உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இல்லீகல் பார்கள் அதிகரிப்பு; வரி செலுத்தும் ஓட்டல்கள் பாதிப்பு!

இல்லீகல் பார்கள் அதிகரிப்பு; வரி செலுத்தும் ஓட்டல்கள் பாதிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில், அரசுக்கு அதிகளவில் வருவாய் செலுத்தும் ஓட்டல் பார்களுக்கு மூடுவிழா நடத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 'இல்லீகல் பார்'கள் அதிகரித்து வருவதாக ஓட்டல் உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.டாஸ்மாக் மது விற்பனை மூலமாக, தமிழக அரசுக்கு கடந்த ஆண்டில், ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 4800க்கும் அதிகமான மதுக்கடைகளில் தான், மிக அதிக அளவிலான மது விற்பனை நடக்கிறது. இவற்றைத் தவிர்த்து, கிளப் மற்றும் ஓட்டல் பார்கள் ஆகியவற்றுக்கும் டாஸ்மாக் மூலமாகவே மது விநியோகிக்கப்படுகிறது.இவற்றில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மது வகைகள், அரசால் நேரடியாக விற்கப்படுவதால், அவற்றுக்குக் கூடுதல் வரி எதுவும் விதிக்கப்படுவதில்லை.ஆனால் கிளப்களில் இயங்கும் பார்களுக்கு, மது பான விலையில் ஒரு சதவீதம் செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது. ஓட்டல் பார்களுக்கு, இந்த ஒரு சதவீத செஸ் வரியுடன் 14.5 சதவீதம் 'வாட்' வரியும் சேர்த்து வசூல் செய்யப்படுகிறது.தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஓட்டல்களில், 836 ஓட்டல்களில் மட்டுமே, பார் நடத்துவதற்கான எப்.எல்.3 லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.இந்த லைசென்ஸ் பெறுவதற்கு, இத்தனை அறைகள் இருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிறைய விதிமுறைகள் உள்ளன. இந்த லைசென்ஸ்சை ஆண்டுதோறும் புதுப்பிக்கவும் வேண்டும்.ஓட்டல்களின் அந்தஸ்தைப் பொறுத்து, ரூ.5 லட்சம், ரூ.6.5 லட்சம் ரூ.10 லட்சம், ரூ.25 லட்சம் (24 மணி நேர மது விற்பனைக்கான லைசென்ஸ்) வீதமாக, லைசென்ஸ் புதுப்பித்தல் கட்டணமும் செலுத்த வேண்டும். மது விற்பனையே நடக்காவிட்டாலும், இந்த லைசென்சை புதுப்பிப்பதற்கு, இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை.இதனால் தான், மற்ற இடங்களை விட, ஓட்டல் பார்களில் மது பானங்களின் விலை, பல மடங்கு அதிகமாகவுள்ளது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்பு, ஓட்டல் பார்களின் மது விற்பனை குறைந்துள்ளது.மது பானங்களுக்கு செஸ், வாட் மற்றும் உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., என பல கோடி ரூபாய் வரிகளைச் செலுத்தி, அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் தங்களுடைய ஓட்டல் தொழிலைக் காப்பதற்கு, அரசு முன் வரவில்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.எப்.எல்.,2 பார்களுக்கு லைசென்ஸ் வாரி வழங்குவதையும், 'இல்லீகல்' மது விற்பனையையும் நிறுத்துவதே, இப்பிரச்னைக்குத் தீர்வாகும்.

போலீஸ் மவுனத்தால் வேதனை

சமீபகாலமாக, கிளப்களுக்கான எப்.எல்.,2 பார் லைசென்ஸ்களும் வாரி வழங்கப்பட்டு, அங்கும் டாஸ்மாக் மதுக்கடைக்கு இணையாக மது விற்பனை நடக்கிறது.நகரங்களிலும், புறநகரப் பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் 'தாபா'க்கள் பெயரிலும், எப்.எல்.,2 பார்களிலும், டாஸ்மாக் பார்களிலும் 24 மணி நேரமும் 'இல்லீகல்' ஆக மது விற்பனை நடந்து வருகிறது. இந்த தாபாக்களிலும், பார்களிலும், மான் கறி, உடும்புக்கறி, முயல் கறி, காட்டுப்பன்றிக் கறி என சட்டவிரோதமாக உணவுப் பொருட்களும், விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ஓட்டல் பார்களில் மது விற்பனை மட்டுமின்றி, உணவகங்களின் விற்பனையும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று, ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், போலீஸ் அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும், பெயரளவில் கூட நடவடிக்கை எடுக்கப்படுவதேயில்லை. -நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Anantharaman Srinivasan
ஜன 16, 2024 22:55

இல்லீகல் பார்கள் அதிகரிப்பு வரி செலுத்தும் ஓட்டல்கள் பாதிப்பு செய்தி டாஸ்மார்க் கடைகளை மூடின மாதிரியும் ஆச்சு. குடிகாரர்கள் தெருவில் ஒரத்தில் குடிப்பதை தடுத்தது போலவுமாச்சு. அதாவது ஆடு மேச்சது போலவும் ஆச்சு.. அண்ணனுக்கு பெண்ணு பாத்தது போலவுமாச்சு.


Anantharaman Srinivasan
ஜன 16, 2024 22:47

திராவிட கட்சி சிறு சிறு தலைவர்களெல்லாம் எத்தனை நாட்கள் தான் கொடிபிடித்து கோஷம் போட்டு ஏமாறுவர் அவர்களும் தொழில் அதிபர்களாக மாற இதுதான் ஈசியான வழி.


g.s,rajan
ஜன 16, 2024 17:36

Instead of Factories doing other Businesses Bars can be ed which yields very High Revenue.


sankar
ஜன 16, 2024 17:17

ஆட்சியே இல்லீகல் ஆட்சிதான் - இதில் பேசி பயன் இல்லை - ஏமறா மன்னன் - ஏமாறுவான் மக்களால்


Ram pollachi
ஜன 16, 2024 10:55

விடுதிகள், உணவகங்கள் மூலம் மாதம் ஒரு முறை மாமூல் ஒழுங்காக மத்திய, மாநில அலுவலகங்களுக்கு சென்று விடும் வரியை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. குடிப்பவர்களுக்கு தடையில்லா சரக்கு வேண்டும் அவ்வளவு தான்.


GMM
ஜன 16, 2024 10:08

அரசு என்றால் ஆளும்கட்சி என்று மரபாகி விட்டது? முதல் போனி திராவிட ஆளும் கட்சிக்கு. செஸ், வாட், gst எல்லாம் அரசுக்கு. கட்சி நிதிக்கு வழி? கடன் பட்டு ஜவுளி கடை, ஓட்டல்கள்… துவங்கினால் அருகில் பல ஆளும்கட்சி நடைபாதை கடைகள். அரசு நிர்வாகம், தனியார் நிறுவனத்தில் ஆளும் கட்சி தலையீடு / வசூல் அதிகம். திமுக இதில் முதல் நிலை? தடுக்க அமைப்பு இல்லை? தமிழகம் போன்ற ஊழல் மாநிலங்களில் 1000 ரூபாய் மேல் பண பரிவர்த்தனை கூடாது. அல்லது புதிய கட்சி தேர்வு தான் மாற்று மருந்து.


Sivagiri
ஜன 16, 2024 08:25

,பார் இல்லீகல்-னாலும் , ஓட்டல்-காரங்க கரைக்டா வரி கட்றாங்கன்னு எப்படி சொல்ல முடியும் ? பெரும்பாலும் வசூலித்த GST-யை கால்வாசி கூட கட்றதில்லை - ஓட்டல்கள் , மால்கள் , ஜவுளிக்கடைகள் , கூரியர் , மெடிக்கல் ஷாப் , நகைக்கடைகள் , எல்லாருக்கும் இப்போ GST-வசூல், ஒரு கூடுதல் வருமானமா ஆயிடுச்சு - மால்களும் , எலெக்டிரிகல், எலெக்ரானிக்ஸ், டிவி, கம்ப்யூடர் பிரிட்ஜ், ஏசி, முதல் சின்ன வீட்டு உபயோகப் பொருள்கள் , நகைக்கடைகளும் , மெடிக்கல் ஷாப் , GST-யை வைத்தே கொழிக்கிறார்கள். . .


Loganathan Kuttuva
ஜன 16, 2024 15:22

இப்பொழுது உள்ள நடைமுறையில் ஜி எஸ் டி காட்டாமல் ஏமாற்றினால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் .வியாபாரிகள் முறையாக வரி செலுத்துகிறார்கள் .


sankar
ஜன 16, 2024 17:18

அப்படி என்றால் வீட்டுக்கு வீடு பார் திறக்கலாம் என்று முட்டு கொடுக்கிறீரா


ராஜா
ஜன 16, 2024 06:37

மொத்தத்தில் மக்கள் பணம், உடல்நலம் ஊ... ஊ தான். இதற்கு திமுக சட்டைப்பையில் இருந்து கலைஞர் பெட்டிக்கு என்று பெயர் வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.


Mani . V
ஜன 16, 2024 06:07

இதெல்லாம் ஊழல் அரசியல்வாதிகளின், ஊழல் அதிகாரிகளின் துணை இல்லாமலா நடக்கும்?


Kasimani Baskaran
ஜன 16, 2024 05:21

செபா என்றால் பாட்டிலுக்கு பத்து. பார்களுக்கு ஒரு தொகை என்பதை கறாராக வசூல் செய்து அனுப்பி விடுவார். இப்பொழுது அதிலெல்லாம் அடிப்படை சிக்கல். பிரச்சினை பொதுமக்கள் அளவில் போகிறது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை