உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் மீது வழக்கு போட்டாலும் நிற்காது

விஜய் மீது வழக்கு போட்டாலும் நிற்காது

கோவை : ''விஜய் மீது வழக்குப்போட்டு, அவரை குற்றவாளியாக சேர்த்தாலும் வழக்கு நிற்காது,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் அவர் அளித்த பேட்டி:

கரூர் சம்பவத்தில், விஜயை நீதிமன்றம் கண்டித்தது துரதிர்ஷ்டவசமானது. நீதிபதிகளை எப்போதும் குறை சொல்ல மாட்டோம். அரசியல் ஆசை இந்த வழக்கில் பயன்படுத்திய வார்த்தைகள், சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது. கரூர் விவகாரத்தில், விஜய் மீது வழக்கு போட்டு, முதல் குற்றவாளியாக சேர்த்தாலும், அது நிற்காது. ஹைதராபாதில், நடிகர் அல்லு அர்ஜுன் வழக்கில் இதுவே நடந்தது. அரசியல் ஆசைக்காக விஜயை கைது செய்யலாம்; சிறையில் அடைக்கலாம். மறுநாள் பெயிலில் வந்து விடலாம். யார் தவறு செய்தார்களோ, அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். த.வெ.க., நிர்வாகிகள் முதல் அதிகாரிகள் வரை, விசாரிக்கப்பட வேண்டும். வயிற்றெரிச்சல் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூட்டத்தில இப்படி நடந்திருந்தாலும், அவர் பொறுப்பல்ல. அவர் கட்சியில் இருந்து பலர் வெளியேறுவதால், வயிற்றெரிச்சலில், விஜய் பற்றியும், பா.ஜ., பற்றியும் தாக்கிப் பேசுகிறார். விஜய் மற்றும் த.வெ.க.,வை பாதுகாக்க வேண்டிய கடமை பா.ஜ.,வுக்கு கிடையாது. எந்த கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியால் நசுக்கப்படும்போது, உண்மையை சொல்கிறோம். அதற்காக, பா.ஜ., அடைக்கலம் கொடுக்கிறது என கூறுவது அபத்தம். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, விதிமுறைகளை நிர்ணயிக்க வேண்டும். 'தமிழ்நாடு யாருக்கு எதிராக போராடுகிறது' என கவர்னர் ரவி கேட்ட கேள்வி சரியே. கவர்னரை மாற்ற முடியுமா; அந்தப் பதவியை இல்லாமல் செய்து விட முடியுமா? மக்களை வேண்டுமென்றே துாண்டி விட்டு, போராட்ட மனநிலையை தி.மு.க., உருவாக்குகிறது. இது, ஆளும் கட்சி செய்ய வேண்டிய வேலை அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

முருகன்
அக் 07, 2025 18:31

இப்படி அப்படி பேசினாலும் விஜய் வரமாட்டார் உங்கள் கூட்டணிக்கு.இதுவரை விஜய் உங்கள் கட்சியை பற்றி பேசிய பேச்சை கேட்டாலே புரியும்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 07, 2025 12:52

சுமார் ஐந்தாண்டுகளாக தமிழக அரசியலில் ஈடுபட்டும் இன்னமும் நீதிமன்றங்களைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது அழகல்ல. விஜய் மீது வழக்கு தொடுத்து அவரை ஆயுள் தண்டனை கைதியாக்க வேண்டும் என்று திமுக விரும்பினால் இன்றைய நீதியரசர்கள் மூலம் செய்யமுடியும் என்பதே உண்மை.


Venugopal S
அக் 07, 2025 18:13

நீங்கள் சொல்வது போல் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் திமுகவுக்கு சாதகமாக இருக்கின்றனர் என்பது உண்மை என்றால் அதைத் தடுக்க முடியாத மத்திய அரசு கையாலாகாத அரசு என்று தானே அர்த்தம்?


Ramesh Sargam
அக் 07, 2025 11:07

பொதுவாகவே அரசியல்வாதிகள் மீது போடப்படும் வழக்குகள் எல்லாமே ஒரு சம்பிரதாயத்துக்குத்தான். இந்தியாவில் ஒருசில அரசியல்வாதிகள் மட்டும்தான் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றும் இந்தியாவில் உள்ள பல நீதிமன்றங்களில், உச்சநீதிமன்றத்தில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல வருடங்களாக தூங்கிக்கொண்டிருக்கின்றன. அதில் சம்பந்தப்பட்ட பல அரசியல்வாதிகள் இயற்கை மரணமே அடைந்திருப்பார்கள். மற்றவர்களை தண்டிக்கும் நீதிபதிகள், இதுபோன்ற அவலநிலைக்கு காரணமானவர்களை தண்டிக்க முடியுமா?


Anantharaman Srinivasan
அக் 07, 2025 10:54

அண்ணாணாமலையாரே நீங்க என்ன வக்கலத்து வாங்கி பேசினாலும் பிஜேபிக்கு விழும் ஓட்டு சதவிகதம் மாறப்போவதில்லை.


தலைவன்
அக் 07, 2025 16:19

இயற்கை விவசாயத்தையாவது ஒழுங்கா கவணியுமைய்யா ??


Indian
அக் 07, 2025 10:24

கூட்டணிக்காக என்ன என்ன வாய் கூசாமல் பேசவேண்டி இருக்கு பாருங்க , தலைமறைவு வெற்றி கழகம்


Ravi
அக் 07, 2025 10:16

பேசாம புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜீனா, ஜான் ஆரோக்கியசாமி, நிர்மல்குமார் இவங்களை எல்லாம் விஜய் அண்ணா அனுப்பி விட்டு அண்ணன் அண்ணாமலையை கூப்பிட்டு கெளரவ ஆலோசகரா கூட வச்சுக்கலாம்.


பாலாஜி
அக் 07, 2025 07:55

ஜோசப் விஜயைப்போல ஓடி ஒளிந்துவிடுமா?


baala
அக் 07, 2025 09:56

இல்லை இவர்களின் தலையீட்டால்


Sun
அக் 07, 2025 07:46

உச்ச மன்ற நீதிபதியே சொல்லிட்டார். உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி ரிட்டயர்ட் ஆகப் போறாராம். அண்ணன் கருத்து கந்தசாமிய அந்தப் பதவியில உக்கார வச்சுரலாம்!


duruvasar
அக் 07, 2025 10:27

என்ன தம்பி, நீதியரசர்களாக்க .... பழக்கத்தை திராவிடம் கைகழுவி விட்டதா ?


Kumar
அக் 07, 2025 06:17

கூட்டணிக்காக என்ன என்ன வாய் கூச்சமா பேசவேண்டி இருக்கு பாருங்க


ஆரூர் ரங்
அக் 07, 2025 09:09

சட்ட நடைமுறைகளை விளக்கினால் அதில் உள்நோக்கம் கற்பிப்பது தவறு. மற்றபடி திமுக தனது பி டீமைக் கலைத்தது அண்ணாவுக்கு மகிழ்ச்சியே.


Krishna
அக் 07, 2025 06:10

Very True.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை