உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஊழல்வாதிகளை பாதுகாப்பது தி.மு.க.,வின் இயல்பு: பா.ஜ.,

ஊழல்வாதிகளை பாதுகாப்பது தி.மு.க.,வின் இயல்பு: பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒரு தெளிவான நோக்கத்துடன் சட்ட மசோதாவை அறிமுகம் செய்து உள்ளது. இது, குற்றவியல் மற்றும் நேர்மையற்ற பின்னணியை உடைய நபர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளில் இடமில்லை என்பதை உறுதி செய்கிறது. '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் முதல், தமிழகத்தில் டாஸ்மாக் வரை ஊழல் மரபுகளை வைத்துக் கொண்டு, மத்திய அரசின் மசோதாவை, முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை. ஊழல்வாதிகளை பாதுகாப்பது, தி.மு.க., கூட்டணியின் இயல்பாக மாறிவிட்டது. இந்த மசோதா மீதான முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மாறாக, குற்றங்களில் இருந்து விடுபட்ட, தேசத்திற்கு சேவை செய்வதற்கே அர்ப்பணிப்புடன் செயல்படும் தலைவர்களுக்கான, நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றுகிறது. சர்வாதிகாரம் என்ற குற்றச்சாட்டும் வெற்றுத்தனமானது. பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு பதில், வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை ஆதரிக்க வேண்டும். பதவியில் இருக்கும் அமைச்சர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தன் மீதான வழக்கின் முடிவை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முடியும் என்பது புதிய சட்டத்தால் இல்லாமல் போகும். தன் அமைச்சரவையில் உள்ள ஊழல் அமைச்சர்கள், இனி தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீதியை வளைக்க முடியாது என்பதால் தான், புதிய சட்டத்தை ஸ்டாலின் எதிர்க்கிறாரோ? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

K.n. Dhasarathan
ஆக 22, 2025 20:44

நைனார்,அந்த 4 கோடி ரூபாய் உங்கள் ஓட்டுனரிடம் , கைப்பற்றப்பட்டதே அதைப்பற்றி வாயை திறக்க மாட்டேன் என்கிறீர்களே ? வழக்கம்போல அது என் பணம் அல்ல, ஓட்டுனரின் சிறுசேமிப்பா? இதில் நீங்கள் எல்லாம், ஊழல்வாதிகளை பற்றி வாயை திறக்கலாமா?


Ramesh Sargam
ஆக 22, 2025 20:39

எப்படி பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்கி, பாதுகாக்கிறதோ, அதுபோல, திமுக ஊழல்வாதிகளை உருவாக்கி, பாதுகாக்கிறது. பயங்கரவாதிகளின் தலைநகர் பாக்கிஸ்தான். ஊழல்வாதிகள் தலைநகர் திமுகவின் அறிவாலயம்.


Senthoora
ஆக 28, 2025 10:19

அப்போ ஜெயிலுக்கு போனவங்களுக்கு மந்திரிபதவி. மற்றும் ஊழல் செய்தவர்களுக்கு வாஷிங்மிஸ்ஸின் பாவ மன்னிப்பு பாஜக கொடுப்பதையும் கொஞ்சம் சொல்லுங்க.


nisar ahmad
ஆக 22, 2025 20:18

வாஷிங் மிஷின் பஜகவை மறந்துபேசுகிறார் 4 கோடி ஹவாலா பண கடத்தல் கார நாகு


Sun
ஆக 22, 2025 19:35

மோடி, ஸ்டாலின் சந்திப்புக்கு பிறகு அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ரெய்டு வலு இழந்து விட்டதே? அது என்ன ரகசியம்? யார் ?யாரை? காப்பாற்றுவது?


venugopal s
ஆக 22, 2025 18:47

கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது நிரூபித்துள்ளீர்களா? அல்லது தமிழக அரசு மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? வெறும் வெட்டி குற்றச்சாட்டு மட்டுமே சொல்வதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்!


என்றும் இந்தியன்
ஆக 22, 2025 17:45

ஊழல்வாதிகளை பாதுகாப்பது தி.மு.க.,வின் இயல்பு. அது தானே அவர்கள் கொள்ளையடிக்க / கமிஷனடிக்க உதவுகின்றது அவர்களை பாதுகாக்கவில்லையென்றால் அவர்கள் வாழ்க்கையே வீணாகிவிடும் கோடிக்கணக்கான அளவில் சம்பாதிக்க வேறு வழி என்னதான் இருக்கின்றது இதை விட்டால் ?


Tamilan
ஆக 22, 2025 17:23

ஊழல்வாதிகள் ஊழலைப்பற்றி பேசுவது பாஜாவில் சகஜம்


vivek
ஆக 22, 2025 18:01

திருட்டு திராவிட குண்டர்கள் தான் அதிகம்..tamilan அதில் ஒரு அடியாள்


Gokul Krishnan
ஆக 22, 2025 16:25

எடியூரப்பா, வியாபம் ஊழல் இதில் சம்பந்தபடவர்கள் எல்லாம் புனிதர்கள்


Indian
ஆக 22, 2025 14:53

நாலு கோடி ரயில் பணம் ??


YESPEE
ஆக 22, 2025 14:18

அஜித் பவார், ஷிண்டே போன்றவர்கள் பற்றி பேசமாட்டார்கள், ஊழல் அனைவரும் பிஜேபிஇல் தான் இருக்கிறார்கள்


nisar ahmad
ஆக 22, 2025 20:21

பஜகவுடன் இணைந்தால் அனைவரும் அவர்கள் எவ்வளவு இலட்சம் கோடிகள் ஊழல் செய்திருந்தாலும் வாஷிங் மிஷினில் தூய்மையாக்கப்படுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை