாராமன் ஒரு அதிரடியே செய்து இருக்கிறார். இந்த வருமான வரி விலக்கு என்பது நாளை நமது பொருளாதார வளர்ச்சியை வலுவாக்க பெரும் பங்கு வகிக்கப் போவது என்பது நிச்சயம்.


T.sthivinayagam
பிப் 10, 2025 14:13

அர்ச்சனை அபிஷேக பொருள்களின் விலை உயர்வு காணிக்கைகள் போக்குவரத்து செலவுகள் ஹிந்து பண்டிகைகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஹிந்து குடும்பங்களுக்கு ஆன்மீக உரிமை தொகை வழங்க வேண்டும் என்று ஹிந்து பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


N Sasikumar Yadhav
பிப் 10, 2025 18:22

இந்துக்கள் யாரும் அப்படி கோரிக்கை வைக்கமாட்டார்கள் . உங்கள மாதிரியான கோபாலபுர கொத்தடிமையாளர்கள் மட்டுமே ஓட்டுப்போட ஓஷிக்கு கோரிக்கை வைப்பார்கள்


raja
பிப் 10, 2025 11:57

Dear sir, The mediclaim policy are restricted to age below 65 years. How do you expect senior citizens survive, kindly see to that age is relaxed for senior citizens. More over for applying mediclaim policy minimum sum assured is Rs.2,00,000, there is restriction on and sum assured. How do you expect a senior citizen above 65 years of age living on interest on investments can affored to pay a premium of Rs.25,000 for sum assured of for Rs.2,00,000. If that is case central government policy mediclaim free for age above 70 years. Can you bring it down to 65 years Please dont neglect senior citizens We hope it will be considered and law have to be passed in the parliament. Thanking you looking forward favouarble response from your end.


hariharan
பிப் 10, 2025 11:20

மத்திய அரசு மற்றும் போதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களில் அதிகம்பேர் நடுத்தர அல்லது கீழ்த்தட்டு மக்களே. 15 வருட கம்யூட்டேஷன் அவர்கள் வாங்கிய கம்யூட்டேஷனுக்கான வட்டியைவிட கூடுதலாக அரசு எடுத்துக் கொள்கிறது. 12 ஆண்டுகளிலேயே பெற்ற தொகை சரியானபின்பும் பிடித்தம் செய்வது ஓய்வூதியதாரர்களை சுரண்டுவதாகும். இது இந்த மத்திய அரசுக்குக்குத் தெரியாதா?


முருகன்
பிப் 10, 2025 11:17

மக்கள் நிலை அறியாத ஒரு பட்ஜெட் இது என்பது பெரும்பாலான மக்களுக்கு நன்றாகவே தெரியும் எந்த நடுத்தர வர்க்கம் மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் பேசுகிறார்கள் என நிருபிக்க முடியுமா


gun
பிப் 10, 2025 13:08

தெரியாது...நீ ஸ்டாலின் கிட்ட கேட்டு சொல்லேன்


Sriram Nagarajan
பிப் 10, 2025 10:03

இவர்கள் பாணியில் நடுத்தர வர்க்கத்தினர் என்பவர்கள் ஐ.டி துறையில் ஒரு லட்சம் மாத சம்பளம் வாங்குபவர்கள். இவர்களுக்கு தெரியுமோ, தெரியாதோ நடுத்தர வர்க்கத்தினரின் சராசரி மாத வருமாம் ரூ. 15,000/- க்கு குறைவு என்று....


ஆரூர் ரங்
பிப் 10, 2025 13:16

சாதாரண எளிய கொத்தனார், தச்சர், பிளம்பர், எலக்ட்ரீசியன் தினக்கூலி 800 முதல் 1300. அதாவது 24000 க்கும் மேல். விவசாய வேலைக்கு ஆள் இல்லை. 15000 என்பது வறுமைக் கோடு. அவர்களுக்கு உதவ பல்வேறு அரசு இலவசங்கள் உள்ளன.


Sitaraman
பிப் 10, 2025 08:41

Whether the Finance Minister ever bothered about handicapped senior citizens? The suffering can only be realised when they or their dependents are handicapped. Beyond their sufferings they are encountering on a day today basis depending on support both physically and financially.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை