உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  எம்.பி., தர்மருக்கு ஒரு நீதி பன்னீருக்கு ஒரு நீதியா?

 எம்.பி., தர்மருக்கு ஒரு நீதி பன்னீருக்கு ஒரு நீதியா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி., தர்மர், சென்னையில் நேற்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அவரது ஆதரவாளராக மாறினார். அ.தி.மு.க-வில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே, கடந்த 2022-ம் ஆண்டு ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. அது தீவிரமாக மாற, பன்னீர் தன் ஆதரவாளரான முதுகுளத்துார் தர்மருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டது தான் காரணம். பன்னீர் கேட்டபடி, தர்மருக்கு எம்.பி., பதவி கிடைத்தது. ஆனால், உட்கட்சி பிரச்னை தீவிரமாகி, பன்னீர் உள்ளிட்ட பலரை, கட்சியிலிருந்தே நீக்கினார் பழனிசாமி. இருப்பினும், தர்மரையும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பனையும், அவர் கட்சியில் இருந்து நீக்கவில்லை. பன்னீர் ஆதரவாளராகவே தொடர்ந்த தர்மர், சென்னையில் நேற்று மாலை, பழனிசாமியை சந்தித்து, அவரது ஆதரவாளராக மாறினார்.

இதுகுறித்து, தர்மர் கூறியதாவது:

நான் இப்போதும் அ.தி.மு.க., - எம்.பி., தான். தீயசக்தி தி.மு.க-வை அகற்ற வேண்டும் என்பதற்காகவே, பழனிசாமியை சந்தித்து ஆதரவு கொடுத்தேன். பன்னீருக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நான் தன்னிச்சையாக தான் இந்த முடிவை எடுத்தேன். பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார். பழனிசாமியை தர்மர் சந்தித்தது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறும்போது, ''பன்னீரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று குரல் எழும்பும் போதெல்லாம், எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்தவரை, எப்படி கட்சியில் சேர்க்க முடியும் என்று தான் பழனிசாமி விளக்கம் கொடுப்பார். ''ஆனால், அந்த கலவர சம்பவத்துக்கு, முதுகுளத்துாரில் இருந்து ஆட்களை இறக்கியதே தர்மர் தான். அவரை இன்று, கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பழனிசாமி சந்திக்கிறார். ஆக, பழனிசாமி கோர்ட்டில் தர்மருக்கு ஒரு நீதி; பன்னீர்செல்வத்துக்கு ஒரு நீதியா? பழசையெல்லாம் மறந்து பன்னீர்செல்வத்தையும் அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டு, கட்சியை வலிமைப்படுத்த வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Haja Kuthubdeen
ஜன 25, 2026 12:21

ஓபிஎஸ் ஒரு விசக்கிருமி...


PR Makudeswaran
ஜன 25, 2026 12:21

இ.பி.ஸ். மோதியுடன் வோட்டு கேட்கிறார். மோதிக்கு வோட்டை போடுவோம். ei.pi.s மாறமாட்டார். அவர் அவரே தான்.


Sun
ஜன 25, 2026 11:05

தருமரின் எம்.பி பதவிக்காகத்தான் அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை என்ற நிலையே வந்தது. இப்போது தருமரும் ஓ.பி.எஸ் ஐ விட்டு வந்து விட்டார். கடைசியில் ஓ.பி.எஸ்சின் இரு மகன்களாவது அவருடன் இருக்கிறார்களா? இல்லை அதுவும் இல்லையா?


சட்ட நாதன் பாபநாசம்
ஜன 25, 2026 10:06

தர்மருக்கு எந்த நிபந்தனையும் இல்லை. ops கு பசையுள்ள பதவி வேண்டும்... பழைய நிகழ்வுகள் epsகு மறக்கமுடியாதவைகளாக இருக்கலாம்


VENKATASUBRAMANIAN
ஜன 25, 2026 08:42

பன்னீர் சும்மா இருக்க மாட்டார்.


Keshavan.J
ஜன 25, 2026 07:57

எடப்பாடி அம்பை மன்னித்து திரும்ப அழைத்துச் கொண்டார் , ஆனால் வில்லை ஏந்தி எய்தவனை மறுக்கிறார். .


Mani Mani
ஜன 25, 2026 09:57

இந்த அரசியல் தேவையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை