உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் டாப் 10 மாவட்டங்களில் மதுரை முதலிடம்

ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் டாப் 10 மாவட்டங்களில் மதுரை முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் 'டாப்' 10 மாவட்டங்களில் மதுரை முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் 394 கிராமங்களில் தென்மாவட்டங்களில் மட்டும் 171 கிராமங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு போலீஸ் சமூகநீதி மனிதஉரிமை பிரிவு தெரிவித்துள்ளது.இந்தாண்டு மார்ச் வரை போலீஸ் சமூகநீதி மனித உரிமை பிரிவு அறிக்கைபடி, தமிழகத்தில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படும் என அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 394. இதில் 45 கிராமங்களுடன் மதுரை முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக 29 கிராமங்களுடன் திருநெல்வேலி, 24 கிராமங்களுடன் திருச்சி 3வது இடம், 22 கிராமங்களுடன் தஞ்சாவூருக்கு 4வது இடம், 20 கிராமங்களுடன் தேனி 5வது இடத்தில் உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இப்பிரிவு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினாலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 335 கூட்டங்கள் நடத்தினாலும் ஜாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விபரங்களை பெற்றுள்ள மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் நமது நிருபரிடம் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்தாண்டு விழிப்புணர்வு கூட்டங்கள் அதிகம் நடத்தப்பட்டன. ஆனாலும் வன்கொடுமைகள் நடக்கும் கிராமங்களை சமூகநல்லிணக்க கிராமங்களாக மாற்றமுடியாத சூழல் நிலவுகிறது. இதற்கு தீர்வுகாண ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை, போலீஸ் சமூக நீதி மனிதஉரிமைகள் பிரிவு, சமூக நலத்துறை இணைந்து ஜாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். அடையாளப்படுத்தப்பட்ட 394 கிராமங்களில் 'ரோல் மாடல்' நல்லிணக்க கிராமங்களை உருவாக்கி ஊக்கப்பரிசு வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
செப் 26, 2024 17:06

ஜாதிய கொடுமைகள் 1000 வருடத்திற்கு முன்னால் நடந்திருக்கும், அப்போது தெரிந்தது நிலம் வீடு பணம் இன்று அப்படி அல்லவே அல்ல. இன்று எல்லோரும் நன்றாக படித்து மேலே வருகின்றனர் அப்போது ஜாதி பிரச்சினை வருவதேயில்லை வெறும் பணம் ஒன்று தான் பிரச்சினை பணம் / பதவி பெரிய அளவில் இருக்கும் போது நீ அந்த ஜாதியாக இருந்தும்???எவ்வளவு உயர்வில்???எவ்வ்ளவு தாழ்வில் என்று மனதில் உருட்டு உருட்டு என்று உறுத்தும் அவ்வளவே. ஜாதி பிரச்சினையை கொண்டு வருவது வெறும் அரசியல்வியாதிகள் தான் தங்களுக்கு வரும் பதவியை சாதகமாக்கிக்கொள்ள அதை ஊத்தி ஊத்தி ஊதி பெரிதாக்குகின்றார்கள். நான் படிக்கும்போது எல்லா ஜாதியும் தான் என்னுடன் படித்தார்கள் நான் எல்லோருடனும் என்னுடன் எல்லோரும் ஜாதி விவாதமற்று பழகினோம். கோபத்தில் திட்டும் போது ஜாதி பெயரை சொல்லி திட்டினால் அது எப்படி ஜாதி பிரச்சினை ஆகும்???அது கோபத்தில் வரும் சொல். ஜாதி பிரிவினை என்ற சொல்லை சொல்லி பிரிவாக்குவது தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்று நினைக்கும் போது மட்டும் தான் அதுவும் கேவலமான திருட்டு திராவிட மற்றும் காங்கிரஸ் .......போன்ற கீழ்த்தரமான அரசியல் வியாதிகள் தான் வேறு யாரும் ஜாதி பிரிவினையை இந்து மதத்திற்குள் அவ்வளவாக பார்ப்பதேயில்லை


KayD
செப் 26, 2024 15:20

எல்லா சினிமாலயும் மதுரை ல தானே எல்லா ஜாதி ய பிரிச்சு meinji எடுத்து படம் kaatitu இருக்காங்க... நெருப்பு இல்லமா la புகை வர போகுது..


Shekar
செப் 26, 2024 10:13

ஜாதியா? தமிழ்நாட்டிலா? சான்சே இல்லை. அதை எங்க ஈரோடு வெங்காயம் ஒழிச்சி வச்சி ரெம்பகாலம் ஆயிருச்சு.


நிக்கோல்தாம்சன்
செப் 26, 2024 05:51

குடிநீரில் பீ கலந்த கிராமம் எந்த மாவட்டத்தில் இருக்கு ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை