உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செப்., 15ல் சுற்றுப்பயணத்தை துவங்கும் விஜய்; தங்கும் அறை கொடுக்க ஹோட்டல்கள் தயக்கம்

செப்., 15ல் சுற்றுப்பயணத்தை துவங்கும் விஜய்; தங்கும் அறை கொடுக்க ஹோட்டல்கள் தயக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், அடுத்த மாதம் மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்குகிறார். பயணத்தின்போது, அவர் தங்குவதற்காக, அறை கொடுக்க, ஹோட்டல்கள் தயக்கம் காட்டுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6lu4waz0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்ணாதுரை பிறந்த நாளான வரும் செப்.,15ல், தமிழகம் முழுதும், 'மக்கள் சந்திப்பு பயணம்' என்ற பெயரில் தன் பிரசார பயணத்தை துவக்க, த.வெ.க., தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக, 100 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார். அதற்கேற்ப சுற்றுப்பயண திட்டத்தை, அவரது அரசியல் ஆலோசனைக் குழு தயார் செய்துள்ளது. விஜயின் சுற்றுப்பயணத்தை டெல்டா மாவட்டங்களில் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி அல்லது நாகப்பட்டினத்தில், மக்கள் சந்திப்பு பயணத்தின்போது, அவரது பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து, விஜய் தரப்பில், மத்திய மண்டல போலீஸ் உயர் அதிகாரியிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

நெருக்கடி இது குறித்து த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது:

மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் போது, நட்சத்திர ஹோட்டல்களில் விஜய் தங்கினால், அவரை பார்ப்பதற்காக, பொதுமக்கள் கூட்டம், குவியும். அவர்களை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு சிரமம் ஏற்படும். மேலும், கூட்டம் குவிந்தால், ஹோட்டலுக்கும், அதில் தங்கியிருக்கும் மற்றவர்களுக்கும் நெருக்கடி ஏற்படும் என காரணங்களை கூறி, ஹோட்டல் நிர்வாகத்தினர், விஜய் தங்குவதற்கு அறைகளை வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, ஹோட்டலில் தங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், கேரவேனில் விஜய் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஜய் சுற்றுப்பயணத்திற்காக, பிரத்யேக பிரசார வேன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 'லிப்ட்' வசதி செய்யப்பட்டுள்ளது. 'ரோடு ஷோ' மக்களை சந்திக்கும்போது, அவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்று, அதன் வாயிலாக தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், ஒவ்வொரு தொகுதியிலும், 'ரோடு ஷோ' நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத் தலைநகரங்களில், பொதுக்கூட்டத்தில் விஜய் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
ஆக 31, 2025 00:59

மக்களை சந்திக்கும் பயணம் என்பதால், மக்களுடன் மக்களாக அவர்கள் குடிசை வீட்டிலேயே அல்லது ஒட்டு வீட்டிலேயே தங்களாமே... எதற்கு சொகுசு ஹோட்டல் அறை?


BHARATH
ஆக 30, 2025 16:24

இவர் மூஞ்சியை பார்த்தாலே வாந்தி வருது எனக்கு.


Kudandhaiyaar
ஆக 30, 2025 12:31

சீப்பை ஒளித்து வைத்து திருமணத்தை நிறுத்திய கதை தான் . ஹோட்டலில் இடம் கொடுக்க வில்லை எனில். 3ம் கலைஞர், 4அம அண்ணா என்று போற்றுதலுக்குரிய சனாதன கொலையாளிக்கு ஹோட்டலில் இடம் கொடுத்தபோது வராத கூட்டமா அல்லது மற்ற தங்குபவர்களுக்கு சிரமம் ஏற்படவில்லையா.


வாய்மையே வெல்லும்
ஆக 30, 2025 13:37

தீவிரவாத திராவிடிய கூட்டாளி தான் தேவையே இல்லாமல் சனாதனத்தை இங்கு பேசுவான் .


Dharma
ஆக 30, 2025 11:47

அவன் logic கே தப்பு. தாமரை இலையில்தான் தண்ணீர் ஒட்டாது. தாமரை மலர்வதே தண்ணீரில்தான் தான். தாமரை மலரில் தண்ணீர் தேங்கும்.


BHARATH
ஆக 30, 2025 11:13

கழுவி ஊத்த தயாராக இருக்கும்.


Subburamu K
ஆக 30, 2025 07:54

Tamizhagam peoples are enjoying very good free entertainments from the political jokers flooded in the state. But votes are always for sale only.


R SRINIVASAN
ஆக 30, 2025 07:03

EPS அவர்கள் இந்த நேரத்தில் வறட்டு கெளரவம் பார்க்காமல் அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த அதிமுகவினரை கட்சியில் சேர்த்தால் வெற்றி இலக்கு எளிது. பிஜேபி யில் உள்ளவர்கள் அடித்தட்டு மக்களை நேரில் சந்தித்து மோடி அரசின் சாதனைகளை எடுத்து சொல்லவேண்டும். பிரதமர் மோடியை சந்திக்க தமிழ் நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் ஆவலாக இருக்கிறார்கள். பிஜேபியை எதிர்த்து காங்கிரஸ் எதிர் உரையாற்றுவார்கள். அது அவர்களுக்கு கேடாய் முடியும். ஏன் என்றால் அவர்கள் காமராஜரைப்போல் இல்லை.


Oviya Vijay
ஆக 30, 2025 06:54

இவருக்கு இவரே விளம்பரம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்றைக்குமே இல்லை. ஏனெனில் இவரது ஒவ்வொரு அசைவையும் மீடியாக்கள் தானாக செய்திகளாக்கி இவருக்கு விளம்பரம் தேடித் தரும்...


vivek
ஆக 30, 2025 07:28

எங்களுக்கு முட்டு ரொம்ப முக்கியம்....


oviya Ajith
ஆக 30, 2025 08:56

இதைத் தான் win win யுக்தி என்று சொல்வார்கள்.


vivek
ஆக 30, 2025 09:02

ஓவியரே. அவரு தங்க இடம் இல்லையாம்....கொஞ்சம் ஏதாவது....


angbu ganesh
ஆக 30, 2025 09:43

போற போக்க பார்த்த ஏதோ ஒரு சீட்டு கெடச்சிடும் போல சமீபத்திய மாநாடு பாத்திங்களா எல்லா இடத்திலேயும் நிக்கறாராமே ஏன் ஜோசப் விஜய்ன்னு சொல்லிக்கலாமே விஜன்னு ஏன் சொல்லிக்கணும்


சாமானியன்
ஆக 30, 2025 06:36

த.வெ.க கட்சித் தொண்டர்களிடம் சுயகட்டுப்பாடு இல்லை. மாநாட்டில் அத்தனை சேர்களை உடைத்ததை பார்த்தபின்னும் எவனாவது ரூம் தருவானா ? விஜய் நல்லவர்தான். அவங்க கட்சிக்காரங்க போக்கிரியா இருந்தால் அமைதி கெடுமே?


பழனி ராஜா
ஆக 30, 2025 06:36

லாட்டரி மார்ட்டின் துணையோடு இயங்கும் ஜோசப் விஜய் தமிழகத்தை எப்படி ஆட்சி செய்வார். கருணாநிதி பின்னால் இயங்கிய லாட்டரி கும்பல் இப்போது ஜோசப் விஜய் பின்னால் இருந்து இயங்கும்.


pakalavan
ஆக 30, 2025 06:43

போன ஆட்சியில் எடப்பாடியோட பினாமிகள் ஒரு நம்பர் லாட்டரி தமிழ்நாடு முழுசும் வித்தானுங்க, அப்போது பழனி எங்கபோனீங்க


சமீபத்திய செய்தி