உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இலக்குகளாக ஐந்து சி; கொள்கைகளாக ஆறு டி: வீ த லீடர்ஸ் அறிவிப்பு

இலக்குகளாக ஐந்து சி; கொள்கைகளாக ஆறு டி: வீ த லீடர்ஸ் அறிவிப்பு

சென்னை: 'வீ த லீடர்ஸ்' அமைப்பின், பொதுச்செயலர் அஸ்பயர் சுவாமிநாதன் அறிக்கை: கடந்த 70 ஆண்டுகளில், தமிழகம் பல அரசியல் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. பல தலைவர்களை உருவாக்கி இருக்கிறது. ஆனால், அடுத்த தலைமுறைக்கு தேவைப்படுவது, அரசியல் சிந்தனையிலும், தலைமைத்துவத்திலும், நிர்வாகத்திலும், அடிப்படை மாற்றம். அந்த உயர்ந்த நோக்கத்துடன், அண்ணாமலை வழிகாட்டுதலில் உருவானது தான், 'வீ த லீடர்ஸ்' அமைப்பு.இதன் இலக்கு ஐந்து 'சி'. அதாவது, துாய அரசியல், திறமையான நல்லாட்சி, போட்டித்திறன் மிக்க பொருளாதாரம், மனிதநேய சமுதாயம், குடிமக்கள் தலைமைத்துவம். இவற்றின், ஆங்கில வார்த்தைகளின், முதல் எழுத்துகள் 'சி'.இதுபோல, கொள்கை அடித்தளம், ஆறு 'டி'யை கொண்டது. அதாவது, தேசம், தெய்வம், தர்மம், வளர்ச்சி, ஜனநாயகம், ஒழுக்கம் ஆகியவற்றின் ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்து 'டி' . இவை, அடுத்த தலைமுறை தமிழகத்தை உருவாக்குவதற்கான, அரசியல் உறுதிமொழி.'வீ த லீடர்ஸ்', முழு அரசியல் கட்சியாக பரிண மிக் கும் பாதையில் முன்னேறுகிறது. வரும் நாட்களில் இந்த பயணம், மேலும் தெளிவான வடிவத்தை பெறும். கடந்த 1956ல் தமிழக நிலப்பரப்பு மறுவரையறை செய்யப்பட்டது. தற்போது, 2026ல், தமிழக அரசியல் எதிர்காலத்தை புதிதாக வரையறுக்கும் முயற்சியில், இணைந்திருக்கிறோம். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

rama adhavan
நவ 03, 2026 04:19

நல்ல கொள்கைகள். ஆனால் இவை டாஸ்மாக் குடித்து, போதையில் மிதந்து இலவசத்தில் பரவசம் காணும் நமது மக்களுக்கு புரியும் போது மாநிலம் குறைந்தது 5 தலைமுறைகளாவது தாண்டிவிடுமே.


சத்யநாராயண
நவ 02, 2026 15:12

இவர்களுடைய கொள்கைகள் மற்றும் இலக்குகள் விரைவில் உயிரோட்டம் பெறட்டும் வாழ்த்துக்கள்


சந்திரன்
நவ 02, 2026 13:52

இவர்கள் எல்லாம் பிரிட்டன்,U.S மாதிரியான நாடுகளில் அமைப்பு தொடங்கி இருக்க வேண்டிய நபர்கள்! தெரியாத்தனமா தமிழ்நாட்டுல தொடங்கீட்டாங்க.


Ketheesh Waran
நவ 02, 2026 09:44

இந்த இலக்குகளும் கொள்கைகளும் தமிழக மக்களுக்கு புரியும்படியாக இல்லை


delhikkaran
நவ 02, 2026 06:11

தமிழ் நாட்டில் 60% பாமர மக்கள்தான். கட்சியின் பெயரும் கொள்கைகளும் ஏதோ பிசினஸ் ஸ்கூல் மாணவர்களுக்கு চলাথো போல் உள்ளது.. முதலியார் கட்சி பெயரை மாற்றுக..


GUNA SEKARAN
நவ 02, 2026 07:42

இவற்றை கிராம அளவில் கொண்டு சேர்கிற வேலையை நாம் தலைவர்கள் வி தி லீடர்ஸ் அமைப்பு செய்து விடும். உங்களுக்கு ஏன் சிரமம்


ம பு மன்னார்சாமி
நவ 02, 2026 10:37

முதலியார் கட்சியா...இது இல்லையே? ஏதோ ஒருத்தர் ஷண்முகம்னு பேரு ஏதோ இந்திய ஜஸ்டிஸ்ட் பார்ட்டினு கட்சி நடத்துராரு. அவர முதலியார்னு சொல்றாங்க.


Venuviswanathan Pa
நவ 02, 2026 18:05

"முதலில்" என்று படிக்கவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை