உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம்: பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்?

அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம்: பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தேவையான அரசியல் வியூகங்களை வகுத்துத் தர, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன், அ.தி.மு.க., ஒப்பந்தம் செய்ய உள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தொடர்ந்து பத்து தேர்தல்களில், அ.தி.மு.க., தோல்வி அடைந்து வருகிறது. பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் எண்ணமும், பொதுச்செயலர் பழனிசாமியிடம் இல்லை. வரும் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் பழனிசாமியும், அ.தி.மு.க,வும் உள்ளது.எங்கள் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், அக்கட்சி தனித்துப் போட்டியிடும் என, திட்டவட்டமாக அறிவித்து விட்டது. அதேபோல, நடிகர் விஜய் கட்சியும் வருமா, வராதா என்பது தெரியவில்லை. அக்கட்சி தலைமையில் தனி அணி அமைக்கப்பட்டால், அது அ.தி.மு.க.,வுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.எனவே, சட்டசபை தேர்தலை எவ்வாறு சந்திப்பது, எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்வது என்பது குறித்த ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. எனவே, பிரபல வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரிடம், இதுபற்றி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் பேச்சு நடத்தி வருகிறார்.கடந்த சட்டசபை தேர்தலில், இந்த பிரஷாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த வியூகத்தை வைத்து தி.மு.க., வெற்றி பெற்றிருப்பதால், இம்முறை அ.தி.மு.க., பக்கம் அவரை கொண்டுவர, தலைமையில் இருந்து தீவிரமாக முயற்சி எடுத்துள்ளனர். அநேகமாக, தை மாதத்தில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Yes your honor
ஜன 10, 2025 18:12

பீஹாரில் கட்சி ஆரம்பிக்கும்பொழுது இனிமேல் எந்தக் கட்சிக்கும் வேலை செய்ய மாட்டேன் என்று எதோ அறிக்கை விட்டாரே இந்த பி.கெ. அது என்ன வெறும் திராவிட மாடல் அறிக்கையா?


Vijay D Ratnam
ஜன 10, 2025 17:34

தமிழ்நாட்டில் அதிமுக திமுக என இரண்டில் ஒரு கட்சிக்கே வாய்ப்பு. மக்களால் அடித்தே கொல்லப்பட்ட மம்மர் கடாபி மீது லிபியா மக்கள் எந்தளவுக்கு கோபத்தில் இருந்தார்களோ அந்தளவுக்கு இப்போது தமிழகத்தில் ஆளும் திமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் தமிழக மக்கள். திமுக கூட்டணியில் பதவியும் கிடைக்கால் காசும் பார்க்க முடியாமல் செம்ம கடுப்பில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், தமுமுக, மதிமுக போன்ற கட்சிகள் இம்முறை நிச்சயம் கூடவிருந்தே குழிபறிக்கும். திமுக தன் கூட்டணியில் உள்ள அல்லக்கை கட்சிகளை விட அதிகமாக அவர்களுடன் நெருக்கமான கள்ள உறவில் இருக்கும் பாஜகவையும், கரன்சிக்கு கட்சி நடத்தும் சீமானின் நாம் தமிழரையும் நம்பித்தான் இருக்கிறது. திமுக எதிர்வாக்குகள் முழுசாக அதிமுக பக்கம் சென்றுவிடாமல் அதில் ஐந்து ஆறு சதவிகிதத்தை மடை மாற்ற பாஜக கூட்டணி, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தடுக்கும். அதை வைத்து திமுக வென்றுவிடலாம் என்ற நப்பாசையில் உள்ளது. ஆனால் தமிழக மக்களுக்கு இந்த கருணாநிதித்தனம் நன்றாக தெரியும். யாருக்கு ஒட்டு போட வேண்டும், யாருக்கு போடவே கூடாது, யாரை இம்முறை ஜெயிக்க விடக்கூடாது, யார் யாரோட கள்ள உறவில் இருக்கிறார்கள். யார் பெட்டி வாங்கிக்கொண்டு சவடாலாக பேசி ஓட்டுக்களை பிரிக்கிறார்கள், யார் ஜாதியை வைத்து பொழப்பு நடத்துறான், யார் மதத்தை வைத்து அரசியல் செய்றார்கள், யார் மைனாரிட்டியை வச்சி பிழைக்கிறான் என்பதெல்லாம் வாக்காளர்களுக்கு நன்றாக தெரியும். ஆப்பை எங்க சொருவனும் எப்டி சொருவனும் நல்லாத்தெரியும்.


Natchimuthu Chithiraisamy
ஜன 10, 2025 14:08

கருத்தை படிக்காமல் கருத்து எழுதி, பார்த்தல் அதே கருத்து தான் அனைவருடையதும்.


Natchimuthu Chithiraisamy
ஜன 10, 2025 14:06

ஒரே செயல். பிஜேபி வேண்டாம் என்று சொல்லி திமுகவிடம் ஒப்பந்தம் போடாமல் பீஸ் வாங்குவார். எடப்பாடி அறிவு வீண்.


கிஜன்
ஜன 10, 2025 10:46

தேஷ் காரங்க கட்சிப்பணியே செய்யாமல். சவாரிக்கு ரெடியாவாங்கோ ..... கவனம் .... முதல்வர் நேற்றுகூட அந்த கட்சியைப்பற்றி பேசி சபையின் மாண்பை குலைக்க விரும்பவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டார் .... அந்த பேச்சுக்கு நால்வர் அணி ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை ... என்பதிலிருந்தே அவர்களுக்கும் அதே எண்ணம் தான் என்பது தெரிகிறது ....


V வைகுண்டேஸ்வரன், chennai
ஜன 10, 2025 13:32

கிஷன் அப்போ ஆரிய எதிர்பு எல்லாம் சும்மா வா. நால்வர் அணி இல்ல இன்னும் 2000 வருஷம் ஆனாலும் உங்க மாடல் அவர்களுக்கு அடிமைதான். மந்திரி சபையில் இடம் வேண்டும் என்றால் மாடலேய அடகு வைத்து அவியல் செய்வர். அதான் உன்னை மாதிரி 200 ரூவா ஊ ஃபீஸ் இருக்கும் போது அவங்களுக்கு என்ன


ராமகிருஷ்ணன்
ஜன 10, 2025 07:20

அதிமுகவின் தோல்விகளுக்கு முழுவதும் காரணம் எடப்பாடி தான். அதுசரி பிரசாந்த் கிஷோர் பீஸ் எவ்வளவு. கட்சியை புதைகுழியில் இருந்து காப்பாற்ற 1000 கோடிகளை கொடுக்க வேண்டியிருக்கும்.


RG GHM
ஜன 10, 2025 08:47

அவர் தனித்து நின்று வெற்றி பெற வில்லயே


SUBBU,MADURAI
ஜன 10, 2025 08:54

இந்த பிரசாந்த் கிஷோர் பீகாரில் தனிக்கட்சி தொடங்கி அங்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து டெபாசிட் போனதுதான் மிச்சம். எனவே உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் விலை எப்படி போகும்? அடுத்த கட்சிக்கு அட்வைஸ் பண்ணி பணம் சம்பாதிப்பது சுலபம். ஆனால் இவர் ஆரம்பித்த கட்சியை கரை சேர்க்க இவரால் முடியவில்லை. எனவே இனிமேல் இவரது தேர்தல் வியூகம் எங்கும் செல்லுபடியாகாது. எடப்பாடி பழனிச்சாமி இந்த பிரசாந்த் கிஷோருக்கு பணத்தை கொட்டி கொடுப்பதை தவிர்த்து ஈகோ பார்க்காமல் ஓபிஎஸ், தினகரன், பாஜக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்து களத்தில் மக்களை சந்தித்து தேர்தலை சந்தித்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெல்ல வாய்ப்பிருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை