உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ம.தி.மு.க.,வும் இரண்டாக உடைகிறதா? சத்யா துரோகி என வைகோ ஆவேசம்

ம.தி.மு.க.,வும் இரண்டாக உடைகிறதா? சத்யா துரோகி என வைகோ ஆவேசம்

''பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dsb9kku2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவர் அளித்துள்ள பேட்டி:

ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், முதன்மை செயலர் துரையும், துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவும், ஒருவருக்கொருவர் கை குலுக்கி, சமரசமாகும் நிகழ்வு நடந்தது. அப்போது சத்யா மட்டும் தான், முகம் வாட்டத்துடன், இறுக்கமாக, உட்கார முடியாமல் தவித்தபடி இருந்ததை அனைவரும் பார்த்தனர். கொஞ்ச நாட்களாக, எந்த நிகழ்ச்சிக்கு சத்யா வந்தாலும், ஒன்றும் பேசுவதில்லை. வெளிநாடுகளுக்கு வி.ஜி.பி., சந்தோஷம், அவரை அழைத்து செல்கிறார். எந்த ஊரிலாவது, நான் ம.தி.மு.க.,வை சேர்ந்தவன் என்றோ, ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் என்றோ சொன்னதில்லை. மாமல்லபுரம் தமிழ் சங்கத்தின் தலைவர் சத்யா என, சொல்லி தான் ஏழெட்டு முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். பிரபாகரனுக்கு மாத்தையா தான் விசுவாசமாக இருந்தவர். விடுதலை புலிகள் வரலாற்றில், தமிழ் ஈழம் மலர்ந்தால், மாத்தையாவை தான் முதல்வராக்குவேன் என பிரபாகரன் என்னிடம் கூறினார். ஆனால், பிரபாகரனை கொலை செய்யும் சதி திட்டத்திற்கு, மாத்தையா உடன்பட்டார். அவரிடம், 'நீ எப்படி துரோகம் செய்தாய்' என, பிராபகரன் கேட்டார். என்னுடன் மல்லை சத்யா பல போராட்டங்களில் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு காலத்தில் நன்றாக உழைத்து விட்டு, பல போராட்டங்களில் பங்கேற்று விட்டு, இறுதியில் துரோகம் செய்தவர்களின் வரலாறை படித்திருக்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.இதற்கிடையில், சென்னை மண்டல ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், இன்று பூந்தமல்லியில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கான பேனர் மற்றும் போஸ்டர்களில், மல்லை சத்யா படத்தை போட வேண்டாம் என, கட்சி நிர்வாகிகளுக்கு ம.தி.மு.க., தலைமை அலுலவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க.,வில் வாரிசு அரசியலை ஏற்காமல் வெளியேறிய, அதிருப்தி மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் மல்லை சத்யா தலைமையில் செயல்படுவது தொடர்பாக, நேற்று ஆலோசித்துள்ளனர். இதனால், ம.தி.மு.க., வைகோ அணி, மல்லை சத்யா அணி என, இரு அணிகளாக பிளவுபடுமா என்ற கேள்வியும், கட்சி வட்டாரங்களில் எழுந்து உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Thiyagarajan S
ஜூலை 11, 2025 08:03

வைகோ ஒரு கேவலமான அரசியல்வாதி என்பது மட்டுமல்ல திமுக பாமக போன்று உடும்பு அரசியலை கொண்டு வந்து விட வேண்டும் என்று நினைக்கிறார்... கூட்டணியின் பெயரில் அவர் வாங்கிய பெட்டிகள் வேறு யாருக்கும் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக இருக்கிறார் அதனால் தான் மல்லை சத்யாவை துரோகி என்று கூறியுள்ளார் வைகோ வை விட துரோகி யாரும் கிடையாது.


Karai Vijayan
ஜூலை 11, 2025 08:00

இதில் இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். ஒன்று துரோகி என்று சொன்னால் முதன் முதலில் வை கோபால் சாமியை தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் கருணாநிதிக்கு உற்ற துணையாக, மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து பல நிகழ்ச்சிகள் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்று விட்டு கடைசியில் அவருக்கு துரோகம் செய்துவிட்டு வெளியில் வந்தவர் இந்த வைகோபால்சாமி. அதனால் இவர் மல்லை சத்தியாவை துரோகி என்று சொல்வதற்கு தகுதி இல்லாதவர். இரண்டாவது திமுகவை பிளந்து விட்டு வெளியில் வந்தது மட்டுமல்லாமல் கருணாநிதியை இந்த வை கோபால்சாமி கேவலமாக பேசியது போல் எதிர்க்கட்சிகள் கூட பேசியது இல்லை. அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இப்போது திமுக மல்லை சத்தியா தலைமையில் மதிமுக வை பிளப்பதற்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது பொய்யல்ல.


Saravana Kumar
ஜூலை 10, 2025 22:56

இதுல காமெடி என்னன்னா நம்ம வைகோ ரொம்ப நல்லவர், இவர் செய்த துரோகத்தை எல்லாம் சௌகரியமா மறந்துடுவார் இவர் எண்ணம் எல்லாம் நான் என் குடும்பம் அவ்ளோதான்


Raajanna
ஜூலை 10, 2025 22:48

அறிவும் திறமையும் இருந்த புலி பூனையான வரலாறு. தமிழகத்தின் தீயசக்தி, ஈழ இன துரோகி, ஊழல் விஞ்ஞானி என ஊர்ஜிதம் செய்தும் ஈனத்தனம் செய்த நீதான் மகா துரோகி. உனக்கு ஓட்டளிக்க சென்ற அன்று எம் வீட்டில் திருட்டு. நம்பிய தமிழகத்தின் முதல் துரோகி, பிரபாகரனை குறித்து பேச என்ன தகுதி உமக்கு. கேவல பதவி, பணத்திற்காக மக்கள் விரோத ஊழல் கும்பலில் இரண்டற கலந்த நீர் பூனைகூட அல்ல. வீர தமிழ் புலித்தலைவனை ஒப்பிட்டு பேச நா கூசவில்லோயோ ??


NIyayanidhi
ஜூலை 10, 2025 21:55

இருந்த ஒரு விக்கெட்டும் காலியா? இனி அப்பனும், மவனுமே கட்சியை கட்டி ஆளுங்க ஆளில்லாத ஊரில் இரண்டு பேரும் டீ ஆத்துங்க. உங்க லட்சணம் தெரிந்து.தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஸ்டாலின் சைகோவுக்கு கொடுக்கவில்லை.


D Natarajan
ஜூலை 10, 2025 21:07

உடனே கட்சியை கலைத்து விட்டு திருட்டு திமுகவில் ஐக்கியம் ஆகிவிடலாம் , அமைச்சர் பதவியாவது கிடைக்கும்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 11, 2025 07:20

வெறும் ஐந்துபேர் இருக்கும் கட்சியை எப்படி கலைப்பது


Natchimuthu Chithiraisamy
ஜூலை 10, 2025 19:34

இவர்களும் காலம்காலமாக செய்திகளில் வருகிறார்கள் என்பது வேதனை. துரை பேரன் முதல்வர் ஆகுவான் என்று வைகோ சொல்லுவார்.


Haja Kuthubdeen
ஜூலை 10, 2025 18:55

இருப்பதே தொகுதிக்கு 10 பேரு...இதில் பிளவா!!!!


c.mohanraj raj
ஜூலை 10, 2025 18:34

சத்யா துரோகி... இவரு ரொம்ப யோக்கியன்...


Kulandai kannan
ஜூலை 10, 2025 17:24

அணுவைக் கூட பிளந்து விடலாம். அதைவிட சிறிய மதிமுக வை பிளக்க முடியாது.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 11, 2025 07:21

மதிமுக அணுவளவு சுருங்கிவிட்டது .. அதை எப்படி பிளப்பது ..


முக்கிய வீடியோ