உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எங்களிடம் சொன்னால் குறைந்து போய் விடுவீர்களா?: துரைமுருகனிடம் மல்லுக்கட்டும் செல்வப்பெருந்தகை

எங்களிடம் சொன்னால் குறைந்து போய் விடுவீர்களா?: துரைமுருகனிடம் மல்லுக்கட்டும் செல்வப்பெருந்தகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''எங்களிடம் இருக்கும் கோவணம் சுயமரியாதை மட்டும் தான். அதையும் விட்டு விட வேண்டுமா,'' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். கடந்த சில நாட்களுக்கு முன், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, உபரி நீர் திறந்து விடப்பட்டது. கடும் சாடல் இத்தகவல் அறிந்ததும், அங்கு சென்ற அத்தொகுதி எம்.எல்.ஏ.,வும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை, 'ஏரியில் தண்ணீர் திறக்கப்படும் தகவலை, என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை' என, அதிகாரிகளை கடிந்து கொண்டார். அப்போது, 'பொதுப்பணித் துறையில் ஒரு அயோக்கியன் உட்கார்ந்திருக்கிறான். வெறிப் பிடித்துபோய் இருக்கிறது இத்துறை. ஏரி திறப்பதை தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு சொன்னால் குறைந்து போய் விடுவீர்களா' என, கடுமையாக சாடினார். அவர் பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. 'பொதுப்பணித் துறையில் ஒரு 'அயோக்கியன்' இருப்பதாக யாரைச் சொல்கிறார் செல்வப்பருந்தகை' என, அ.தி.மு.க., கேள்வி எழுப்பியது. இதற்கு நேற்று முன்தினம் ராணிப்பேட்டையில் பேட்டியளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், 'செல்வப்பெருந்தகை போன்ற அரசியல் கட்சித் தலைவர், இப்படி சொன்னதற்காக வருத்தப்படுகிறேன். 'உண்மையை தெரிந்து கொண்டு பேச வேண்டும். பருவ மழை முடிந்து, மீண்டும் பருவமழை துவங்கும்போது, மேட்டூர் அணை நிரம்பியிருந்தால் தான் முதல்வர் நேரில் சென்று திறப்பார். மற்ற காலங்களில் அங்கிருப்பவர்கள் தான் திறப்பர்' என்றார். சுயமரியாதை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று, செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: பொறுப்புள்ள, மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியது, மிகவும் வருத்தமாக இருக்கிறது. என்னை கேட்டுவிட்டுதான், செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க வேண்டும் என சொல்லவில்லை. திறப்பதற்கு முன், தகவல் சொல்ல வேண்டும் என்றுதான் கேட்கிறேன்; இதை கேட்பதே தவறா? அதிகாரிகளை கேள்வி கேட்பதைக்கூட, அமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு இருக்கும் கோவணமே சுயமரியாதைதான்; அதைகூட விட்டுவிட வேண்டுமா? 'ஏரி திறப்பை எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு சொல்வது கட்டாயம் அல்ல' என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியெனில், மக்கள் பிரதிநிதிகளை விட, அதிகாரிகள் மேலானவரா? வருத்தம் ஸ்ரீபெரும்புதுாரில் நகராட்சி தலைவர், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் இருவர் ஆகியோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். 'செம்பரம்பாக்கம் ஏரி திறக்கும்போது, ஏன் அழைக்கவில்லை. பட்டியல் இனத்தைச் சேர்ந்தோர் என்பதால் அழைக்கவில்லையா?' என, அவர்கள் கேட்கின்றனர். இதுதான் பிரச்னையே. அதிகாரிகளுக்கு ஆதரவாக மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசுவதும், தவறு செய்து விட்டு, அதை நியாயப்படுத்துவதும் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

நிக்கோல்தாம்சன்
அக் 28, 2025 07:31

வெள்ளம் அதிகரிக்கும் நேரத்தில் மதகுகளை திறக்கவேண்டும், அதனை விட்டு காத்திருந்தால் மக்களின் உயிர்தான் போகும், இவனையும் தெரிந்து எடுத்தார்களே அவர்களை சொல்லவேண்டும்


Madhavan
அக் 26, 2025 20:25

கழகக் கண்மணிகள் ஆட்சிக்கு வரும்வரை பொதுப் பணித் துறை அதிகாரிகள்தான் அனைத்து அணைக் கட்டுகளிலும் மதகுகளை உரிய காலத்தில் திறந்து கொண்டிருந்தனர். தமிழகத்தின் அனைத்து பாசன வாய்க்கால்களிலும் கோடை தவிர அனைத்து பருவங்களிலும் நீர் ஒழுங்காக வந்து கொண்டிருந்தது. விவசாய நிலங்கள் மனைகளாக மாறிய பின்னர் கிராமப்புற வாய்க்கால்கள் பல அடைபட்டுப் போயின. மழை பொழியாத காலங்களில் காவிரியில் நீர் தருவதில்லை என கர்நாடக அரசைக் குறை கூறுவார்கள். இயல்பான மழைப் பொழிவு இருந்து விவசாயம் நடந்தால் உரிய காலத்தில் அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்துவார்கள். மழைக்கான அறிகுறிகள் அறிவிப்புகள் வந்தாலும் உடனடியாகக் கொள்முதல் செய்ய முன்வர மாட்டார்கள். கடல் கொந்தளிப்பது காற்று பலமாக வீசப் போகிறது எனில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பவர்கள் விவசாயிகள் அறுவடையை துரிதமாக்க எந்த அறிவிப்பும் தருவதில்லை. கொள்முதல் குறித்தும் அறிவிப்புகள் வருவதில்லை. வெற்றுத்தரையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கிறார்கள். வயல்களின் உதவி இல்லாமலேயே பயிர்கள் முளைக்கின்றன. ஒரு பக்கம் விவசாயி மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகிய நெற் கதிரை உயர்த்திப் பிடித்து தொலைக் காட்சியில் காட்டுகிறார். இன்னொரு பக்கம் ஒரு மக்கள் பிரதிநிதி அணை திறப்பு நிகழ்ச்சி தனக்கு தெரிவிக்கப் படவில்லை என்கிறார். நல்ல வேளை மழை வரப் போவது குறித்து தனக்கு எவரும் தெரிவிக்கவில்லை எனச் சொல்லவில்லை. இதற்குள் வேறு ஒருவர் இந்த முறையாவது இழப்பீடு தொகையை மத்திய அரசு முழுமையாகத் தர வேண்டும் என ஆரம்பித்துள்ளார். இப்படித்தான் உள்ளது நிலைமை.


jay
அக் 26, 2025 18:07

thavarana ninaippile irukkarar


நிக்கோல்தாம்சன்
அக் 26, 2025 15:23

யோவ் காங்கிரஸ்ஸு , உன்னிடம் சொல்லிவிட்டு திறந்திருந்தா என்னடா செய்வாய் ? இதெல்லாம் தேவையா?


ponssasi
அக் 26, 2025 13:22

தமிழகத்துல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு, நீங்க ஒரு தேசிய கட்சி மாநில தலைவர் எவ்வளவோ பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கலாம் அதையெல்லாம் தவறவிட்டுவிட்டு தொகுதியில் நடக்கும் சாதாரண அலுவலை பிரச்னையாக்கி தேர்தல்நேரத்தில் தன் இருப்பை காட்டுகிறார் செல்வப்பெருந்தகை. மக்கள்தான் பதில்சொல்லவேண்டும் வாக்குகளாக.


VenuKopal, S
அக் 26, 2025 11:14

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் முதலில் மதகுகள் திறக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் வரும்வரை பொதுமக்களின் உயிருடன் விளையாட முடியாது. மேலும் மக்கள் பிரதிநிதிகள் oru ஏஜெண்டு போல தான். அதிகாரிகள் மட்டுமெ 60 வயது வரை அல்லது பணி ஓய்வு பெறும்வரை நிர்வகித்து வருகிறார்கள்...


theruvasagan
அக் 26, 2025 10:23

ஓவரா பொங்குனா அது கூட தங்காது.


ஆரூர் ரங்
அக் 26, 2025 09:30

மேலிட மருமகனை மகிழ்விக்க துரையை சாடுகிறார். எடுபடாது.


ராமகிருஷ்ணன்
அக் 26, 2025 09:04

கொத்தடிமை அல்லக்கைகள் அளவுக்கு அதிகமாக கூவ கூடாது. அடக்கி வாசி


SUBBU,MADURAI
அக் 26, 2025 07:51

செல்வப்பெருந்தொகை, குருமாவளவன் போன்ற தாழ்வான்களை திமுக என்றைக்குமே மதித்தது இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை