உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தீயால் 10 ஏக்கர் வனம் நாசம்: காரணமான நால்வர் கைது

தீயால் 10 ஏக்கர் வனம் நாசம்: காரணமான நால்வர் கைது

தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல், வனத்துறையினர் திணறுவதாக கூறப்படுகிறது.நீலகிரி மாவட்டம், குன்னுாரை அடுத்த, பந்துமி, 'பாரஸ்ட் டேல்' பகுதியில், மூன்று நாட்களாக பற்றி எரிந்த வனத்தீயால், 10 ஏக்கரில் மரங்கள், செடிகள், அரிய வகை மூலிகைகள் அழிந்தன. வனப்பகுதிக்குள் வாகனங்களில் தண்ணீர் கொண்டு செல்லும் முடியாத சூழ்நிலையில், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், தன்னார்வலர்கள் என, 70க்கும் மேற்பட்டோர் தீத்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும், கட்டுக்கடங்காமல் தீ பரவி வருவதால், வனத்துறையினர் திணறுவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், 'பாரஸ்ட் டேல் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிலர் சருகுகளை எரித்த போது தீ வனத்தில் பரவியது' என்பது தெரிந்தது.இதுதொடர்பாக, தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீல பாண்டியன், 64, சோலடா மட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் கருப்பையா, 63, மோகன், 35, ஜெயகுமார், 60, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், மாவட்ட கலெக்டர் அருணா, ஹெலிகாப்டரை பயன்படுத்தி தீயை அணைக்க, கோவை சூலுார் விமான நிலைய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதேபோல, கொடைக்கானலிலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

யானையை விரட்ட தீ

கேரள மாநிலம் மூணாறு அருகே கன்னிமலை, நயமக்காடு ஆகிய பகுதிகளில், ஐந்து காட்டு யானைகள் ஒரு மாதமாக சுற்றி திரிகின்றன. அவற்றை விரட்டும் நோக்கில் மர்ம கும்பல் காட்டிற்கு தீ வைத்ததில், மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து சாம்பலாயின. அதற்கு முன், யானைகள் வேறு பகுதிக்கு சென்று விட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராஜா
மார் 15, 2024 18:51

இந்த கைதின் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றம் வெற்றிகரமாக மறைக்கப்பட்டு உள்ளது.


Jay
மார் 15, 2024 14:57

வெயில் காலத்தில் மரங்கள் பிழைகள் காய்ந்து எளிதில் தீப்பற்ற கூடியதாக இருக்கும். காடுகளின் நன்மை கருதியும் வனவிலங்குகளின் நன்மைக் கருதையும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு காட்டு தீ ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று காடுகளில் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைப்பதையும் மது பிரியர்கள் தவிர்க்க வேண்டும்.


R GANAPATHI SUBRAMANIAN
மார் 15, 2024 12:00

பகுத்தறிவு வியாதிகள் இதை சூரியனின் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்டது என்று கூறினாலும் ஆச்சரியமில்லை. சிறையிலிடப்பட்ட நால்வரும் நிரபராதிகள். அவ்வளவு தானுங்கோ.


தெருமா அத்துமீறு
மார் 15, 2024 11:35

மிஷனரி VCK அல்லக்கைகளின் வேலை இது!


Sathyasekaren Sathyanarayanana
மார் 15, 2024 07:30

இன்றைய இன்டர்நெட் யுகத்தில் விமானப்படைக்கு உதவி கோரி கடிதம் அனுப்பி உள்ளாராம். இதுதான் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் திறமை. வெட்கக்கேடு.. இவர் அனுப்பிய கடிதம் சென்று சேர்வதற்குள் தீ பரவாமல் காத்துகொண்டு இருக்கும்.


Ramesh Sargam
மார் 15, 2024 07:27

நாளை, "போதிய ஆதாரங்கள் இல்லாததால், கைது செய்யப்பட்ட அந்த நால்வரையும் இந்த நீதிமன்றம் விடுவிக்கிறது" என்று ஒரு செய்தி வரும் பாருங்கள்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ