உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / யு.பி.எஸ்.சி., அனுப்பிய மூவர் பட்டியல்; உச்ச நீதிமன்றத்தை நாட அரசு முடிவு?

யு.பி.எஸ்.சி., அனுப்பிய மூவர் பட்டியல்; உச்ச நீதிமன்றத்தை நாட அரசு முடிவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காவல் துறை தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யை நியமனம் செய்வதற்கு, மூன்று மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரை செய்து, யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசுக்கு பட்டியல் அனுப்பி உள்ளது. தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால், கடந்த ஆக., 31ல் ஓய்வு பெற்றார்.

குற்றச்சாட்டு

இப்பணிக்கு புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பட்டியலை, யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு, தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதற்கிடையே, பொறுப்பு டி.ஜி.பி.,யாக, நிர்வாக பிரிவில் பணிபுரிந்த வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழக அரசு அனுப்பிய பட்டியல் அடிப்படையில், செப்., 26ம் தேதி, புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், டில்லியில் நடந்தது. இதில், தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின், புதிய டி.ஜி.பி.,யை நியமனம் செய்ய, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேரின் பெயர் பட்டியலை, தமிழக அரசுக்கு, யு.பி.எஸ்.சி., அனுப்பி உள்ளது. அதில், தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி ராஜிவ்குமார், காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோட் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் ஒருவரை, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும் என, யு.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது.

இதுபற்றி, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது:

டில்லியில் யு.பி.எஸ்.சி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தபோதே, 'சீமா அகர்வால், சட்டம் - ஒழுங்கு பிரிவில் குறைந்த ஆண்டுகளே பணிபுரிந்துள்ளார். கூடவே, அவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தலைவராக இருந்தபோது, உதவி இன்ஸ்பெக்டர் தேர்வை முறையாக நடத்தவில்லை.

ஏற்க மறுப்பு

சந்தீப் ராய் ரத்தோட் மீது விஜிலென்ஸ் விசாரணை நிலுவையில் உள்ளது. அதேபோல ராஜிவ்குமார் மீதும் குற்றசாட்டுகள் உள்ளன. இதனால், தற்போது பொறுப்பு டி.ஜி.பி.,யாக உள்ள வெங்கட்ராமனை, தேர்வு பட்டியலில் மூன்றாவது இடத்தில் வைக்க வேண்டும்' என்றெல்லாம், தமிழக அரசு சார்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றை, யு.பி.எஸ்.சி., ஏற்க மறுத்துவிட்டது. 'பட்டியல் அனுப்பிவிட்டு, பின், பட்டியலில் இடம்பெற்றோர் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சரியல்ல; ஏற்க முடியாது' என்றும், யு.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி., அனுப்பிய பட்டியலில் உள்ள அதிகாரிகளில் யாரை டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யலாம் என்பது குறித்து, முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சபாநாயகர் பங்கேற்கும் கூட்டம் நடத்தி, புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய வேண்டும். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, கவர்னருக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறையை அமல்படுத்த ஆட்சி மேலிடத்தில் இருப்போருக்கு விருப்பம் இல்லை. அதனால், யு.பி.எஸ்.சி., அனுப்பிய பட்டியலை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாமா என யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

மணிமுருகன்
அக் 05, 2025 00:11

யூபிஎஸ்சி என்பது மத்தியரசு சம்பந்தப்பட்டது இதில் நபர்கள் தேர்வு செய்யும் போது தான் சட்டசபையில் பேசப்பட்டு கவரடனர் கையெழுத்திட்டு போக வேண்டும் அப்படி போவது ஜனாதிபதி மூலமாக அந்த துறைக்கு போகும் அவர்கள்் சரிப்பார்த்து அனுப்புவார்கள் டி என்பிசி தான் சட்டசபையில் நறைவேற்றப்படும் அதுவும் ஜனாதிபதி போய்தான் வரும் அதில் மத்தியரசு நியமனம் இருக்காது யூபிஎஸ்சி கூற்றுப்படி தேர்வு செய்து அனுப்பி அலோசனைக் கூட்டத்தில் 3 இடத்தில் ஒருத்தரை வைத்து விட்டு அவரை ஏன் தேர்வு செய்யவில்லை மத்தியரசை குறைகூறி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க உச்சநீதிமனறம் போவது முற்போக்க பிற்போக்கா பகுத்தறிவா அலோசனைக் கூட்டத்தில் என்ன செய்தீர்கள் சிற்றுண்டி சாலைக்கு போய்விட்டார்கள் போல அவர்கள் பேசிய ஆங்கிலம் புரிந்திருக்காது ஹிந்தி தெரியாது பிறகு அரசாங்கம் உருப்படுமா


யாரோ
அக் 04, 2025 20:57

உச்சநீதிமன்றத்திற்கு சென்று செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறது விடியல். சீனியாரிட்டி படி இந்த மூவரில் ஒருவரைத்தான் ஏற்க வேண்டும். இது தான் நடைமுறை, இதுதான் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பல முறை உறுதிப்படுத்தியிருக்கிறது. அசிங்கமாக கொட்டு வாங்கப் போகிறது விடியல்


Tetra
அக் 04, 2025 20:49

உச்ச நீதி‌மன்றம் மறுக்காமல் தமிழக அரசு கேட்பதை கொடுக்கும். மேலும் யுபிஎஸ்சியை கடுமையாக கண்டிக்கும். ஸ்டாலின்னா சொம்மாவா


rama adhavan
அக் 04, 2025 22:37

உண்மை. நீங்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தால். அது உங்க கனவில்தான் நடக்கும்.


Apposthalan samlin
அக் 04, 2025 16:21

வெங்கட்ராமன் தமிழர் அவரை அப்பொய்ண்ட் பண்ண வேண்டும்


MAHADEVAN NATARAJAN
அக் 04, 2025 17:19

பெயர் வெங்கட்ராமன் என்று வைத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பெயர் பகுத்தறிவுக்கு ஏற்புடையது அல்ல


Raghavan
அக் 04, 2025 16:19

UPSC SELECTED THREE PERSONS OUT OF THE PERSONS RECOMMENDED BY THE GOVERNMENT OF TAMILNADU. UPSC HAS NOT SELECTED THE THREE PERSONS ON WINS AND FRANCISE METHOD. BY SENIORITY THESE PEOPLES HAVE BEEN RECOMMENDED BY THE UPSC AND THE TN GOVT SHOULD GIVE THE POSTINGS TO ANYONE OF THE THREE WITHOUT ANY EGO. THE SUPREME COURT WILL DEFINITELY TELL THE TN GOVT TO SELECT ANY ONE OF THE THREE RECOMMENDED BY THE UPSC. THESE ARE ALL THE TACTICS TO GAIN TIME BY FILING A CASE IN THE SUPREME COURT BY WASTING THE PUBLIC MONEY.


ஆரூர் ரங்
அக் 04, 2025 11:33

இளைஞரணி மகளிரணி மாதிரி இந்த அணியும் வைத்திருக்கும் ஒரே கோஷ்டி


Yasar Arafat Yasar Arafat
அக் 04, 2025 11:10

உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க வேண்டும்.


Ravi Kumar
அக் 04, 2025 09:46

மாண்புமிகு உச்ச நீதிமன்றம் , திருமதி சீமா அகர்வால் நியமிக்கும் . இவர்கள் அங்கு சென்றால் .....


duruvasar
அக் 04, 2025 08:50

இந்த மாதிரியான பகுத்தறிவு வழியைத்தான் யோசிக்க தோணும்.


திகழ் ஓவியன்
அக் 04, 2025 08:09

தீம்காவிக்கு ஆதரவளிக்கும் மக்களே, சிந்திப்பீர்...மத்திய அரசு ஒப்புதல் தேவைப்படும் பதவிகளுக்கே இத்தனை தில்லுமுல்லு செய்யும் விடியல் அரசு, மற்ற பதவிகளில், சிறிதாவது மக்கள்நலன் பற்றி யோசிப்பார்களா...???


Sadananthan Ck
அக் 04, 2025 11:16

நல்லது கெட்டது தெரிந்தால் மக்கள் ஏன் தீம்காவிற்கு வாக்களிக்க போகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை