உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் வேட்பாளர் திருமாவளவன் வி.சி., கட்சியில் ஒலிக்கும் புதிய முழக்கம்

முதல்வர் வேட்பாளர் திருமாவளவன் வி.சி., கட்சியில் ஒலிக்கும் புதிய முழக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் வலியுறுத்த துவங்கி உள்ளது.'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு, கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கு அதிகாரம்' என்ற முழக்கத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார்.

ஐந்து கொள்கைகள்

ஆனால், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதால், ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை, வரும் சட்டசபை தேர்தலில் அக்கட்சி எப்படி அணுகப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், வி.சி., துணை பொதுச்செயலர் வன்னியரசு அளித்த பேட்டி:வி.சி., கட்சிக்கு இலக்கும், கனவும் இருக்கிறது. இலக்கு என்பது ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ் தேசியம், வர்க்க பேத ஒழிப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என, ஐந்து கொள்கைகளை சொல்ல முடியும்.கட்சியின் கனவு என்பது திருமாவளவன், ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்; முதல்வராக வேண்டும். துணை முதல்வர் பதவி அல்ல. அப்பதவி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. அப்பதவி ஒரு மாண்புக்குரிய பதவி தான்.முதல்வர் பதவி தான் அதிகாரமிக்க பதவி. எனவே, திருமாவளவன் முதல்வராகி விட்டால், இதற்கு முன் முதல்வராக இருந்தவர்களை விட சிறப்பாக பணியாற்றுவார்.

சிறந்த முதல்வர்

இனிமேல் வரப்போகும் முதல்வர்களும், திருமாவளவன் போல் சிறந்த முதல்வராக செயல்பட வேண்டும் என்பதற்கு, அவர் ஒரு முன்னுதாரணமாக இருப்பார்.இதை பெருமைக்காக சொல்லவில்லை. அவ்வளவு கூர்மையாக, அறிவுப்பூர்வமாக தமிழகத்தை வழி நடத்தக்கூடியவர் அவர். எங்களின் முதல்வர் கனவு கண்டிப்பாக நிறைவேறப் போகிறது; அதற்கான இலக்கையும் நாங்கள் அடைவோம். அதை நோக்கி தான் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். தமிழக அரசியலில் வி.சி., கட்சி முக்கிய இடத்தை அடையும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாராட்டும், விருந்தும் ஏன்?

பட்டியலின, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் ஆதிக்கச் சமுதாயத்தினருக்கு எதிராக சமீபமாக வெளிவரும் திரைப்படங்களை, திருமாவளவன் வரவேற்கிறார். விளிம்பு நிலை மக்களின் சமுதாயத்தினருக்கு ஆதரவாக எடுக்கும் படங்களை, தியேட்டர்களுக்கு சென்று பார்க்கிறார்; அந்த இயக்குனர்களை அழைத்து பாராட்டுகிறார். வீட்டில் அழைத்து விருந்து அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தி அனுப்பி வைக்கிறார். வாழை படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், நந்தன் படத்தில் நடித்த சசிகுமார், சார் படத்தை இயக்கிய போஸ் வெங்கட் போன்றவர்கள், திருமாவளவன் பாராட்டியவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆதிக்க ஜாதியவாதிகளுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் வலியை காட்டி, அச்சமூகத்தை ஆதரிக்கும் திரைப்படங்களை பார்க்குமாறு, கட்சியினரையும் அறிவுறுத்தி வருகிறார். இதெல்லாம், ஆட்சி அதிகாரம் பெறுவதற்குரிய வியூகம் என்கிறது அக்கட்சி வட்டாரம்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Suresh Gandhi
அக் 25, 2024 21:16

தைரியம் இருந்தால் தனித்து நின்று வெல்லட்டும்


Suresh Gandhi
அக் 25, 2024 21:15

தனித்து நின்று முதல்வர் ஆகட்டும்


muthu
அக் 24, 2024 19:54

Thiruma CM candidate has to win 172 seats by jointly or individually but whose party will support his CM candidate for joint alliance including DMK ADMK PMK BJP .


C Bhaskar
அக் 23, 2024 15:03

ஜாதிவெறி தலைவன்


sugumar s
அக் 20, 2024 17:02

அவருடைய கட்சிக்கு அவர் தானே முதல்வர் ????


THAMIZH NENJAM
அக் 20, 2024 15:58

தமிழ் நாட்டில் வாழும் 80 சதவீத முற்படுத்த பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பற்றி தவறாக படம் எடுப்பதை தற்போது ஒரு சிலர் தொழிலாக கொண்டுள்ளனர். அதை ஆதரிப்பவர்கள் 80 சதவீத மக்கள் வாக்கை இழப்பர்.


விஜய்
அக் 19, 2024 18:48

பகல் கனவு தில்லு இருந்தா தனித்து போட்டியிட்டு பாரு


theruvasagan
அக் 19, 2024 18:01

அது என்ன ஆதிக்க சமுதாயம். அதன் கீழ் வருவது யார் யார். தனிநபர்களா சமூகங்களா. அரசியல் இயக்கமா. பொத்தாம் பொதுவாக ஆதிக்க சமுதாயம் என்று சொன்னால் எப்படி. அவர்களை வெளிப்படையாக சுட்டிக்காட்ட தைரியம் இல்லைதானே. ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களை மட்டும் பெயரை சொல்லி பகிங்கிரமாக குற்றம் சாட்டவும் பழித்துப் பேசவும் முடிகிறேதே. அப்படியானால் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதிக்க சமுதாயத்துக்கு அடங்கி போகும் மனநிலையிலேயே இன்னும் உள்ளார்கள் என்பது தெளிவு. இப்படி எதையும் தெளிவாக குறிப்பிடாமல் ஆதிக்க சமுதாயம் என்று பூசிமெழுகுவது அவர்கள் சுய ஆதாயத்துக்காக மட்டுமே தவிர தங்கள் சார்ந்த சமுதாயத்துக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்கிற குறிக்கோளுக்காக இல்லை. இன்னமும் கூட வேங்கை வயல் விவகாரத்தில் வாய்மூடி மௌனமாக இருப்பது கூட சிலருடைய அரசியல் லாபத்துக்கு மட்டும்தான். சமுதாய அநீதிகளை எதிர்த்து வெற்றி பெறுவது என்பதை திரைப்படங்கள் வாயிலாக மட்டும் கற்பனையான நிழல் உலகத்தில் நிகழ்த்த முடியுமே தவிர யதார்த்தத்தில் களத்தில் நின்று போராடி நியாயத்தை நிலைநாட்டும் ஆர்வமோ தைரியமோ இவர்களுக்கு கிஞ்சித்த்தும் இல்லை. தங்கள் சமுதாயத்தின் உரிமைக்காக போராடும் போராளிகள் இவர்கள் அல்லர். அவர்களை வைத்து தங்களை வளர்த்துக் கொள்ளும் அப்பட்டமான அரசியல் தரகர்கள்.


Rangasamy
அக் 19, 2024 13:56

முதல்வர் பதவி எல்லா கட்சி தலைவர்களின் கனவு.ஆந்த கனவு பலிக்க இப்போதிருக்கும் கூட்டணியால் நிறைவேறாது.தனித்து போட்டியிட்டு தனது கட்சியின் பலத்தை காட்டவேண்டும்.அப்போதுதான் இது நிறைவேறும்.கூட்டணியில் இருக்கும் போது10தொகுதிகளுக்குள் போட்டியிடமுடியும்.பொதுவாக தலித் மக்கள் திருமாவை நம்பி அவர் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடுகிறார்கள்.தனித்து நின்றால் போடமாட்டார்களா?


Santhakumar Srinivasalu
அக் 19, 2024 13:51

நிறைவேறாத ஆசையை அவர் கட்சியினர் தூண்டி விட்டு அரசியல் எதிர் காலத்தை குழி தோண்டி புதைக்க பார்த்தார்கள்!


புதிய வீடியோ