உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பன்றிக்கு இரையாகிறது அரசு விடுதி மாணவர்களின் உணவு: ஒரு டிரம் ரூ.500க்கு விற்பதாக குற்றச்சாட்டு

பன்றிக்கு இரையாகிறது அரசு விடுதி மாணவர்களின் உணவு: ஒரு டிரம் ரூ.500க்கு விற்பதாக குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் சமைக்கப்படும் உணவு, தரமற்ற முறையில் உள்ளதால், மாணவர்கள் சாப்பிடுவதில்லை. வீணாகும் அந்த உணவு, 'ஒரு டிரம் 5-00 ரூபாய்' என, கால்நடை மற்றும் பன்றி பண்ணைகளுக்கு விற்கப்படுவதாக, மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

65,000 மாணவர்கள்

தமிழகம் முழுதும், ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,331 பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளன. இவற்றில், 65,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். அவர்களுக்கு உணவுப்படியாக, பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,400 ரூபாய், கல்லுாரி மாணவர்களுக்கு, 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் உணவு சமைக்கப்பட்டு அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கும் முறை, உணவு எத்தனை மணிக்கு அனுப்பப்படுகிறது என்ற விபரங்களை, துறை அதிகாரிகள், 'ஆன்லைன்' வழியே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் தரமான உணவு வழங்கப்படுகிறது என, அதிகாரிகள் கூறி வருகின்றனர்.ஆனால், கள நிலவரம் வேறாக உள்ளது. விடுதிகளுக்கு அனுப்பப்படும் உணவு தரமற்றதாக உள்ளது. சுவை இல்லை எனக்கூறி, பெரும்பாலான மாணவர்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். விடுதி ஊழியர்கள் அந்த உணவை, 'ஒரு ட்ரம், 500 ரூபாய்' என, அருகில் உள்ள பசு மற்றும் பன்றி பண்ணைகளுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, சென்னை சைதாப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் விடுதி மாணவர்கள் சிலர் கூறியதாவது:ஒருங்கிணைந்த சமையலறை திட்டத்தை, விடுதிகளில் செயல்படுத்தியது முதல் தரமற்ற உணவை உண்டு வருகிறோம். இத்திட்டத்தை கைவிட வேண்டும்.

மிகவும் குறைவு

உணவுப் படியை ஒரு நபருக்கு, 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக அதிகரித்து, தரமான உணவு வழங்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், 400 மாணவர்கள் உள்ள எம்.சி.ராஜா விடுதியில், மதிய உணவு உண்ணுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. விடுதிகளில் இருப்போரில், 70 சதவீதம் மாணவர்களே, மூன்று நேரமும் சாப்பிடுகின்றனர். சீனியர்களில் பெரும்பாலானோர், மதிய மற்றும் இரவு நேர உணவை உண்பதில்லை. திருமண விழாக்களுக்கு, 'கேட்டரிங்' வேலைக்கு செல்வோர், அங்கேயே சாப்பிட்டு விடுகின்றனர். இதை விடுதி பணியாளர்களும், உணவு வழங்கும் தனியார் நிறுவனமும், குறிப்பிட்ட நேரத்திற்குள் மாணவர்கள் வராவிட்டால், உணவு முழுதையும், 'வேஸ்டேஜ்' எனக்கூறி, 'டிரம்'க்கு மாற்றுகின்றனர். பின்னர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு, ஒரு டிரம் சாப்பாடு 500 ரூபாய் என, விற்கின்றனர். தினமும் ஒன்று அல்லது இரண்டு டிரம் உணவு, பண்ணைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தரம் இல்லை

இதுகுறித்து திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த விடுதி மாணவர்கள் சிலர் கூறுகையில், 'சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில், ஒருங்கிணைந்த சமையல் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 'ஆனால், விடுதியில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் வராவிட்டால், உணவு இல்லை எனக்கூறி விடுகின்றனர். அந்த உணவை ஒரு டிரம் 350 ரூபாய் என விற்கின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சிந்தனை
மார் 31, 2025 15:08

வெளியில் ஜாதி ஒழிப்பு என்று கூவிக்கொண்டு உள்ளுக்குள் செய்யும் அக்கிரமம் இதைதான் ஆனால் இதயம் முMutடாள் பசங்க நம்பிகிட்டு இருக்காங்களே அது தான் தமாஷ்


अप्पावी
மார் 31, 2025 08:11

ஆஹா... ...யெல்லாம் வாங்கி சாப்புடற அளவுக்கு அவ்ளோ நல்லாவா சமைக்கிறாங்க?


எவர்கிங்
மார் 31, 2025 05:56

கக்கூஸ் விடிக்கையில் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா


முக்கிய வீடியோ