உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிகரிக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்

அதிகரிக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த 2021ல் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், 66 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்கள் ஆகினர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, அவரது ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்பட்டனர். அவர்கள் தனியாக செயல்படுகின்றனர். எம்.எல்.ஏ., ஐயப்பனும், பன்னீர்செல்வம் அணியில் இருக்கிறார். தற்போது, அ.தி.மு.க.,வுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, 'கட்சி ஒன்றிணைய வேண்டும்' என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், கோபி தொகுதி எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் சேர்ந்துள்ளார். இதுபோல, அவரது ஆதரவாளரான எம்.எல்.ஏ., பன்னாரியும் அதிருப்தியாளர் வரிசையில் இணைவதால், சட்டசபையில், அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Natchimuthu Chithiraisamy
செப் 08, 2025 10:53

கட்சி ஒன்றிணைய வேண்டும் என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், கோபி தொகுதி எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் சேர்ந்துள்ளார். தலைப்புக்க்காக ஒரு செய்தி திமுக சொல்லி போட்டதாக கருதலாம் அதிகரிக்கும் அதிருப்தி எம் எல் எ க்கள்


SanthaKumar M
செப் 08, 2025 22:35

நீங்க உண்மையிலேயே இங்கே உணரல EPS.in சுய மனிதன் ரவுடிசம் மற்றும் அனைவருக்கும் எதிரான தனிப்பட்ட தாக்குதல் உண்மையில் இந்தக் கட்சி ஒரு பொதுக் கட்சியா அல்லது தனிநபர் EPS கட்சியா?


mohana sundaram
செப் 08, 2025 09:48

எடப்பாடியின் ஆணவம் அந்தக் கட்சியே அழிவுப் பாதையில் கொண்டு சென்று விட்டது. எப்பொழுதுதான் அவர் மனம் மாறி பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க போகிறாரோ தெரியவில்லை.


பாலாஜி
செப் 08, 2025 08:59

பாஜக அமித்ஷாவின் திருவிளையாடல்.


pakalavan
செப் 08, 2025 07:12

2026 தேர்தல் முடிஞ்சபிறகு அதிமுகவே இருக்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை