உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோர்ட் உத்தரவை மீறி மண் கொள்ளை; ஆய்வு செய்ய வந்த நீதிபதி அதிர்ச்சி

கோர்ட் உத்தரவை மீறி மண் கொள்ளை; ஆய்வு செய்ய வந்த நீதிபதி அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெ.நா.பாளையம் : கோவை மாவட்டம், சின்னதடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மண் தோண்டவோ, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மண் எடுத்துச் செல்லவோ கூடாது என, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இதை மீறி, லாரி உள்ளிட்ட வாகனங்களில் மண் எடுத்துச் செல்வது தெரிந்தால், போலீசார் வழக்கு பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், எண் 24, வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகட்டி தெக்கலுார் பகுதியில் எஸ்.ஆர்., ஜங்கிள் ரிசார்ட்ஸ் உரிமையாளர் சந்தோஷ் மற்றும் அவரது மனைவி மோட்ச பிரியா ஆகியோருக்கு பாத்தியப்பட்ட, 24 ஏக்கர் பட்டா பூமியில் மண் தோண்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட நீதிபதி நாராயணன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், கோவை எஸ்.பி. கார்த்திகேயன் உள்ளிட்டோர், 24 ஏக்கர் பட்டா நிலம் மற்றும் அதையொட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலம், ரிசர்வ் பாரஸ்ட், யானைகள் வழித்தடம் மற்றும் நீர்வழி பாதை ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.ஆய்வுக்குப் பின் நீதிபதி மற்றும் அதிகாரிகளை சந்தித்த ஆனைகட்டி பழங்குடியினர், மண் தோண்டப்பட்டுள்ள, 24 ஏக்கர் பூமியில், தங்களுக்கு சொந்தமான நிலங்கள் அதில் உள்ளன. அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், நிலத்தின் அருகே உள்ள கொடிக்கால் பள்ளம், தடுப்பணைகள் சமன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் மிரட்டப்படுவதாகவும், எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, சரமாரியாக புகார் தெரிவித்தனர்.இதே போல பழங்குடியினர் பலரும் புகார் கூறியதால், ஆனைகட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பழங்குடியினரை சந்தித்த நீதிபதி நாராயணன், கலெக்டர் கிராந்தி குமார் குறைகளை கேட்டனர்.

உரிய தொகை செலுத்தி கிரயம்

பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. அவர்களுக்கு உரிய தொகை அளித்து, சட்டப்படி கிரயம் செய்யப்பட்டுள்ளன. நிலத்தை சமன் செய்யவே தோண்டும் பணி நடந்தது. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என, எஸ்.ஆர்., ஜங்கிள் ரிசார்ட்ஸ் உரிமையாளர் சந்தோஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Subash BV
அக் 03, 2024 19:34

THIS IS A STANDARD SUITCASES POLITICS. ITS THERE EVERYWHERE IN THE NATION. GOVT SERVANTS POLITICIANS ACCUSTOMED TO IT. HOW YOU WILL RECTIFY. THINK SERIOUSLY.


NATARAJAN R
அக் 03, 2024 08:49

மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் மண் அள்ள முடியுமா? ஏதும் அறியாதவர் போல நீதிபதி உடன் அவரும் ஆய்வு செய்கிறார். நீதிமன்றம் இந்த வழக்கு முடிவுக்கு வந்து உத்தரவு பிறப்பிக்கும் போது அள்ளுவதற்கு ஒரு பிடி மண் கூட இருக்காது. எனவே ஒரு பிடி மண் கூட அள்ள கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். அள்ள மண் இல்லாத காரணத்தால் யாரும் மண் அள்ள மாட்டார்கள். அரசு நீதிமன்ற உத்தரவை உடன் நிறைவேற்றும்.


nagendhiran
அக் 01, 2024 20:43

இதெல்லாம் விடியல் சகஜம் யுவர் ஆனர்?


N Sasikumar Yadhav
அக் 01, 2024 08:40

அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனை கைதுசெய்து விசாரித்தால் அனைத்தும் தெரிந்துவிடும் ஆனால் கைதுசெய்ய தைரியமிருக்குமா திருட்டு திராவிட மாடல் அரசுக்கு


kannan sundaresan
அக் 01, 2024 08:10

நிலத்தை சமன் செய்வதற்கு பதிலாக, மண்ணை தோண்டி எடுத்து, பெரிய பள்ளம் பன்னீட்டாங்க. வெட்டிய மண்ணை எங்க போட்டாங்க? அதிகாரிகள் கேள்வி கேட்க மாட்டாங்களா? வனங்களில் resort கட்ட அனுமதி அளித்ததே தவறு


அப்பாவி
அக் 01, 2024 04:48

இத்தனை பேர் அங்கே நிக்காதீங்க. கீழே மண்ணை நோண்டி எடுத்துட்டாங்க. பூமி உள்வாங்கிடப் போகுது. ஒரு ஆய்வுக்கு இத்தனை பேரா? மண்ணை தோண்டி எடுக்கவே ரெண்டு பேர்தான் வந்திருப்பாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை