உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மசினகுடியில் 55 ஊர்வன, 39 நீர் வாழ்விகள்; கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு

மசினகுடியில் 55 ஊர்வன, 39 நீர் வாழ்விகள்; கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலுார் : முதுமலை, மசினகுடியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 55 ஊர்வன மற்றும் 39 நீர் வாழ்விகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு பணி

முதுமலை மசினகுடி கோட்டத்தில் வனவிலங்குகள், பறவைகள், அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகள், பறவைகள், புலி உள்ளிட்ட மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.இந்நிலையில், முதுமலை மசினகுடியில் கடந்த மாதம், 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஊர்வன மற்றும் நீர்வாழ்விகள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது.முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் தலைமையில், ஆய்வாளர்கள் சுஜித், கோபாலன், ஷெர்ஜின் மற்றும் வன சரகர்கள், வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதன் கணக்கெடுப்பு முடிகளை வனத்துறையினர் வெளியிட்டனர்.அதன்படி, கடந்த மாதம் நடந்த கணக்கெடுப்பில், 33 வகையான ஊர்வன; 36 வகையான நீர் வாழ்விகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த மாதம் மற்றும் ஏற்கனவே, நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில், மசினகுடியில், 55 ஊர்வன மற்றும் 39 நீர்வாழ்விகள் இருப்பது தெரியவந்துள்ளது.அதில், 40 சதவீதம் மேற்கு தொடர்ச்சி மலையை வாழ்விடமாக கொண்டவை. மேலும் இங்கு அச்சுறுத்த கூடிய, 16 இனங்கள் அழியும் நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த கணக்கெடுப்பு முடிவுகள் மூலம், பல அரிய வகை ஊர்வன மற்றும் நீர் வாழ்விகளான, பல்லிகள், தவளைகள், பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை, எதிர்கால ஆராய்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை