உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புதிய தொழில் நுட்பத்திற்கு மாறுகிறது அரசு கேபிள் டிவி

புதிய தொழில் நுட்பத்திற்கு மாறுகிறது அரசு கேபிள் டிவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவதை தடுக்க, 'ஐபிடிவி' தொழில்நுட்பத்தில், அரசு கேபிள், 'டிவி' களமிறங்க உள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் அரசு கேபிள், 'டிவி' இணைப்பு, 36 லட்சமாக இருந்தது, தற்போது, 21 லட்சமாக குறைந்து விட்டது. 'சேவை குறைபாடே இதற்கு காரணம்' என, கேபிள் ஆப்பரேட்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு கேபிள் வாயிலாக, 160 சேனல்கள் ஒளிபரப்பாகும் என்றாலும், பெரும்பாலான சேனல்கள் சரியாக தெரிவதில்லை; ஒளிபரப்பிலும் துல்லியமில்லை; கட்டணத்திலும் பெரிய வித்தியாசமில்லை என்பதால், தனியார் கேபிளுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வருகின்றனர்.இந்நிலையில், அரசு கேபிள், 'டிவி' இணைப்பு எண்ணிக்கையை அதிகரிக்க, அதன் நிர்வாக குழு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது.இதுபற்றி, அரசு கேபிள், 'டிவி' நிர்வாகி ஒருவர் கூறியதாவது:'செட் டாப்' பாக்ஸ் பற்றாகுறையை போக்க, முதற்கட்டமாக, ஐந்து லட்சம் செட் டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்ய, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும்.மேலும், ஒயர் இணைப்பு ஏதும் இல்லாத, இன்டர்நெட் வழியாக இயங்கும், 'ஐபிடிவி' தொழில்நுட்பத்தில் களமிறக்க, அரசு கேபிள், 'டிவி' நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது. இந்த தொழில் நுட்பத்தில், 'ஜியோ, ஏர்டெல்' போன்ற பெரு நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன; தற்போது அரசு கேபிள், 'டிவி'யும் கால்பதிக்கிறது.சென்னை உட்பட பெருநகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் இணைய செயல்பாடு உள்ளதால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Meme
பிப் 04, 2024 19:48

Tele TACTV THROUGH DISH ANTENNA. IT WLL BE SUCCESSFUL


rama adhavan
பிப் 04, 2024 12:28

இது வெறும் அறிவிப்பு ஆகக் கூட இருக்கலாம். பெரும் முதலீட்டுக்கு இந்த நிறுவனம் எங்கு போகும்? முன்னாள் முதல்வர் ஒருவர் சொன்னது போல அரசு கேபிள் நிறுவனம் எப்போதும் போல அடக்கமாகத் தான் இருக்கும்.


Saai Sundharamurthy AVK
பிப் 04, 2024 11:31

சோட்டா பீம் ( தமிழ் ) டிவி சேனலை கிடைக்காமல் செய்ததால் நாங்கள் தனியார் கேபிளுக்கு மாறி விட்டோம்.☺️


VENKATASUBRAMANIAN
பிப் 04, 2024 08:31

அதெப்படி சுமங்கலி கேபிள் இதை அனுமதிக்கும். அவர்கள் கொள்ளை அடிக்க முடியாது.


Sriram V
பிப் 04, 2024 08:20

Dengue party is forcing cable operators to use only family owned company SCV. Hence government sector is loosing revenue. Why no one is filing a case against maaran family for conflict of interest


மேலும் செய்திகள்











புதிய வீடியோ