உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இலவச மின்சாரம் ரத்து செய்ய மின் இணைப்பு கணக்கெடுப்பு; அரசின் மீது மக்கள் அதிருப்தி

இலவச மின்சாரம் ரத்து செய்ய மின் இணைப்பு கணக்கெடுப்பு; அரசின் மீது மக்கள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீவில்லிபுத்தூர் : 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மின் இணைப்புகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. இதுதவிர உள்ளாட்சித் துறையும் சொத்து வரியை உயர்த்தியுள்ளதால் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. பலர் வீட்டின் கீழ் பகுதிக்கு ஒரு இணைப்பும், மாடிக்கு ஒரு இணைப்பும் பெற்றுள்ளனர். இதில் சில முறைகேடுகளும் நடக்கின்றன. கீழ் தளத்தில் பெற்றோர் வசிக்கும் நிலையில், முதல் மாடியில் ஒரு மகன் குடும்பத்தினரும், இரண்டாவது மாடியில் மற்றொரு மகன் குடும்பத்தினரும், தனித்தனி மின் இணைப்புகள் பெற்று வசித்து வருகின்றனர்.இந்நிலையில் வருவாய் இழப்புகளை தடுக்க மின்வாரியம் தற்போது ஒரு வீட்டில் 2 மின் இணைப்புகள் இருந்தால் அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றி அமைக்க கணக்கெடுத்து வருகிறது. இதனால் 100 யூனிட் இலவசம் மின்சாரம் பெறும் வாய்ப்பை பலர் இழக்கவேண்டி வரும்.இந்நிலையில் 2022--23ம் நிதி ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் மேலும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் கூடுதலாக 6 சதவீதம் வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை, வரும் அக்., 30க்குள் செலுத்தினால் 5% ஊக்கத் தொகையும் கட்ட தவறினால் ஒரு சதவீத தாமத கட்டணமும் வசூலிக்க உள்ளாட்சி துறை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி தமிழகத்தில் தற்போது வரி வருவாய் வசூல் பணியில் உள்ளாட்சி அமைப்புகளின் பில் கலெக்டர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் கூடுதல் மின் கட்டணம், சொத்து வரி உயர்வு ஆகிய இரண்டு நிதி தாக்குதலால் மக்கள் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மூச்சுத்திணற செய்யும் நிலையில் இந்த விலை உயர்வுகள் அரசின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ARUMUGAMPILLAI ARUMUGAMPILLAI
அக் 25, 2024 13:05

One way you are issuing cash assistance 1000 rupees per month to the women and free bus transport to the women and etc... On other way you are increasing bus fare hike, milk price hike etc..and also electricity bill units ge hike...and other... Then what about the male part in the TAMIL SOCIETY.. Is it fare ?


ARUMUGAMPILLAI ARUMUGAMPILLAI
அக் 25, 2024 12:51

If the hosur airport got in full shape, the industrialists, business men and all sorts of people who need their presence at hosur can easily reach as per their schedule without any worries...


Delhi Balaraman
அக் 24, 2024 07:29

இதற்கு, வீட்டிற்கு ஒரு குடும்பம் மட்டும் வசிக்க வேண்டும் என்று அபத்தமான சட்டம் ஒன்றை உருவாக்கலாம் .ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மக்களின் வருவாயை எந்த வகையில் அபகரிக்க வழி உள்ளது என்பதை தீவிரமான நிலைகளில் ஆய்வதிலே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.


Delhi Balaraman
அக் 24, 2024 07:29

இதற்கு, வீட்டிற்கு ஒரு குடும்பம் மட்டும் வசிக்க வேண்டும் என்று அபத்தமான சட்டம் ஒன்றை உருவாக்கலாம் .ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மக்களின் வருவாயை எந்த வகையில் அபகரிக்க வழி உள்ளது என்பதை தீவிரமான நிலைகளில் ஆய்வதிலே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.


Delhi Balaraman
அக் 24, 2024 07:29

இதற்கு, வீட்டிற்கு ஒரு குடும்பம் மட்டும் வசிக்க வேண்டும் என்று அபத்தமான சட்டம் ஒன்றை உருவாக்கலாம் .ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மக்களின் வருவாயை எந்த வகையில் அபகரிக்க வழி உள்ளது என்பதை தீவிரமான நிலைகளில் ஆய்வதிலே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.


M Ramachandran
அக் 22, 2024 20:53

உதார் மன்னன் ஸ்டாலின் பொது உபயோக மீட்டர் கணக்கெடுப்பில் அதிக கொள்ளை. 229 யூனிட்டிற்கு ரூபாய் 2180. 4 வீடுகள் உள்ள பிளாட்ஸ் க்கு பழைய அளவிற்கு குறைக்கப்படும் என்று கூறி கரூர் செந்தில் பாலாஜி உள்ளே செல்லும் போது குடுத்த உறுதி உதார் மொழி அம்பேல். அலிபாபாவும் 40 திருடர்கள் கதை தான் ஞாபகத்திற்கு வருது.


Parthasrathi
அக் 22, 2024 20:38

ஆமாம் இலவசங்கள் நிறுத்தப்படவேண்டும் திராணி இருந்தால் தானே நிறுத்த முடியும் இந்த கட்சி ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி என்று கூவிதான் களம் கண்டவர்கள் ஊழல் கரை கண்டு படித்தவர்கள்


அப்பாவி
அக் 22, 2024 19:56

போறும்டா... எவ்சளவு நாள் தான் ஓசீலயே உயிர் வாழ்வீங்க? உங்ககை வெச்சு அவனெல்லாம் கோடி கோடியாய் கொள்ளையடிக்கிறான். காசு குடுத்து கரண்ட் வாங்கிக்கோங்க.


yts
அக் 22, 2024 13:03

இது நல்ல விஷயம்தானே சசில வீடுகளில் இரண்டு மூன்று கனெக்சன் வாங்கிக்கொண்டு இலவசமாக மாதம் 100யூனிட் பெறுகிறார்களே அவர்களுக்கெல்லாம் இது ஆப்பு தானே


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 22, 2024 11:42

எங்களுக்கு தேவை கால் கொலுசு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் - இது தேர்தல் சமயத்தில். மற்றபடி இலவச பேருந்து இலவச சைக்கிள் இலவச ஆயிரம் ரூபாய் மாதா மாதம் கொடுக்க வேண்டும். பொங்கல் நேரத்தில் ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும். இவைகள் எங்களுக்கு கிடைத்தால் போதும் நீங்கள் சொத்து வரி உயர்த்திக்கோங்கோ தண்ணீர் வரி உயர்த்திக்கோங்கோ பத்திர பதிவு உயர்த்திக்கோங்கோ இந்து கோயில்களை இடித்துத்கோங்கோ இந்துக்களை இழிவாக பேசங்கோ இந்து பண்டிகைகள் தடுக்க என்ன வேனா செஞ்சுக்கோங்கோ கேரளாகாரன் கோயம்புத்தூரில் வீடு கட்ட கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் இலட்சங்களை அள்ளிக்கொடுங்கோ கேரளாவில் ரேஷன் கார்டு உள்ளவனுக்கு கோயமுத்தூரில் ரேஷன் கார்டு கொடுத்து ஆயிரம் ரூபாய் மாதா மாதம் கொடுங்கோ கனிம வளங்களை கொள்ளையடித்து கேரளா காரனுக்கு கொடுங்கோ நீங்க சொத்து மேலே சொத்து சேர்த்துக்கோங்கோ நாங்க எதுவும் கேட்க மாட்டோம் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனா எந்த காரணமும் கொண்டு முதல்லே சொன்னதை நிறுத்த கூடாது அப்படி நிறுத்தினா அவ்வளவு தான் நாங்க திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓட்டு போட மாட்டோம். நீங்க இரண்டு பேருமே மாறி மாறி தமிழகத்தை உங்க சொத்தாக வெச்சுக்கோனுமின்னா இந்த இலவசங்களை நிறுத்த கூடாது ஓட்டு பணம் கண்டிப்பா கொடுக்கோனுமாக்கும். அப்புறம் ஒரு சின்ன விஷயம் தீபாவளி ஆஃப்ரா ஒன்னுக்கு ஒன்னு இலவசம் அப்படிங்கற மாதிரி டாஸ்மாக்கில் ஒரு ஆஃப்ர் கொடுத்தா நல்லா இருக்குமுங்கோ. எங்களை எப்பவும் ஒரு போதையிலே வெச்சுக்கோங்கோ. நாலு மொழி சொல்லிக் கொடுத்து நாலு பக்கம் வேலைக்கு எதுவும் போற மாதிரி பண்ணிடாதீங்கோ. எப்பவும் பள்ளி கூடத்திலே ஒரே மொழி தமிழ் மொழி மட்டும் சொல்லிக் கொடுத்து எங்களை குண்டு சட்டிக்குளே குதிரை ஓட்ட வையுங்கோ. அப்பத்தான் நாங்க எப்பவும் உங்க அடிமையாவே இருப்போமுங்க. நீங்கள் பல மொழி படிச்சு பல இடத்துக்கு போயி தொழில் செஞ்சு நல்லா இருக்கோனுமுங்கோ. திமுக அதிமுக அப்பறம் கழகம் இது தவிர எங்களுக்கு வேறேதும் சொல்லி கொடுக்காதீங்கோ. நாங்க கன்பூசியன் ஆக விடாதீங்க. திமுக இந்து கோயிலை இடிக்கனும் இந்து பண்டிகை கொண்டாடவுடாம செய்யனும். அப்பறம் நாங்க என்ன செய்வோம் அதிமுகவை ஜெயிக்க வைப்போம் அவங்க என்ன செய்வாங்க இந்து மதத்தை வளர்க்க மாதிரி நடிப்பாங்க. அப்போ நீங்க என்ன செய்யனும் சிறுபான்மையினர் நசுக்கராங்கோ அப்படின்னு சொன்னா அடுத்த தடவை உங்களை ஜெயிக்க வைப்போம். இப்படியே மாறி மாறி செய்யுங்கோ. . சரிங்களா. நல்லதுங்கோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை