உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சீனா தந்த ஆயுதங்களை பாருங்க! எல்லையில் பாக்., போர் முழக்கம்

சீனா தந்த ஆயுதங்களை பாருங்க! எல்லையில் பாக்., போர் முழக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாகிஸ்தான் மக்கள் மற்றும் ராணுவத்தில் சிலர், இந்தியாவுடனான போரை வெறுக்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் ஆகியோரும் போரை விரும்பவில்லை. காரணம், கடந்த கால அனுபவங்கள் தான்.ரத்த ஆறு ஓடும் என கொக்கரித்த பாக்., வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோவும் நேற்று, 'போர் தேவை இல்லை' என அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளார். ஆனால், பாக்., பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தங்களுக்கு சீனா, துருக்கி நாடுகள் உதவும் என்ற நம்பிக்கையில் போருக்கு ஆயத்தம் ஆகி வருகிறார். ராணுவ தளபதி அசிம் முனீரும் போரை ஆதரிக்கிறார்.இந்தியா குறித்து அவதுாறுகளை அள்ளி விட்டு, நவாஸ் ஷெரீப் மனதை மாற்ற ஷாபாஸ் ஷெரீப் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.இந்தியா - பாக்., இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், எல்லையில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே உள்ளது. சிம்லா ஒப்பந்தம் ரத்து என பாகிஸ்தான் அறிவிப்பதற்கு முன்பே, இந்திய நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டு, தங்கள் கணக்கை துவங்கியுள்ளது பாகிஸ்தான். இந்திய ராணுவமும் பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும், ரேடார்களையும், சில தானியங்கி பீரங்கிகளையும் இந்திய எல்லையில், பாகிஸ்தான் குவித்து வருகிறது.தங்கள் ஆயுத பலத்தை காட்ட பாக்., ராணுவத்தினர், அந்நாட்டு சாலைகளில் சீன கொள்முதல் ஆயுதங்களை அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.'பாகிஸ்தானின் இறையாண்மையை காக்கவும், அதன் எல்லையை பாதுகாக்கவும், தங்கள் நீண்ட கால நண்பன் பாகிஸ்தானுக்கு உதவுவோம்' என சீனா கூறியுள்ளது. துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி அளித்து வருகிறது. இதையல்லாம் நம்பி போருக்கு தயாராகிறது பாகிஸ்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

muthu
மே 04, 2025 22:45

Let war and china will take over PAK for its war expenses.


சந்திரன்
ஏப் 30, 2025 21:38

மீசை இல்லாத முட்டா மூர்க்கனுக்கு இதை எப்படி பயன்படுத்துவது என்கிற அறிவு இருக்கா


Gurumoorthy Padmanaban
ஏப் 30, 2025 21:33

வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது. .... மன்னா நான் செய்த சங்கிலியாலயே உங்களை கட்டி போட்டு வைத்துள்ளார்கள் என்று கூறுவார் . அதற்கு வடிவேலு என்ன நீ செய்த சங்கிலியா அதை முன்னமே சொல்லி இருக்கலாமே என்று சொல்லி அறுத்து விடுவார்.... அது போல தான் சீனா தயாரிப்பும்


Ramesh Sargam
ஏப் 30, 2025 21:12

துருக்கியும், சீனாவும் மட்டும்தான் பாகிஸ்தானுக்கு உதவும். மற்ற எல்லா நாடுகளும் இந்தியாவுக்கு உதவும்.


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 30, 2025 17:21

Made in China வா அப்ப ok ok..... பாகிஸ்தான் முன்பு அமெரிக்க ஆயுதத்தை வைத்து நம்மிடம் சண்டை போட்டு தோத்து போனது இப்போ Local China make வேறு. நம் இரணுவத்தினருக்கு வெற்றி மிக சுலபம் என குழந்தைகள் கூட சொல்லி விட்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 30, 2025 14:04

இந்த ஆயுதங்கள் எல்லாம் எப்படி உபயோகிப்பது ரிப்பேர் செய்வது போன்ற தொழில்நுட்ப அறிவு உள்ளதா. போர்க்களத்தில் வந்து ஆயுதங்கள் ரிப்பேர் செய்ய பாக்கிஸ்தானால் முடியுமா. கண்காட்சியில் பொருட்கள் காட்டுவது போல் வீதிகளில் காட்டி என்ன பிரயோஜனம். உண்மை களத்தில் உபயோகிக்க வேண்டும். பார்ப்போம் எப்படியும் இந்த ஆயுதங்கள் இந்தியாவிற்கு தான் ரிப்பேர் செய்ய கொண்டு வர வேண்டும்.


Tetra
ஏப் 30, 2025 13:02

முழங்கட்டும். வெறி பிடித்த பன்றிகள் இன்னும் எத்தனை பல்லாயிரம் உயிர்கள் பறி போவதற்கு காரணமாக இருக்கப்போகின்றவோ


ram
ஏப் 30, 2025 11:22

தமிழ்நாட்டில் இருந்து திருமா, சீமந்தி, வல்லி, தமிழ் சினிமா கூத்தாடிகள் இவர்களையும் அங்கு அழைத்து கொள்ளுங்கள், இந்தியாவிற்கு எதிராக போராடுவார்கள்.


ராமகிருஷ்ணன்
ஏப் 30, 2025 10:45

சீனப் பொருட்களின் மட்டமான தரம் பற்றி தெரியாமல் பினாத்துகிறார். ரபேல் விமான தாக்குதல் பார்த்து பீதியில் பயந்து சரண்டர் ஆகி விடுவாய். இன்றோ நாளையோ நீயே எல்லா தீவிரவாதிகளையும் போட்டு தள்ளிட்டு பொணத்தை காட்டு


Karthik
ஏப் 30, 2025 07:42

டம்மி போலீஸ் மாதிரி,. இது பாகிஸ்தானின் டம்மி ராணுவம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை