உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கடந்த 5 ஆண்டுகளாக செயல்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு, மது போதை மறுவாழ்வு மையங்கள் எத்தனை செயல்படுகின்றன போன்ற விபரங்களை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை நிலையூர் மேகலா தாக்கல் செய்த பொதுநல மனு: வடிவேல்கரையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நிலையூருக்கு மாற்றம் செய்ய உள்ளனர். அருகில் குடியிருப்புகள், பள்ளி அமைந்துள்ளது. மது அருந்துவோரால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். கடையை நிலையூருக்கு மாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: ஆண்டுதோறும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு தெரிவித்தது. குறிப்பிட்ட பகுதியில் மது விற்பனை குறைந்ததும் வேறு இடத்திற்கு டாஸ்மாக் கடை மாற்றம் செய்யப்படுகிறது. மக்கள் நல அரசு என்பது வெறும் வார்த்தை அல்லது கொள்கை அளவில் மட்டும்தானா, ரேஷன் கடைகள் சில கி.மீ.,துாரத்தில் அமைந்துள்ளன.அதை தேடி கண்டுபிடித்து பொருட்கள் வாங்கச் சென்றால் நீங்கள் வசிக்கும் பகுதி இக்கடையின் அதிகார வரம்பிற்குள் வராது என்கிறார்கள். தெருக்கள் தோறும் டீக்கடைகள் உள்ளன. அதுபோல் நினைத்த நேரம் மது அருந்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் அருகருகே துவக்கப்படுகின்றன. இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கடந்த 5 ஆண்டுகளாக செயல்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு, மது போதை மறு வாழ்வு மையங்கள் எத்தனை செயல்படுகின்றன போன்ற விபரங்களை தமிழக அரசு தரப்பில் ஜூன் 23ல் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பிறப்பித்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.தஞ்சாவூர் அரசப்பன், ''தஞ்சாவூர் எம்.கே.எம். ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அருகே கோயில் உள்ளது. டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்,'' என பொதுநல மனு தாக்கல் செய்தார்.அரசு தரப்பு: டாஸ்மாக் அமைந்துள்ளதில் விதிமீறல் இல்லை. இடையூறு இல்லை.மனுதாரர் தரப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூன் 15, 16ல் தஞ்சாவூர் வந்தபோது எம்.கே.எம். ரோடு டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: எப்போது வி.ஐ.பி.,கள் வந்தாலும் இப்பகுதி டாஸ்மாக் கடை மூடப்படுமா, ஜூன் 15, 16ல் எதற்காக அக்கடை மூடப்பட்டது என்பது குறித்து தஞ்சாவூர் எஸ்.பி., ஜூன் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜூன் 19, 2025 20:56

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை கேட்பதுபோல, மது பழக்கத்திற்கு ஆளாகி இறந்துபோனவர்கள் எண்ணிக்கையையும், இறந்துபோனவர்களால் தாலி அறுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையையும் நீதிமன்றம் கேட்கவேண்டும்.


ems
ஜூன் 19, 2025 20:42

முற்றிலும் உண்மை...


R Gopalan
ஜூன் 19, 2025 18:52

10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குவது குறித்து கேள்வி கேட்க தவறி விட்டார்கள். அந்த பணம் எங்கே செல்கிறது?


krishnan
ஜூன் 18, 2025 23:48

சாராய போதை கடை திறப்பது எதற்கு? போதை மறக்க, அதன் அருகில் மறு வாழ்வு மையம் எதுக்கு?


ராமகிருஷ்ணன்
ஜூன் 18, 2025 20:56

கடைகள் எத்தனை என்று கணக்கிடுவதோடு எத்தனை கள்ளகணக்குகளில் விற்பனை செய்யப்படுகிறது, வரிஏய்ப்பு எவ்வளவு, பாட்டில் கணக்கு, எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கணக்கு, யார் யாருக்கு பங்கு பணம் போகிறது, கரூர் கேங் கணக்கு என்று அலசி ஆராய்ந்து திமுகவின் விஞ்ஞான ஊழல் கணக்குகள் குறித்த எல்லா விபரங்களை வெளியிட வேண்டும்.


lana
ஜூன் 18, 2025 13:59

அப்படியே இந்த bottle க்கு 10 ருபாய் பற்றி விசாரிக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 17:24

அவங்க நாளை நடைபயிற்சி செல்ல வேண்டாமா?


Oviya Vijay
ஜூன் 18, 2025 11:03

நண்பர்கள் மத்தியில் சும்மா ஒரு ஜாலிக்கு தான் என்று ஆரம்பித்து வாழ்க்கையையேத் தொலைக்கும் தற்கால இளைஞர்களை பார்க்கும் போது மனம் ரணமாகிறது. அக்காலத்தில் தமக்கு தெரிந்த யாராவது பார்த்து விடுவார்களோ என்று மனதில் அச்சம் இருக்கும். ஆனால் இந்த தலைமுறையோ... மது அருந்துவதை அழகாக வீடியோ போட்டோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிடுவதை பெருமையாகப் பார்க்கும் உலகமாக மாறிவிட்டது... தொழில் சம்பந்தமாக உலகம் முழுதும் பயணப்பட ஆரம்பித்து விட்ட நமக்கு எங்கிருப்பினும் சுய ஒழுக்கம் என்பது மிக முக்கியம். வெளிப்புற தொந்தரவுகள் வற்புறுத்தல்கள் இருப்பினும் நம்மை நாமே தவறிழைக்காதவாறு கட்டுப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்கும் நம் சுற்றத்திற்கும் தானேயன்றி வெளி நபர்களுக்கு அல்ல.


vivek
ஜூன் 18, 2025 13:57

கடையை குறைப்போம் என்று சொல்வதை விட்டு எதுக்கு உமக்கு இந்த புரியாத மாறி பெரிய டயலொக்


ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 10:51

விடியல் பொய் டேட்டா மட்டுமே குடுப்பாரு. டாஸ்மாக் 12 மணிக்குத்தான் திறக்கிறது. ஆனால் 24 மணிநேரமும் ஓப்பனாக சரக்கு கிடைக்கிறது. லைசென்ஸ் இல்லாத பார்கள் டாஸ்மாக் கடைகளிலேயே கணக்கில் வராத போலி சரக்கு விற்பனையாகிறது. இதிலுள்ள ஊழலை அமலாக்கப் பிரிவு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதாம். கொஞ்ச நாள் உளுத்துப் போன சட்டத்தை ஓரங்கட்டிவிட்டு பொதுமக்கள் நலனை மட்டும் நினைக்கவும். ஜெய் ஹிந்த்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை