உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முருகன் மாநாடு குறித்த வழக்கு; போலீசார் மீது நீதிபதி அதிருப்தி

முருகன் மாநாடு குறித்த வழக்கு; போலீசார் மீது நீதிபதி அதிருப்தி

மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்களை (மினியேச்சர்கள்) மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவ போலீசார் அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கலான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. ஹிந்து முன்னணி மாநிலச் செயலர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனு:ஹிந்துக்களிடம் பக்தியை அதிகரிக்கும் நோக்கில் மதுரையில் வரும் 22ல் 'முருக பக்தர்கள்' மாநாடு நடைபெற உள்ளது.முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள் மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட உள்ளன. இதற்கு, அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனுமதி மறுத்துள்ளதோடு, பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசார் மிரட்டியுள்ளனர். போலீஸ் நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசு தரப்பு: மாதிரி வடிவங்கள் வைப்பதற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதித்தால் அருகிலுள்ள வீடுகள், பள்ளிகளுக்கு இடையூறு ஏற்படும்.நீதிபதி: மதுரையில் பல மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது மனுதாரர் தரப்பு மினியேச்சர்கள் அமைத்து பக்தர்கள் வழிபட அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. இது ஜனநாயக நாடு. போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புத் தன்மையுடன் செயல்படக்கூடாது.போலீஸ் கமிஷனர் ஜூன் 9ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Indian
ஜூன் 08, 2025 12:13

நீதியரசர் புகழேந்தி அவர்களும் இந்த ஹிந்து மாநாட்டில் கலந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.


SUBBIAH RAMASAMY
ஜூன் 07, 2025 22:16

பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத போலீசின் திறமை அற்ற தன்மை இதன் மூலம் வெளியாகிறது. அவர்களை வீட்டிற்கு அனுப்ப லாமே.


lana
ஜூன் 07, 2025 17:54

அது RSS மாநாடு ஆகவே இருக்கட்டும். ஏன் அவர்கள் மாநாடு நடத்த கூடாது என்று சட்டம் இருக்கிறதா.பள்ளி பக்கத்துல டாஸ்மாக் இருக்கு. அதனால படிப்பு பாதிக்காது. இங்கு அருகே பள்ளியும் இல்லை கோவிலும் இல்லை. ஆனா பாதிப்பு ஏற்படும். நேரடியாக சொல்லுங்க இந்து மத கூட்டம் நடத்த கூடாது என்று. எங்களுக்கு பிச்சை போட்ட குரூப் உத்தரவு என்று.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 07, 2025 17:45

நம்புங்க பிரதர் இது மத சார்பற்ற நாடு , நம்புங்க பாய் இது மதசார்பற்ற நாடு


Balaji Radhakrishnan
ஜூன் 07, 2025 15:43

போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அன்னக் கைகளின் குடும்பம் உருப்படவே உருப்படாது.


RAMESH
ஜூன் 07, 2025 13:47

திக்கற்ற பொதுக்குழு.... உடன்பிறப்புகள் கூடல்.....மதுரையை காப்பற்ற முருகன் வேண்டும்..... டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபா......அதற்கும் ஒரு தீர்வு காணுங்கள் ஜட்ஜ் ஐயா....நாடு நாசமாக போகுது


Ramesh Sargam
ஜூன் 07, 2025 12:47

டாஸ்மாக் கடைகளை வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு ஸ்தலங்கள் பக்கத்தில் அமைத்தால் பிரச்சினை இல்லையா?


கோபாலன்
ஜூன் 07, 2025 12:14

கால்டுவெல் கூட்டம் மற்றும் மதமாற்ற கும்பல் இந்து சமய கோட்பாடுகளை அழித்தோழிக்கும் வேலை செய்வதை அரசும் ஆதரிப்பதை பார்க்க முடிகிறது. திராவிடம் இந்து விரோதம்!


Rama Krishnan
ஜூன் 07, 2025 12:13

வீடுகள், பள்ளிகளுக்கு இடையூரறு ஏற்படும் என்பது சாரமில்லாத வாதம். தமிழ் கடவுள் முருகனுக்கு மாநாட்டில் அறுபடை வீடுகளின் மினியேச்சர் வடிவங்கள் வைத்தால் யாருக்கும் எந்த வித இடையூறும் ஏற்படப் போவதில்லை. யதேச்சாதிகாரம்.


Mahendran Puru
ஜூன் 07, 2025 12:08

வடக்கே ராமன், தெற்கே முருகன். சங்கி மங்கிகளின் பக்தியோ பக்தி. இதில் பொம்மைகள் வைத்து நாடகம் வேறு. போடுங்கப்பா பக்தி வேஷம் போடுங்கப்பா. தமிழக ஆன்மிக பூமியில் இந்துத்வ நாடகங்கள் பலிக்காது.


Rajendran
ஜூன் 07, 2025 21:09

மகேந்திர உன் குலதெய்வ வழிபாடு எப்புடி நடக்குறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை