உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சுங்கக்கட்டணம் செலுத்தக்கூட துப்பில்லாத மாஜி எம்.எல்.ஏ; வீண் தகராறால் 3 மணிநேரம் டிராபிக்

சுங்கக்கட்டணம் செலுத்தக்கூட துப்பில்லாத மாஜி எம்.எல்.ஏ; வீண் தகராறால் 3 மணிநேரம் டிராபிக்

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், -நத்தம் பரளிபுதுார் சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்த மறுத்து, பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், தன் ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதால், மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாக்குவாதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி, பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், 50. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, காரில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி நத்தம் ரோட்டில் சென்றார். நத்தம் அருகே பரளிபுதுார் சுங்கச்சாவடியில், இவரது காருக்கு கட்டணம் செலுத்துமாறு கூறினர். அப்போது, தான் முன்னாள் எம்.எல்.ஏ., எனக்கூறி, கட்டணம் செலுத்த கதிரவன் மறுத்து உள்ளார்.சுங்கச்சாவடி ஊழியர்கள், 'முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு எதுவும் கிடையாது. நீங்கள் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்' என்றனர். இதனால், கதிரவனுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கதிரவன், தன் ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் போலீசார், அவரிடம் பேச்சு நடத்தினர். போலீசார் தலையிட்டு சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேசிய பின், அவர் போராட்டத்தை கைவிட்டு, கடைசி வரை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாமல், காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த களேபரத்தால், அங்கு மூன்று மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு கிடையாது. அதைத்தான் ஊழியர்கள் தெரிவித்தனர். அவர்கள் சட்டப்படி தான் நடந்தனர். ஆனால், விதிமீறி கட்டணம் செலுத்தாமல் தான் செல்வேன் என, கதிரவன் தான் களேபரம் செய்தார்.

'லுாட்டி'

பல லட்சம் ரூபாய் செலவழித்து கார் வாங்க தெரிந்தவருக்கு, முறையாக சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த தெரியாதா? அவர் பிரச்னையில் ஈடுபட்டதால், மற்ற வாகன ஓட்டிகள் பல மணிநேரம் காத்திருந்தனர்.சாதாரண மக்கள், 'பாஸ்டேக்'கில் கட்டணம் செலுத்தி செல்லும் நிலையில், இந்த அரசியல்வாதிகள் சுங்கச்சாவடிகளில் அடிக்கும், 'லுாட்டி'களுக்கு அளவே இல்லை. அவர்களை கண்டிக்க முடியாமல், போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைப்பது இன்னும் கொடுமை.இவ்வாறு வாகன ஓட்டிகள் புலம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

S. Neelakanta Pillai
மார் 13, 2025 05:57

குற்றம் இழைத்த நபரை கைது செய்திருக்க வேண்டும். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை அவசியம்.


கிஜன்
மார் 13, 2025 03:42

இந்த பிழைப்பிற்கு ... தேவர் ஐயா ஆரம்பித்த கட்சி பேரை ஏன் வைத்திருக்கவேண்டும் .... பேசாமல் அண்ணாமலையை சென்று பார்த்து சால்வை போடுங்கள் .... அப்புறம் எல்லா சுங்கச்சாவடியிலும் பிரீ தான்


vivek
மார் 13, 2025 05:31

அதற்கு பதில் திமுகவில் சேர்ந்தால் ஓசி பிரியாணி ஃப்ரீ.....கிஜன் கூட உங்கள் கொத்தடிமை தான்..


NATARAJAN R
மார் 12, 2025 21:56

காவல் துறை ஏன் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? இது போல் நான் காரில் சென்று டோல் கட்ட மறுத்தால் காவல் துறை என்னிடம் பேச்சு வார்த்தை நடத்துமா?


M R Radha
மார் 14, 2025 07:47

முதுகெலும்புள்ள பொன் மாணிக்கவேல் போன்ற போலீசார் இருந்தால் மாஜிக்களின் கொட்டம் அடங்கியிருக்கும். இப்போதுள்ள பெரும்பாலான போலீசார் பயந்தாகொள்ளிகள்/காசுக்கு விலை போனவர்கள்


தமிழன்
மார் 12, 2025 19:41

சாக்கடையில் இருப்பதை திண்பதற்கு கிடைத்தாலும் இனாம் என்று அதில் எழுதியிருந்தால் கண்டிப்பாக திண்பேன் என இருக்கும் சாக்கடையை விட மோசமான தி பி்ண்ணி நாய்கள்


Oru Indiyan
மார் 12, 2025 19:30

இப்படிப்பட்ட செய்திக்கு கமெண்ட் போடவே அருவருப்பாக இருக்கிறது


man
மார் 12, 2025 18:51

சுங்கச்சாவடி கல்லாவில் இருந்த பணத்தை அள்ளிக்கிட்டு போகாமல் இருந்தார்களே, அது வரைக்கும் சந்தோஷப்படுங்க.


Ganapathy
மார் 12, 2025 13:03

இவனுங்ககிட்ட போலீஸ் பொறுக்கிமாதிரி நடக்கணும். பொதுமக்களிடம் போலீஸ் மாதிரி நடக்கணும்...ஆனா இது வக்குகெட்ட பயந்தாங்கொள்ளி சிரிப்பு திராவிடபோலீஸ்...இனி நாங்களும் கொடுக்கமாட்டோம்...


Ramesh Sargam
மார் 12, 2025 12:28

இந்த அரசியல்வாதிகளால் ஏட்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சட்டம் தன் வேலையை ஒழுங்காக செய்தால் இந்த பிரச்சினை இருக்காது. சட்டம் பொதுமக்களுக்கு ஒரு வழியாகவும், அரசியல் வியாதிகளுக்கு ஒரு வழியாகவும் செயல்படுகிறது. என்ன சட்டமோ போங்க. வெட்கம். வேதனை.


இறைவி
மார் 12, 2025 12:01

பார்வர்டு பிளாக் கட்சியை துவக்கிய சுபாஷ் சந்திர போஸோ அல்லது அந்த கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஐயா முத்துராமலிங்க தேவரோ இந்த நிகழ்ச்சியை கண்டிருந்தால், இம்மாதிரி ஒருவர் நம் கட்சியிலா என்று வெட்கித்து தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். அல்லது வெறி கொண்டு இந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரை அவ்விடத்திலேயே அசிங்கப்படுத்தி கொன்றிருப்பார்கள். தமிழ் நாட்டின் சாபம்.


Krishnamurthy Venkatesan
மார் 12, 2025 11:49

சட்டம் ஒரு இருட்டறை அப்பாவிகளுக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை