உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஈ.வெ.ரா., குடும்பத்துக்கு 9 முறை வாய்ப்பு: கட்சிக்காக உழைத்தோர் ஏமாறுவதாக கொதிப்பு

ஈ.வெ.ரா., குடும்பத்துக்கு 9 முறை வாய்ப்பு: கட்சிக்காக உழைத்தோர் ஏமாறுவதாக கொதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு : 'ஈ.வெ.ரா., குடும்பத்துக்கு இதுவரை, ஒன்பது தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டு, 10வது முறையும் முயல்வதால், கட்சிக்காக உழைத்தவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்' என, ஈரோடு காங்., மூத்த நிர்வாகிகள் குமுறுகின்றனர்.இதுபற்றி அவர்கள் கூறியதாவது: ஈ.வெ.ரா., குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால், காங்., மற்றும் தி.மு.க., தலைமை அக்குடும்பத்தினரை பல நிலைகளில் ஆதரிக்கிறது. இதுவரை அவரது குடும்பத்தினர் ஒன்பது முறை தேர்தலில் போட்டியிட்டு, 4 முறை வென்றுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j7ajc28o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மறைந்த இளங்கோவன், 1984ல் சத்தியமங்கலம் எம்.எல்.ஏ.,வாக வென்றார். 1989ல் பவானிசாகர் சட்டசபை தொகுதியிலும், 1996ல் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றார். கடந்த, 2004ல் கோபி எம்.பி.,யாக வென்று, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சரானார்.கடந்த, 2009ல் ஈரோட்டிலும் 2014ல் திருப்பூரிலும் 2019ல் தேனியிலும் லோக்சபா தொகுதிக்கும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த, 2021ல் ஈரோடு கிழக்கில் அவரது மகன் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.,வானார். அவர் இறந்ததால், 2023ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட இளங்கோவனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவர் எம்.எல்.ஏ.,வானார். இப்படி ஒன்பது தேர்தலில் அவரது குடும்பத்தினர், சட்டசபைக்கும் லோக்சபாவுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.தற்போது, இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கில் நடக்கவிருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில், 10வது முறையாக ஈ.வெ.ரா., குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு கேட்கின்றனர்.அவருக்கு சீடு கொடுத்து, எம்.எல்.ஏ.,வாகி விட்டால், தொடர்ச்சியாகவும் அவரே போட்டியிடுவாரே தவிர, வேறு யாருக்கும் அங்கு போட்டியிட வாய்ப்பே கிடைக்காத சூழல் உருவாகும். எனவே, இம்முறை காங்., கட்சிக்காக ஆண்டாண்டு காலமாக உழைத்தவர்களில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என கட்சி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nandakumar Naidu.
ஜன 10, 2025 22:03

ஈ வே ரா ஒரு ஈர வெங்காயம். மக்களுக்கு புத்தியில்லை.


Seekayyes
ஜன 10, 2025 21:28

என்ன சார் அதுதானே காங்கிரஸ்ன் கட்சி வழக்கம். ஏன் ராஹுல் காந்தி வயநாட்டு தொகுதியை தன் சகோதரிக்கு கொடுக்கவில்லையா? என்ன இது புது பழக்கம் குடும்பங்களை எதிர்ப்பது, அதிருப்தியை தெரிவிப்பது.


Raj S
ஜன 10, 2025 19:28

ஏன்னா அந்த குடும்பத்துல பொறக்காதவங்க எல்லாம் கொத்தடிமைன்னு அர்த்தம்... புடிக்கலான வெளில போ...


வால்டர்
ஜன 10, 2025 16:33

மூன்றாவது முறை பிரதம மந்திரி ஆகிய ஐயா மோடி வாழ்க.


Karthik
ஜன 10, 2025 14:51

அப்படீன்னா உங்களுக்கு வந்தா மட்டுந்தான் ரத்தம்?? கொதிக்குது. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி ??


ஆரூர் ரங்
ஜன 10, 2025 10:47

90 வயதுக்கு மேற்பட்ட மூத்த வேட்பாளராகப் பார்த்து நிறுத்தவும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 10, 2025 10:22

குடும்பத்துக்கு சீட் கொடுக்கும்போது வருதா?


Rajan A
ஜன 10, 2025 08:12

அடிமைகளுக்கு எதற்கு மூளை


A Viswanathan
ஜன 10, 2025 07:25

உண்மையான காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் புறக்கணியுங்கள். அல்லது உங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஒட்டளியுங்கள். இப்போது உள்ளது மூழ்கும் இத்தாலிய காங்கிரஸ் என்பது என்னைவிட உங்களுக்கு தெரியும். இந்தியன் நேஷனல் காங்கிரஸ் அல்ல. சிந்தித்து முடிவு எடுங்கள்.


VENKATASUBRAMANIAN
ஜன 10, 2025 07:21

இதுதான் குடும்ப அரசியல். இதுதான் திராவிட மாடல்