உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கள தகவல்களால் இ.பி.எஸ்., அப்செட்: அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை

கள தகவல்களால் இ.பி.எஸ்., அப்செட்: அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை

நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ல் தான் வெளியாகும் என்றாலும், பல தரப்பில் இருந்து கிடைக்கும் விபரங்களை வைத்து, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், யூகக் கணக்கு போட்டு வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க., கூட்டணி 35 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என, கட்சியினர் மற்றும் உளவுத்துறை அளித்துள்ள தகவல், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதேநேரம், பா.ஜ., கூட்டணி ஐந்து இடங்களில் வெல்லக்கூடும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g7oo4qsb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஆர்வம்

இருப்பினும், 2026ல் சட்டசபை தேர்தலுக்கு, இப்போதே கட்சியினர் தயாராக வேண்டும் என ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார்.தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் இருந்தபோதும், கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவாரா என தெரிந்து கொள்வதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்.,சும் ஆர்வம் காட்டுகின்றனர். களத்தில் இருந்து வரும் தகவல்கள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இல்லாததால், பொதுச்செயலர் இ.பி.எஸ்., அப்செட் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக்குப் பின், சேலத்தில் தங்கியிருக்கும் அவர், தினந்தோறும் கட்சியினரை சந்தித்து வருகிறார். உற்சாகமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், அதையும் மீறி பதற்றத்தை உணர முடிகிறது என்கின்றனர், அவரை சந்தித்த மூத்த தலைவர்கள்.

அ.தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க., - அ.தி.மு.க.,வை கடந்து தான், வேறு இயக்கங்களுக்கு இடம் கிடைக்க வேண்டும். அதில், இரு கட்சிகளும் உறுதியாக இருந்து செயல்பட வேண்டும் என்பது இ.பி.எஸ்.,ன் விருப்பம்.அதனால் தான், கடந்த தேர்தலில் தி.மு.க., ஆட்சி அமைந்தாலும், இரண்டு ஆண்டுகள் வரை விமர்சிக்காமல் அமைதி காத்தார். அதன்பின், ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்க்கத் துவங்கி, தொடர் விமர்சனங்களை வைத்தார். அவர் துவக்கத்தில் இருந்தே வேகமாக செயல்படாதது, கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. 'எதற்கும் ஒரு கால அவகாசம் உள்ளது. ஆட்சிக்கு வந்த மறுநாளில் இருந்து அவர்களை எதிர்க்க வேண்டும் என்பது ஆரோக்கியமான அரசியல் இல்லை. சந்தர்ப்பம் வரும்போது விமர்சிக்கலாம்; எதிர்க்கலாம்' என்று பழனிசாமி கூறி வந்ததையும் கட்சியினர் ரசிக்கவில்லை. இதற்கிடையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி போல பா.ஜ., செயல்பட, அக்கட்சி பக்கம் பலருடைய பார்வையும் திரும்பிவிட்டது. இதனால், லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து விட்டது.

சாதகமாக இல்லை

இதனால் சோர்ந்து போன அ.தி.மு.க.,வினர், தேர்தலில் போட்டியிட தயங்கி ஒதுங்கினர். ஆனாலும், பணக்கார வேட்பாளர்களாக தேர்வு செய்து, அவர்களை களம் இறக்கினார் இ.பி.எஸ்.,இது, கட்சியில் இருக்கும் சாமானியர்களை சோர்வாக்கியது. இது, கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதை தாமதமாக உணர்ந்திருக்கும் இ.பி.எஸ்., அப்செட் ஆகி உள்ளார். முடிவுகள் சாதகமாக இல்லாவிட்டால், தனக்கே பெரும் பிரச்னை ஏற்படும் என அஞ்சுகிறார். இருப்பினும், தேர்தலுக்குப் பின் கட்சியை நடத்தி செல்வது குறித்து, இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் கருத்து கேட்கிறார். ஒவ்வொருவர் கருத்தையும் குறித்து வைக்கும் பழனிசாமி, அதற்கேற்ப செயல் திட்டம் வகுக்க உள்ளார். பா.ஜ.,வுடனான உறவை சீராக்கலாம் என சிலர் சொல்ல, அதை இ.பி.எஸ்., ஏற்க மறுத்து விட்டார். இவ்வாறு அந்த தலைவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

MADHAVAN
ஏப் 23, 2024 11:14

பீ சப்பி கட்சிமேல யாருக்கும் நம்பிக்கை இல்லை


Bhakt
ஏப் 22, 2024 22:03

ஏர்வாடி பழனி பாபாவுக்கு தொடர் இரக்கம் தான் இனி


Azar Mufeen
ஏப் 22, 2024 20:44

எடப்பாடி மட்டும்தான் துரோகி ஜோதிரத்திய சிந்தியா புனிதர்


Nallashami
ஏப் 23, 2024 08:27

அன்னியன் வீசும் எலும்புத் துண்டுக்காக பிறந்த நாட்டிலேயே குண்டு வைப்பவன் புனிதனா


M Ramachandran
ஏப் 22, 2024 19:09

தீ மு கா தக்கன் பண அதிகாரா துஷ் பிரயோகம் இதை வைய்த்து இந்த தேர்தலில் துள்ளி குதித்த பழனியின் ஆ தி மு கா என்ற கூட்டத்தின் கொட்டத்தை அடக்கி விட்டது


Dwarakanath Putti
ஏப் 22, 2024 14:52

அது என்னவோ நீங்க எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் பற்றி சொல்லறீங்க .....


ராஜவேல்,வத்தலக்குண்டு
ஏப் 22, 2024 14:09

எடப்பாடி பழனிச்சாமிக்கு எது பண்ணத் தெரிகிறதோ இல்லையோ துரோகம் செய்கிற கலை மட்டும் நன்றாக வரும் ஆனால் துரோகிகளுக்கு கடைசி போக்கிடம் எது என்பது இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது.


Murali
ஏப் 22, 2024 14:00

ADMK will surely get good percentage votes. Will revive to power in 2026 under EPS leadership.


Paul Raj
ஏப் 22, 2024 13:22

பிப்டி : fifty


rameshkumar natarajan
ஏப் 22, 2024 12:18

To win a parliment seat, one party should get atleast % votes In Tamil Nadu, both the dravidian parties, DMK and ADMK has atleast -% votes with them The rest comes from neutral voters for BJP, it has only % votes and getting additionally % votes is a day dream No scientific reasoning that BJP will get seats


மோகனசுந்தரம்
ஏப் 22, 2024 17:07

you are not giving number. Only % means what?


Azar Mufeen
ஏப் 22, 2024 08:52

கள தகவல்களால் eps மட்டுமல்ல அண்ணாமலையும் அப்செட் இந்த முறை புதிய மாற்றமாக சீமான் அவர்கள் 5 இடங்கள் உறுதி


ram
ஏப் 22, 2024 09:56

it will never happen


Senthil K
ஏப் 22, 2024 13:12

அட.. நீ வேற.. இந்த முறை 40/40 சீமான் கட்சி தானாம்... டெபாசிட் கண்டிப்பாக கிடைத்து விடும்.. என்று எதிர்பார்க்கப் படுகிறது...


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை