உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வுடன் உடன்படவில்லை என்கிறார் மா.கம்யூ., சண்முகம்

தி.மு.க.,வுடன் உடன்படவில்லை என்கிறார் மா.கம்யூ., சண்முகம்

கோவை: போராடுவோர் மீது போலீசார் வாயிலாக, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த மா.கம்யூ., கூட்டத்தில், அவர் பேசியதாவது: தி.மு.க.,வோடு உடன்பட முடியாத பல்வேறு விஷயங்கள் எங்களுக்கு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகையை உயர்த்தக்கோரி, போராடியவர்கள் மீது போலீசாரின் நடவடிக்கையை, நாங்கள் கடுகளவும் ஏற்கவில்லை. இதற்கு காரணமான, காவல்துறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடுபவர்கள் மீது, தற்போது சென்னை போலீசார், புதுவித நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கைது செய்து, மண்டபத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்லாமல், வேனில் அமர வைத்து, நாள் முழுதும் சென்னையை சுற்றி வருகின்றனர். இயற்கை உபாதை கழிக்க, உணவு உண்ண, தண்ணீர் குடிக்க அனுமதிக்காமல், மாலை, 6:00 மணிக்கு ஏதாவது ஒரு இடத்தில் இறக்கி விட்டு விடுகின்றனர். இதை கண்டிக்க வேண்டிய தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் மவுனமாக இருப்பது சரியா? போராடும் உரிமையை, அரசியல் சாசனம் அளித்திருக்கிறது. போராடுபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதை மீறி, காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டால், மா. கம்யூ., கண்டன குரல் எழுப்பும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sur
பிப் 21, 2026 16:25

ஸ்டாலின் அண்ணே ! என்னய மன்னிச்சிருங்கண்ணே! சும்மா வெறும் அறிக்கைதாண்ணே! இத மனசுல வச்சுக்கிட்டு நீங்க பாட்டுக்கு பெட்டிய குறைச்சிராதீங்கண்ணே!


ஆரூர் ரங்
பிப் 21, 2026 15:37

ஜாக்கிரதையா பேசுங்க. அப்புறம் இருக்கும் உண்டியலயும் பிடுங்கிக்கிட்டு அனுப்பிட போறாங்க.


அருண் பிரகாஷ் மதுரை
பிப் 21, 2026 14:28

செய்யச் சொல்லும் முதல்வரும் தமிழக அரசும் எப்படி கண்டிக்க முடியும்.. போராட்டம் செய்வது காவல் துறைக்கு எதிராகவா இல்லை அரசுக்கு எதிராகவா.. அப்பாடா இது உலக நடிப்புடா சாமி..


அருண் பிரகாஷ் மதுரை
பிப் 21, 2026 14:26

இப்போ கூட கண்டனக் குரல் எழுப்புவோம் என்றே கூறுகிறார்..ஒரு போராடும் கட்சி தொடை நடுங்கி கட்சியான கதைதான் தமிழக கம்மிகள் கதை..


Haja Kuthubdeen
பிப் 21, 2026 10:25

சும்மாச்சுக்கும் நடிக்காதே...நாடகம் ஊருக்கே தெரியும்.


சந்திரன்
பிப் 21, 2026 09:28

ஈயம் பூசினது மாதிரி இருக்கனும் இல்லைனா சோறு கிடைக்காது


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 21, 2026 07:52

தேமுதிக உள்ளே வந்ததால் நம்ம கோட்டாவுல கை வெச்சிராதிங்க..... எச்சரிக்கை அலாராம்....!!!


சாமானியன்
பிப் 21, 2026 06:40

போராட்டத்திற்கு முதல் நாள் உபவாசம் இருக்கவும். மலஜலம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் வராது.


கண்ணன்
பிப் 21, 2026 05:45

என்ன, உண்டியல் நிரம்பவில்லையா, இன்னும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை