உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இனி காதலர்களுக்கு கவலையில்லை திருமண சர்வீஸில் மார்க்சிஸ்ட் கம்யூ.,

இனி காதலர்களுக்கு கவலையில்லை திருமண சர்வீஸில் மார்க்சிஸ்ட் கம்யூ.,

சென்னை: 'காதல் கல்யாணம் செய்ய விரும்புபவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களிலேயே நடத்தலாம்' என, அக்கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார். துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் கவின், திருநெல்வேலியில் கடந்த மாதம் ஜூலை 27ம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்டார். பட்டியலின இளைஞரான கவினை கொலை செய்த சம்பவத்தில், பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். கவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளனர். இப்பின்னணியில், 'தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில், காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்' என, அக்கட்சியின் மாநில செயலர் சண்முகம் நேற்று தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ள தனி ஏற்பாடு இல்லை. தமிழகம் முழுதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில், இனி யார் வேண்டுமானாலும் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. திருநெல்வேலியில், ஒரே ஆண்டில் 240 கொலைகள் நடந்துள்ளன; இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை தைரியமாகக் கொண்டாடுகிற சூழல் உள்ளது. அதே சமயம், பொது சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்தி, ஜாதி ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை, வரும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இனி 'மேட்ரிமோனி' கட்சி மார்க்சிஸ்ட்களுக்கு கட்சி நடத்த, தேர்தல் செலவு செய்ய, அறிவாலய கட்சியிடம் கணக்கில் வாங்கிய பணம் போதவில்லை என தெரிகிறது. அதனால் தான், லேட்டஸ்டாக, 'மேட்ரிமோனியல் சர்வீஸ்' நடத்த துவங்கி விட்டனரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இனிமேல், 'மேட்ரிமோனி கம்யூனிஸ்ட்' என அழைக்கப்படும். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்பது கூட தெரியாமல், ஒரு கட்சியின் மாநில செயலரே இப்படியெல்லாம் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ராம ரவிகுமார், தலைவர், ஹிந்து தமிழர் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kumar
ஆக 26, 2025 18:14

சூப்பர்


ஆரூர் ரங்
ஆக 26, 2025 16:43

காதலி அமைதி வீட்டுப் பெண்ணாக இருந்தால் விரட்டியடித்து விடுவர். இல்லாட்டி சிலிண்டர் தேடி வரும்.


vijay,covai
ஆக 26, 2025 14:34

கம்மிகள் முடிந்தால் இந்துவுக்கும் முஸ்லீமுக்கும் திருமணம் நடத்தட்டும்


lana
ஆக 26, 2025 14:27

கருமம் டா. நாட்டில் உள்ள உழைப்பாளர்களின் பிரச்சனை க்கு வாய் மூடி இருப்பது. தேவை இல்லா விஷயம் இல் பேச வேண்டியது. உங்கள் கூட்டணியில் உள்ள கட்சி கிட்ட சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பற்றி பேசாமல் இப்பொழுது அதிலும் காசு பார்க்கலாம்.


surya krishna
ஆக 26, 2025 09:14

திமுகவுடன் தேர்தல் கமிஷன் 25 கோடி வாங்கியது பத்தவில்லை. இப்போது புது வியாபாரம் செய்ய முற்படுகிறார்கள்


Mani . V
ஆக 26, 2025 05:44

அது ஒன்னுமில்லை. அவர் மாமா மட்டும்தான். நாங்கள் புரோக்கர் மாமாக்கள் என்று உண்மையை ஒத்துக் கொண்டு உள்ளார்கள். இனி இவர்கள் கக்கத்தில் வெத்தலைப் பெட்டி, கையில் கம்பு, அப்புறம் டார்ச் அல்லது லாந்தர் வைத்து இருப்பார்கள். இவர்கள் புண்ணியத்தில் இனி கள்ளக் காதல் கொலைகள் குறையும். சார் ஓலோ மாதிரி ரூம் மணிக்கணக்கில் கிடைக்குமா?


Padmasridharan
ஆக 26, 2025 05:08

கொலைகாரனை தைரியமாகக் கொண்டாடுகிற சூழல் ஏற்பட்டுள்ளதென்றால் காரணகர்த்தாக்கள் யார் சாமி, சமூகத்தை பாதுகாக்க வேண்டிய காக்கி உடை காவலர்களைதானே. நல்லத கெட்டதாக்கி, கெட்டவங்க கிட்ட பணம்/பொருள் அதிகார பிச்சையெடுப்பதனால்தானே, கம்பீரத்தோடு தைரியமா உண்மையா வேலை செய்யாம போலித்தனமா அசிங்கமா கோழையா மக்கள ஏமாத்த பயன்படுத்தறாங்க. காவலர்கள் பண்ற எல்லா தப்புகளுக்கும் கட்சிகளை உபயோகிப்பது நல்லதல்ல


D Natarajan
ஆக 26, 2025 04:47

அருமை. உண்டியல் கட்சியின் புதிய அறிவிப்பு. ஒரு திருமணத்திற்கு 10000 ரூபாய் வசூலிக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை