உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மக்களிடம் ஹிந்து மத தலைவர்கள் பேச வேண்டியது கட்டாயம்: பா.ஜ.,

மக்களிடம் ஹிந்து மத தலைவர்கள் பேச வேண்டியது கட்டாயம்: பா.ஜ.,

நாகப்பட்டினம்: இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும் என, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

நாகையில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது:

நம் முன்னோர், அறுவடை செய்யும் விளை பொருட்களை ஆறு வகையாக பிரித்து வைத்து, கிராம கோவிலுக்கு; கோவிலை பராமரிப்போர், விவசாய தொழிலாளர், சேமிப்பு, இல்லாதோர் என பகிர்ந்து கொடுத்தனர்.

அப்போது ஜாதிகள் கிடையாது. ஆங்கிலேயர் வந்த பின், இந்த நடைமுறை உடைக்கப்பட்டது. வரி வசூலித்தனர். அதன் பிறகு ஜாதி உருவானது. எல்லா மதமும் சம்மதம் என்பது ஹிந்து மதம். அது வாழ்வியல் முறை. எல்லா மதத்திற்கும் தாய் மதம் ஹிந்து மதம். தாய் மொழியில் கீதையை படிக்கும்போது தனி சக்தி கிடைக்கிறது. கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்து தர்மத்திற்கு எண்ணற்ற சோதனைகள் வந்துள்ளன. தற்போது, ஹிந்து மத குருக்கள் மக்களிடம் பேச வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அப்போதுதான் கிராம மக்களிடம் ஹிந்து மதம் பற்றிய புரிதல் கிடைக்கும். ஆன்மிக பற்றை இளைஞர்களிடம் உருவாக்க வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல், நம் வேலையின் மீது மட்டுமே பற்றுடன் இருக்க வேண்டும். இதுதான் கர்மா. சில இடங்களில் நாம் கீழேயும், வேறு சில இடங்களில் மேலேயும் உட்காரும் நிலை வரும். கீழே உட்கார்ந்திருப்பவர் நாளை மேலே வரலாம். மேலே இருப்பவர், நாளை கடைசியில் அமரும் நிலை ஏற்படலாம். அமரும் இடம் முக்கியமில்லை; வேலையை சரியாக செய்ய வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

pakalavan
ஆக 30, 2025 06:54

பிஜேபி காரனுங்க, மக்கள் அனைவரும் சமம் என்ற வார்த்தைய மட்டும் சொல்லவே மாட்டானுங்க


pakalavan
ஆக 30, 2025 06:53

இவன் வாயில இருந்து, அனைவரும் சமம் என்ற வார்த்தையே வராது,


T.sthivinayagam
ஆக 26, 2025 20:38

இறை பணி செய்ய அனுமதிக்கபடாத ஹிந்துக்களுக்கு மத தலைவர்கள் என்ன பேசுவார்கள்


venugopal s
ஆக 26, 2025 19:59

ஹிந்துக்கள் ஒற்றுமை அவசியம், மதமாற்றத்தை எதிர்க்க வேண்டும் எல்லாம் சரிதான். ஏற்றுக் கொள்கிறோம்.அதற்காக பாஜகவை ஆதரிக்க வேண்டும், பாஜக தான் ஹிந்து மத பாதுகாவலர் என்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது!


Priyan Vadanad
ஆக 26, 2025 19:35

அண்ணாமலை சாருக்கு காவி போட்டு திருவண்ணாமலையில் விட்டுவிட்டு வந்திடுங்கப்பா. தாங்க முடியல.


Rathna
ஆக 26, 2025 16:26

பல மூர்க்கஸ் இங்கே கூக்குரலிடுவது நாராசம்.


ஜெகதீசன்
ஆக 26, 2025 15:53

இந்து மதம் என்று சொல்லி மக்களை அணுகலாம். தமிழகத்துல சனாதனம் என்று மக்களிடம் சொல்வதை விட்டு விடனும். ஏனெனில் அது வர்ண தர்மத்தோடே பயணிக்கிறது. 69% இட ஒதுக்கீடு உள்ள தமிழகத்துல இந்து மதத்தை சனாதனம் என்று குறிப்பிடாமல் இருந்தால் இந்துக்களை ஒன்றினைக்கலாம்.


முருகன்
ஆக 26, 2025 12:19

மேலே இருந்த இவர் கிழே வந்த மாதிரி வாழ்க்கை ஒரு வட்டம்


vivek
ஆக 26, 2025 12:24

முருகன். திமுகவின் எதிர்காலம் பற்றி தெளிவாக கூறினீர்கள்


Kanagaraj Easwaran
ஆக 26, 2025 11:50

அரசியல் வாதிகள் இந்துமதத்தை குறிவைத்து அழிக்கவேண்டும் என்று பேசுவது சரியா. சொந்த நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக்குடி மக்களாக நடத்தப்படுவது சரியா? உலகெங்கும் மெஜாரிட்டி யாக இருந்து கொண்டு மற்ற வழிபாடுகள் சமயங்களை அழிக்க வேலை செய்யும் ஜிஹாதிகளுக்கும் குருசேட மிஷநரிகளுக்கும் ஒத்து ஊதுவது சரியா? மசூதியில் சர்ச்சில் இந்த கட்சிக்கு வேட்பாளருக்கு ஒட்டுப் போடுங்கள் இவருக்கு போடாதீர்கள் என்று போதனை செய் கிறார்களே . இந்த அரசு மைனாரிட்டிகளுக்கு ஆதரவான அரசு என்ரூ முதல்வரே பேசுறாரே. நாங்கள் போட்ட பிச்சையாலே இந்த அரசு இருக்கிறது என்று ஒரு பாதிரி பேசுவது சரியா. ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாது மற்றவர்களுடைய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது சரியா. இதெல்லாம் சரியல்ல என்று சொல்ல மதச்சார்பின்மை பேசுகிற எவருக்கும் திராணி கிடையாது.


sribalajitraders
ஆக 26, 2025 17:01

நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக்குடி மக்களாக நடத்தப்படுவது அரசியல் கட்சிகளால் இல்லை ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பு மக்களால்தான்


Priyan Vadanad
ஆக 26, 2025 19:44

கனகராஜன் நமது நாட்டில்தான் இருக்கிறீர்களா? உண்மைக்கு புறம்பான தகவல்களை தயவுசெய்து, உங்கள் தலைவர்களை போல பரப்பாதீர்கள். என் மக்களில் எவருமே எங்கும் இரண்டாம்தர குடிமக்கள் போல நடத்தப்படுவதில்லை. தலைவர்கள் சொல்லும் பிரம்மையிலிருந்து விடுதலை பெற்று உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.


தஞ்சை மன்னர்
ஆக 26, 2025 11:03

இன்னும் நிறைய பேசி இப்போது இருக்கும் சண்டை இன்னும் பலமாக ஆகவேண்டும்