உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லியில் கனிமொழி ஹிந்தி பேசுகிறார்; மத்திய அமைச்சர் முருகன் தகவல்

டில்லியில் கனிமொழி ஹிந்தி பேசுகிறார்; மத்திய அமைச்சர் முருகன் தகவல்

சென்னை: 'இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க, பேச்சு நடந்து வருகிறது' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.சென்னை, நங்கநல்லுாரில் பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைத்து, அவர் அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ளன. அதற்க தயாராக வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை, தி.மு.க., அரசின் தோல்வியை, மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். வரும் 2026 தேர்தல், நமக்கான தேர்தல். இந்த தேர்தலில் பா.ஜ., கூட்டணி ஆட்சியை பிடிக்கும். மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, ரயில்வே, வங்கி தேர்வுகளை, தமிழில் எழுத நடவடிக்கை எடுத்துள்ளோம்.தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பா.ஜ.,தான். திருக்குறளை 35 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம். காசி தமிழ் சங்கமம் நடத்துகிறோம். காங்கிரஸ்- தி.மு.க., கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தமிழுக்கு எதையும் செய்யவில்லை. கனி மொழி டில்லியில் ஹிந்தி பேசுகிறார். மேகதாது அணை விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமுக தீர்வு காணும்.மீனவர்கள் நலனுக்காக, தனி அமைச்சகத்தை பிரதமர் கொண்டு வந்தார். மீனவர்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, கடந்த 10 ஆண்டுகளில், 40,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பாக் ஜல சந்தி பகுதியில், மீன் வளத்தை பெருக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்கள் வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம். மீனவர்கள் பல்வேறு காரணங்களுக்காக, திசை மாறி எல்லை தாண்டும்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். வெளியுறவுத் துறை அதிகாரிகள், உடனடியாக அவர்களை மீட்க, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். படகுகளை மீட்க பேச்சு நடந்து வருகிறது. தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பா.ஜ., சார்பில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். இதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

பல்லவி
மார் 11, 2025 09:01

படிக்காதவர்களை மந்திரி ஆக்கி விட்டு குத்துதே குடையுதே என்று சொல்லி என்ன பிரயோஜனம்


K.n. Dhasarathan
மார் 10, 2025 23:14

கனிமொழிக்கு இந்தி தெரியாது என்று யார் சொன்னது? உங்களுக்கு தெரிந்தால் பேசுங்கள், தெரியாவிட்டால் விடுங்கள், பாவம் உங்களை யாரும் குறை சொல்லமாட்டார்கள், தேவை இருந்தால், கற்று கோள்ளலாம், எனக்கு படித்தது இரண்டு மொழிதான், கற்றுக் கொண்டது இந்தி, மலையாளம் கன்னடம், தெலுகு என்று கைவசம் ஆறு மொழி இருக்கு. இதுக்காக திணிக்க கூடாது, சரியா ?


orange தமிழன்
மார் 10, 2025 21:03

அவரவர் விருப்பம் போல் கற்று கொள்ளலாம் என்றால் இப்ப இருக்கும் இரு மொழி கொள்கையில் எப்படி சாத்தியம்....தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தான் அந்த வசதி இருக்க வேண்டுமா என்பது தான் கேள்வி?... மத்திய அரசாங்கம் மிக தெளிவாக கூறிவிட்டது மும் மொழி கொள்கையில் ஹிந்தி என்ற மொழி திணிப்பு இல்லை. ..


Ramesh Sargam
மார் 10, 2025 20:34

டெல்லியில் கனிமொழி மற்றும் பல திமுக அமைச்சர்கள் ஹிந்தி சரளமாக பேசுகிறார்கள். அவர்கள் வீட்டு குழந்தைகள் தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்கின்றனர். அவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் நாம் ஹிந்தி கற்கக்கூடாது. இது என்ன அக்கிரமம், இது என்ன அநியாயம்?


சோழநாடன்
மார் 10, 2025 19:19

வாங்கிய காசுக்கு மேல கூவும் .....


பல்லவி
மார் 10, 2025 18:49

இப்போ வனவாட்டில x x மோடிக்கு கடவுச்சீட்டு பறிமுதல் செய்ய படுகிறது இதனால் தெரிவது என்ன


venugopal s
மார் 10, 2025 17:21

வட இந்தியர்களில் பெரும்பாலோனோர், தொண்ணூறு சதவீதம் பேர் ஒரு மொழிக் கல்வியில் படித்தவர்கள், ஹிந்தி மட்டுமே அறிந்தவர்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது. எனவே வட இந்தியாவில் சென்று வேலை செய்யவோ,பாராளுமன்றத்தில் அரசியல் செய்யவோ ஹிந்தி தேவைப்படுகிறது. மூன்றாவதாக ஹிந்தி கற்பதை யாரும் இங்கு தடை செய்யவில்லை, அவரவர் விருப்பம் போல் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். தமிழக அரசு ஹிந்தித் திணிப்புக்கு தான் எதிரானதே தவிர ஹிந்தி மொழிக்கோ, ஹிந்தி பேசுபவர்களுக்கோ எதிரானது அல்ல. அத்தனை அறிவு சங்கிகளுக்கு ஏது?


Ramuk Khosa
மார் 10, 2025 20:30

உளறுவாய் கோவிந்தசாமி


Oviya Vijay
மார் 10, 2025 15:34

இங்கே குறுக்கே மறுக்கே ஓடிகொண்டிருக்கும் Vivek என்னும் மெண்டலை தயவுசெய்து அவர்கள் வீட்டார் மனநல மருத்துவமனையில் சேர்த்தால் மிகவும் நன்று... களிமண் மட்டும் தலையில் வைத்துக்கொண்டு தனக்கென்று சொந்த கருத்துக்கள் இல்லாமல் அனைவரது கருத்துக்களின் மேல் தன் வன்மத்தை காட்டிகொண்டிருக்கும் ஒரு மடையன்... ஒருவருக்கு ஒருமுறை கூறலாம்... இருமுறை கூறலாம்... ஆனால் இந்த நபருக்கு நூராயிரம் முறை கூறினாலும் திருந்தாத ஜென்மம்...


vivek
மார் 10, 2025 17:29

உம் கருத்தே எமக்கு பிரதானம்...பல பேர் உம்மை தூற்றின்லும்..200 ரூபாய்க்கு உமக்கு பிரதானம்...


Barakat Ali
மார் 10, 2025 14:17

அதை சொல்ல மாட்ரியே முருகு ????


sugumar s
மார் 10, 2025 13:45

not only kani mozhi, all knows hindi. but they dont want TN people to know and make their life good