உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பெண்களுக்கு எதிரான 90 சதவீத குற்றங்கள் வெளிவருவதில்லை: ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி ஆதங்கம்

பெண்களுக்கு எதிரான 90 சதவீத குற்றங்கள் வெளிவருவதில்லை: ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி ஆதங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''பெண்களுக்கு எதிரான, 90 சதவீத குற்றங்கள் வெளிவருவதில்லை,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பேசினார்.கோவை மாவட்ட பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி., மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பேசியதாவது:பழங்காலத்தில் பெண்களின் சமுதாய பங்களிப்பு பெரியளவில் இருந்தது. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு வடமொழி காப்பியங்களில், பெண்கள் துன்பப்பட்டு உள்ளனர். எந்த காவியமானாலும், பெண்களை மையப்படுத்தியதாக உள்ளது.தமிழகத்தில், கண்ணகி தான் நீதி கேட்ட முதல் பெண். நீதி கிடைக்கவில்லை என்பதற்காக, அவர் ஒரு மாநகரையே எரித்தவர். கண்ணகி மட்டுமல்ல, மாதவியும் கற்புக்கரசியே. இந்த மண்ணில் பிறந்த பெண்கள் அனைவரும் நல்லவர்களே.பெண்களின் முன்னேற்றமே, நம் வாழ்வின் முன்னேற்றம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 10 சதவீதம் மட்டுமே வெளியே தெரிகின்றன. மீதமுள்ள, 90 சதவீத குற்றங்கள் வெளிவருவதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, டான்பிட் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஏப் 27, 2025 21:09

தமிழகத்தில் நடக்கும் 99 சதவிகித குற்றங்களும் வெளிவருவதில்லை. அநத அளவுக்கு மீடியாக்களை மிரட்டி வைத்திருக்கிறது திருட்டு திமுக அரசு.


ஆரூர் ரங்
ஏப் 27, 2025 13:03

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பத்து சதவீதமாவது வெளிவருகின்றன. ஆனால் திருமணமான ஆண்களுக்கு எதிரான 99 புள்ளி 99 சதவீத குற்றங்கள் வெளிவருவதே இல்லை. உள்ளுக்குள்ளேயே அழுது தீர்த்து விடுகிறார்கள்.


c.mohanraj raj
ஏப் 27, 2025 12:43

இதற்கு உதாரணம் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமைதான் உலகிலேயே மிகக் கேவலமான எஃப் ஐ ஆர் அதுதான் உலகிலேயே மிகக் கேவலமான விசாரணையும் அது தான் பிறகு எப்படி கொடுப்பார்கள்


Padmasridharan
ஏப் 27, 2025 12:31

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி "சிலை"க்கே நீதி கிடைக்காமல் செய்து விட்டனர். பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களை விட அதிகம் ஆண்களுக்குத்தான் அதிகாரத்தில் உள்ளவர்களால் நடக்கிறது. பாலியல் தொல்லைகள் உட்பட. எவையும் வெளியில் வரவில்லை என்றால் அவர்களை காக்கும் காவலர்கள் சரி இல்லை, அவர்களின் மேல் நம்பிக்கையில்லை என்று அர்த்தம்.


pmsamy
ஏப் 27, 2025 07:50

பத்திரிகை துறையும் சமூக ஊடகங்களும் ஒரு குடும்பத்தின் பிரச்சனையை சமூகத்திற்கு சொல்லி தனி ஒரு குடும்பத்தின் மானத்தை பாதிக்க செய்கிறார்கள் அதனால் பெண்கள் பிரச்சனை வெளியே வருவதில்லை அதிகமாக.


சுரேஷ்சிங்
ஏப் 27, 2025 06:39

சீக்கிரமே உச்சநீதிமன்ற நீதிபதியாயிடுவாரு.


அப்பாவி
ஏப் 27, 2025 06:38

அப்படியே வெளியே வந்தாலும் நீதிமன்றங்கள் தண்டிச்சு தள்ளிடற மாதிரி....


நிக்கோல்தாம்சன்
ஏப் 27, 2025 05:27

கோர்ட்டு படியேறினாலும் பெண்களை இழிவாக பேசும் அமைச்சர்கள் ஓசி கிராக்கி என்று கூறும் கட்சியினருக்கு உங்களை சார்ந்த துறையில் இருப்பவர்களால் ஒரு தண்டனையும் கொடுக்க முடியவில்லை , அதுவே பெரிய ஆதங்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை