உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வுக்கு எதிர்பார்க்கும் ஓட்டுகள் கிடைக்குமா?: உதயநிதி அதிரடி திட்டம்

தி.மு.க.,வுக்கு எதிர்பார்க்கும் ஓட்டுகள் கிடைக்குமா?: உதயநிதி அதிரடி திட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பதிவாகும் மொத்த ஓட்டுகளில், 80 சதவீதம் ஓட்டுகளை பெற, துணை முதல்வர் உதயநிதி தரப்பில் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி காங்., - எம்.எல்.ஏ.,வும், மூத்த தலைவருமான இளங்கோவனின் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு பிப்., 5 இடைத்தேர்தல் நடக்க உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iok9654s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதிர்வலை

பிப்., 8 ஓட்டு எண்ணிக்கை நடக்கும். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க.,- த.வெ.க., போன்றவை, இடைத்தேர்தலை புறக்கணித்து உள்ளன. இதனால், ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே, நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஈ.வெ.ராமசாமிக்கு எதிராக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது, தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.'திராவிடமா, தமிழ்த்தேசியமா', 'பெரியார் புராணமா, பெரிய புராணமா' என்ற பாணியில், தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள சீமான் திட்டமிட்டுஉள்ளார். ஈ.வெ.ராமசாமி எதிர்ப்புக் கொள்கையை, சீமான் கையில் எடுத்துள்ளதால், அவரது கட்சிக்கு பா.ஜ., ஓட்டுகள் மொத்தமாக விழ வாய்ப்புள்ளது.

போதுமானது

இதனால், தி.மு.க., தரப்பு எதிர்பார்த்த ஓட்டுகளில் ஓட்டை விழும் என தி.மு.க., தரப்பில் அச்சம் கொள்ளத் துவங்கி உள்ளனர். இந்த சூழ்நிலையில், இடைத்தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில், 80 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றுவிட வேண்டும் என, துணை முதல்வர் உதயநிதி திட்டமிடப்பட்டுள்ளார்.இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த முறை நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, பதிவான ஓட்டுகளில் 65 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. இந்த இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிடுவதால், 80 சதவீதம் ஓட்டுகளை அள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில், பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால், ஆளுங்கட்சி தரப்பில் அமைச்சர்கள் பட்டாளத்தை, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த, முதல்வர் விரும்பவில்லை.அவரும் பிரசாரத்திற்கு செல்லவில்லை. துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் சிலர் மட்டும், கடைசி 3 நாட்கள் பிரசாரம் செய்யலாம் என, திட்டமிடப்பட்டுஉள்ளது. எதிர்பார்க்கும் அளவுக்கான ஓட்டுகளைப் பெற அதுவே போதுமானது எனவும் நம்புகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நோட்டாவுக்கு அ.தி.மு.க., ஓட்டுகள்:

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராகப் போட்டியிட்ட பா.ம.க., விற்கு, அ.தி.மு.க., ஓட்டுகள் செல்லாமல், தி.மு.க., தன் வசம் வளைத்தது. அதே பாணியை ஈரோடு கிழக்கு தொகுதியில் பின்பற்ற, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்க, சீமானும் விரும்பவில்லை. எனவே, நாம் தமிழர் கட்சிக்கு, அ.தி.மு.க., ஓட்டுகள் செல்வதை, கட்சித் தலைமை விரும்பவில்லை. எனவே, ஓட்டளிக்க விரும்பும் அ.தி.மு.க.,வினர் நோட்டா அல்லது தங்களுக்கு பிடித்த சுயேட்சைகளுக்கு ஓட்டளிக்கலாம் என, கட்சித் தலைமை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Barakat Ali
ஜன 24, 2025 17:25

இடைத்தேர்தல் என்பது பொதுவாக ஒரு தொகுதியின் மக்கள் பிரதிநிதி இறந்தால் நடத்தப்படுவது .... அதில் வாக்காளர்களை நன்கு கவனித்து வெல்வது எளிது ..... ஆனால் பொதுத்தேர்தல் பொதுவாக அனைத்துத் தொகுதிகளிலும் நடத்தப்ப்பெறுவது ..... அப்பொழுது மொத்த அல்லது பெரும்பாலான வாக்காளர்களைக் கவனிப்பது கடினம் ..... ஆனால் எனக்கென்னவோ திமுகவிடம் குவிந்துள்ள பணத்துக்கு அவர்கள் வரும் பொதுத்தேர்தலில் கூட மொத்த வாக்காளர்களையும் கவனிப்பார்களோ எனது தோன்றுகிறது ...


Bala
ஜன 24, 2025 17:03

திரு சீமான் அவர்கள் கட்சியான நாம் தமிழர் இந்த தேர்தலில் வெற்றிபெறவேண்டும். பாஜகவின் ஒட்டுமொத்த வாக்குகளும் நாம்தமிழருக்கு விழும். இது உறுதி. மேலும் அதிமுக தேமுதிக பாமக, தமாக போன்ற கட்சிகளின் வாக்குகளும் நாம்தமிழருக்கு செலுத்த வேண்டுகிறேன். ஜோசப் விஜய் ரசிகர்களை திமுக வளைத்துவிடும். இப்பொழுது இருக்கும் மக்கள் விரோத திமுக இந்த ஈரோடு இடை தேர்தலில் தோல்வி அடைவது உறுதி. மக்கள் விழித்துக்கொண்டார்கள். பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டாலும் அதர்மம் வெற்றிபெற விடக்கூடாது.


PARTHASARATHI J S
ஜன 24, 2025 14:50

அப்படி வெற்றி பெற்றாலும் அவனது பதவி காலம் ஒரு ஆண்டே.


naranam
ஜன 24, 2025 14:12

இருக்காதா பின்னே? கையில காசு பெட்டியில் வாக்கு! குவாட்டர் மற்றும் பிரியாணி இருக்கவே இருக்கு!


Ramesh Sargam
ஜன 24, 2025 12:40

எதிர்பார்க்கும் ஓட்டுக்கள் கிடைக்குமா தெரியாது.


தியாகு
ஜன 24, 2025 10:53

போட்டோவை மாத்துங்கப்பா, படு செயற்கையான போஸ். பார்த்தாலே பத்திகிட்டு வருது.


Haribabu Poornachari
ஜன 24, 2025 10:18

பணம் கொடுத்து வாக்கு வாங்க போறாங்க. இதில் வெற்றி என்ன? தோல்வி என்ன? பிச்சனைக்காரனை கூட பணத்தால் வெற்றி பெற வைக்கலாம். இதில் திறமை, கொள்கை, ஊழல் ஒன்றுமில்லை.


angbu ganesh
ஜன 24, 2025 10:18

நான் உண்மையான கிறிஷ்டியான்னு சொன்னியே போ அங்க பொய் வோட்டு கேளு அவங்களுக்கு வோட்டு உரிமை இல்லேன்னா நீ சீண்டவியா அவங்களை


angbu ganesh
ஜன 24, 2025 10:17

...கிடைக்கும்


ராமகிருஷ்ணன்
ஜன 24, 2025 09:45

ஏன் எல்லாத்துக்கும் அதிரடி, அப்பா செய்தாலும் அதிரடி, மகன் செய்தாலும் அதிரடி, சாதாரணமாக எதுவும் செய்ய தெரியாதா. அதிரடியாக என்பதற்கு மதிப்பே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை